இடுகைகள்

அன்புள்ள அப்பா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூகநீதி பேசும் சமதர்ம நாயகர்கள்! - அன்புள்ள அப்பாவுக்கு..!

படம்
pexels 5 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? ராமகிருஷ்ண மட மருத்துவமனையில் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி நம் வீட்டிற்கு வரும். உங்கள் பெயரிலேயே இதழ் வரும். சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது. உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில் நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். தலித் முரசு பணம் வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும்,  அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள். பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. ச.அன்பரசு 6.3.16

நண்பனுக்கு கூறாத விளக்கம், எதிரி ஏற்காத உண்மை! - அன்புள்ள அப்பாவுக்கு

படம்
pexels 4 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? வேலை என்பதைப் பொறுத்தவரை நான் ஈடுபாட்டோடு செய்கிறேன். ஆனால் மயிலாப்பூரிலிருந்து கே.கே.நகர் சென்று சேர்வது மோட்சத்திற்கு தவம் இருப்பது போலவே இருக்கிறது. மாலையில் 12ஜி பஸ்ஸில் ஏறுவது அய்யப்பசாமியின் கோவிலின் பதினெட்டாம் படி ஏறுவது போலவே இருக்கிறது. அவ்வளவு கூட்டம். உடுப்பி பஸ் ஸ்டாப்பில் இறங்கும்போது, நான்கு பேர் சுற்றி நின்று அடித்து உதைத்தது போல உடல் வலிக்கிறது. துயரம்... தூங்குவதற்காக இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டுமா என்று இருக்கிறது. அலுவலகத்திற்கு பக்கத்தில் அறையை எடுப்பது புத்திசாலித்தனம். இங்குள்ள பரத் என்ற பிராமணர் மட்டுமே நெருக்கமான நண்பர். பிற ஆட்கள் எல்லாம் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாருடனும் என்னால் ஒட்ட முடியவில்லை. சம்பளம் வந்ததும் உங்களுக்கு பணம் கட்டி முத்தாரம் இதழ் வரும்படி செய்கிறேன். இந்த புத்தகம் பெரு நகரங்களில் உள்ள கடைகளில்தான் கிடைக்கும். இருமாதங்களுக்குப் பிறகு நான்கு நாட்கள் லீவு போட்டுவிட்டு ஊருக்கு வர நினைத்துள்ளளேன். மஞ்சள் காமாலைக்கான சோதனை இன்னும் முடியவில்லை. இதன

யாருடைய சிபாரிசு நீங்க? - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
3 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலந்தானே? தினகரனில் இணைந்துவிட்டேன். இங்கு சம்பளக்கணக்கு தொடங்குவதற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. தலித் முரசு இதழில் வரவேண்டிய பாக்கி 2.796 ரூபாய் உள்ளது. இதற்காக அவர்களது அலுவலகம் சென்றேன். நீங்கள் எங்கள் கணினிகளை உங்களது உபயோகத்திற்காக தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றார் தலித் முரசு புனித பாண்டியன். இதைக் கண்டுபிடித்து சொன்னதற்காக நெடுஞ்செழியன் பெண் உட்பட பலரது பெயரையும் சொன்னார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். கொடுத்த  பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். இவர்களுக்கு வேலை ஆகவேண்டுமென்றால், என்ன சாதி என்பது வரை கேட்டுக்கொண்டு இளிப்பார்கள். தேவையில்லை என்றால் மயிரே என்று மதித்துப் பேசுவது. சமூகநீதியே இவர்களின் கரங்களில்தான் இருக்கிறது. என்னை கோபப்படுத்திப் பார்க்க முயன்றார்கள். நான் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த வில்லை. இந்த யுக்தியை எல்லாம் வேலை செய்த காலத்திலேயே பார்த்தாகிவிட்டது. முத்தாரத்தில் என்னைப் பார்த்து பேசுகிற பலரும், யாருடைய சிபாரிசு என குறுஞ்சிரிப்புடன் கேட்கிறார

சுத்தம் பார்த்தால் சோறு கிடைக்காது! - அன்புள்ள அப்பாவுக்கு...!

