இடுகைகள்

சோறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறையில் சுயாதீனச்சமையல் செய்தபோது - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! சுயாதீன சமையல் மயிலாப்பூரில் நீங்கள் கரண்டி பிடிக்காமலிருக்க நிறைய இதயங்கள் உதவும். ஜன்னல் கடை, பாரதி மெஸ், தேரடி பஜ்ஜிக்கடை, காளத்தி ரோஸ்மில்க், செந்தில்நாதன் மெஸ் என நிறைய உணவுக்கடைகளும், தின்பண்டக் கடைகளும் நிறைந்துள்ளன. எல்லாம் எதற்கு வாங்கித் தின்று இந்தியாவை வளர்த்தத்தான். டீ என்ற வார்த்தையை இங்கு கேட்க முடியாது. எங்கெங்கு காணினும் காபிதான். மகாத்மா காந்தி சிலையை ஒட்டி இப்போது கோத்தாஸ் காபிக்கடை வேறு தொடங்கியிருக்கிறார்கள். அம்பிகா சிறப்பங்காடியை ஒட்டி இயங்குவது லியோ காபி, முதலில் மோசமாக இருந்த காபி நேற்று குடித்தபோது இனித்தது. உபயம் யார் நமது தினகரன் குழும முன்னாள் தாயாதிகள்தான். வந்த நண்பர்களுக்கு  மயிலாப்பூரை கிரிவலம் கூட்டிச்சென்றேன். ஒருகட்டத்தில் நண்பர்,  தம்பி எங்களை எங்கே கூட்டிட்டிப்போற என்றார். ரைட் அதுதான் நான் விடைபெற்றுக்கொள்ளும் இடம் கூட. கபாலி காலில் விழுந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்ணே என்று சொல்லி கைகுலுக்கு ஜப்பானிய முறையில் இடுப்பு வளைத்து வணங்கி விடைப்பெற்றேன். ஜப்பானிய முறை வணக்கம் சிறப்பானதுதான். ஆனால் என்னவோ இம்முறையி

லவ் இன்ஃபினிட்டி: சோறு முக்கியம் ப்ரோ!

படம்
etsy/pinterest 22 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: லவ் ரஞ்சன். சதீஸ் நிர்வானா வினோத் நல்லவர்தான். ஆனால் தான் இப்படி இருக்கிறோமே என்று நினைக்கும்போது பொங்கி விடுவார். கூட நாம் இருந்தால் எரிமலை லாவா நம்மீது கொட்டிவிடும் இல்லையா? அதேதான் நடந்தது. எனக்கு எப்போதும் சாப்பாடு என்பதைவிட படிப்பு என்பது மீது தனிக்கிறுக்கு இருந்தது. அதற்காக வேலராம மூர்த்தி, பூமணி என்று யோசிக்காதீர்கள். நண்பர்கள் கொடுப்பதை எனக்கு படிக்கலாம் என்று நம்பிக்கை தரும் நூல்களை படிப்பேன். இதனால் ஏற்படும் அவமானங்களை, கிண்டல்களைப் பற்றியெல்லாம் அணுவளவும் கவலைப்படாதிருந்தேன். அது அப்போது. அன்று நன்றாகத்தான் விடிந்தது. சரியாக வியாழக்கிழமைகளில் அதுவும் ஒன்று. நான் கையில் இருந்த வேலை செய்து கிடைத்த பணத்தை சாப்பிட்டு, டீ குடித்தும் கரைத்திருந்தேன். கூடவே தங்கியிருந்த வினோத் அண்ணாவின் நண்பர், சாரங்கிநாதன். என்ன வேலை, ஏதோ பிசினஸ் செய்து நஷ்டமாகி விரக்தியில் இருந்தார். அங்கே வினோத் அண்ணாவின் வீட்டில் ஒருவாரமாக டென்ட் அடித்துவிட்டார். என்னைப்போலவேதான். ஆனால் முடிந்தவரை ஒரு வார்த்தை பேசுகிறாரா