படம்
pexals 2 அன்புள்ள அப்பாவுக்கு, அன்பரசு எழுதுவது.  நலமாக இருக்கிறீர்களா? தங்களுக்கு தொண்டைவலி என்று அம்மா பேசும்போது சொன்னார். சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை அருந்துங்கள். சரியாகிவிடும். இங்கு அலுவலக சூழல் பரவாயில்லை. உடல்நிலை ஒத்துழைக்க வேண்டுமே என்பதுதான் இறைவனிடம் என் வேண்டுதல். கொரியர் அனுப்புவதில் நான் செய்த பிசகு, நீங்கள் இருமுறை அலைவது போல ஆகிவிட்டது. சான்றிதழ்களை வங்கிக்கு கொடுத்தால்தான் சம்பளக் கணக்கு தொடங்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட பதற்றம்தான் இப்பிரச்னைக்கு காரணம்.  சென்னையில் சமாளித்து வாழ்வதற்கான சம்பளத்தை இந்நிறுவனத்தில் நான் பெறவில்லை. தடுமாற்றம்தான். அதிலும் ஒரு மகிழ்ச்சி, நீங்கள் அனுப்பி தந்த 5 ஆயிரம் ரூபாய்தான். எனக்கு பெரும் உதவியாக இருந்தது. மதியம் தேடிப்பிடித்து வெரைட்டி ரைஸ் சாப்பிடுகிறேன். சுத்தம் என்பதை மறந்துவிட்டால் மட்டுமே இங்கு சாப்பிட முடியும். இரவு வீடு திரும்ப 8.30க்கு மேல் ஆகிறது. எதையும் கவனமாக படிக்க முடியவில்லை. சனியன்றும் அலுவலகம் உண்டு. அன்று அரைநாள் வேலை. தலித் முரசு பத்திரிகையில் எனக்கு வரவேண்டிய

அப்பா, நான் உங்களை புறக்கணிக்கவில்லை! - அன்புள்ள அப்பாவுக்கு!

படம்
pexals 1 அன்புள்ள அப்பாவுக்கு,  அன்பரசு எழுதுவது, தாங்கள் நலமாக இருக்கிறீர்களா? மஞ்சள் காமாலை பாதிப்பு இன்னும் முழுதாக நீங்கவில்லை. உடல் சோர்வும், மனச்சோர்வும் வாட்டுகிறது.  தினசரி சாப்பிடுவதற்கு முன்னதாக அறையில் கீழாநெல்லி பொடியை நீரில் கலக்கி குடித்து வருகிறேன். என்ன பலன் கிடைக்குமோ தெரியவில்லை. அறையில் சமையல் செய்யும் முயற்சிகள் மிக தூரத்தில் தெரியும் விளக்கு போலவே என்னை இன்னும் ஈர்த்துவருகிறது. ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. காரணம் எனது அலுவலகப் பணிகள்தான்.  காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டு சிறிதுநேரம் படிப்பேன். பிறகு, டீ குடிக்க ஜனா அண்ணனோடு செல்வேன். அவர் உறுதியாக டீ குடிப்பாரா என்று எனக்கு தெரியாது. காரணம், க்ரீன் டீ என டெட்லி டீ பாக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தார். அது அவரின் ஸ்டைல். விஷயத்திற்கு வருகிறேன். ஏழரை மணிக்கு வரும் 12 ஜியில் ஏறிவிடுவேன், மலம் கழிப்பது கூட தினகரன் அலுவலகத்தில்தான். எங்கள் அறையில் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டைப் பார்ப்பது பாலைவனத்தில் பிஸ்லரி வாட்டர் பாட்டில் கிடைப்பதை விட அரிதானது. நீங்கள் மருத்துவமனையில் மனம் கலங்கியபடி ப