இடுகைகள்

எழுத்தாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களின் மனதைப் புரிந்துகொள்ள உதவிய எழுத்தாளர்களின் கருத்துகள்! - கடிதம் - கதிரவன்

படம்
  30.10.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல். தி.நகரில் நல்ல கூட்டம். சூப்பர் மார்க்கெட்டிலும் கூட மக்கள் திரள் அதிகம். இன்று குங்குமம் வார இதழில் தலைமை உதவி ஆசிரியர் த.சக்திவேலைப் பார்த்தேன். வடபழனியிலுள்ள அவரது அறையில் சந்தித்தோம். ஸ்குயிட் கேம் 2 எபிசோடுகளைப் பார்த்தோம். கொரிய இயக்குநர் வெப் தொடரை உளவியல் புரிதலோடு நன்றாகவே எடுத்திருக்கிறார்.  வன்முறை அதிகம் என்பதால் பலரும் பார்க்கத் தயங்கலாம். சக்தி சாருக்கு அலுவலகத்தில் புதிதாக ஹெச்பி கணினி வாங்கித் தந்திருப்பதாக சொன்னார். கடந்த இருவாரங்களாக சனிக்கிழமை மட்டும் கூடுதலாக விடுமுறை எடுத்துவிட்டேன். ஆபீஸ் சென்று மோசமான மனிதர்களை சந்திப்பதே சலிப்பூட்டுகிறது. ஏதாவது படிக்க நினைத்தேன். நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வது முக்கியம் அல்லவா? எங்களது நாளிதழ் எட்டாம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன். முதல் வாரத்திற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன்.  இந்த முறை எனக்கு பக்கம் கூடியிருக்கிறது. எனவே, வேலைச்சுமையும் கூடுதல்தான். ஒவ்வா

எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் பற்றிய ஐந்து விஷயங்கள்!

படம்
பிரிட்டிஷ் லைப்ரரி சார்லஸ் டிக்கன்ஸ் டிக்கன்ஸ் தொடக்க காலத்தில் எழுதிய படைப்புகளை போஸ் (boz) என்ற புனைப்பெயரில் எழுதினார். இந்த பெயர் அவரது சகோதரரின் மோசஸின் பெயரில் இருந்து உருவானது. சளிபிடித்திருக்கும்போது மோசஸ் என்றால் போசஸ் என்று வார்த்தை வருவதை நையாண்டி செய்து இந்த பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார். டிக்கன்ஸின் அப்பா, ஏராளமான இடத்தில் கடன் வாங்கிவிட்டார். அதனைக் கட்டமுடியாமல் தவித்தார். இதனால் டிக்கன்ஸின் 12 ஆம் வயதில் அவரது முழு குடும்பமே சிறைக்கு செல்ல நேரிட்டது. அப்போது வீட்டில் மிஞ்சியவர்கள் டிக்கன்சும், அவரது சகோதரியும்தான். சிறுவயதில் டிக்கன்சுக்கு காக்கை வலிப்பு பாதிப்பு இருந்தது. இதனை அவர் எழுதிய ப்ளீக் ஹவுஸ், ஆலிவர் ட்விஸ்ட், அவர் மியூசுவல் பிரெண்ட் ஆகிய கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் காணலாம். டிவி தொடர்களில் தொடரும் போடுவதற்கு முன்பு அதிர்ச்சியான சம்பவத்தை காட்டுவார்களே அதேபோல்தான் டிக்கன்ஸ் இயங்கினார். ஒரு நாவலை பல்வேறு அத்தியாயங்களாக எழுதி அவ்வப்போது வெளியிட்டார். ரசிகர்கள் அவரது நூலைப்படிக்க காத்திருக்க வேண்டும் என்ற டிக்கன்ஸ் விரும்பினார்.   டிக்கன்ஸ் இறக்கும

தனிமைப்படுத்தலால் பிரபலமான எழுத்தாளர்கள்!

படம்
giphy நோய் தாக்காமல் தனியாக இருக்கச்சொல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. உற்சாகமாக வேலை பார்க்கும் மனிதர்களையும் இந்த காலகட்டம் சோம்பேறிகளாக்கி விடக்கூடும். இதனால் இப்படி நோய் பரவிய,  போர் காலகட்டங்களில் சாதனைகள் படைத்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் பற்றிய செய்திகள் இதோ.. ஷேக்ஸ்பியர் தனது கிங் லியர் எனும் படைப்பை எழுதும்போது நோய்களுக்கு பயந்து தனிமையில் இருந்தார். அப்போது வெளியில் பிளேக் நோய் வேகமாக பரவி வந்தது. அப்பாதிப்பிலிருந்து தப்பிக்க நினைத்தார் ஷேக்ஸ்பியர். அப்போது அரசு பொது இடங்கள் அனைத்தையும் மூடியிருந்தது. இதனால் இவர் பங்குதாரராகவும், எழுத்தாளராகவும் இருந்த கிங் நாடக கம்பெனியை நடத்த முடியவில்லை. இக்காலகட்டத்தில் கிங் லியர், மேக்பத், ஆன்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகிய படைப்புகளை எழுதி முடித்தார். ஐசக் நியூட்டன்  இவர் ஷேக்ஸ்பியருக்கு பின்னர் இதே போல தனியாக இருந்து அறிவியல் சாதனைகளை செய்தார். 1665ஆம்ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்த ஐசக் நியூட்டனுக்கு சோதனை பிளேக் வடிவில் வந்தது. அப்போது அவருக்கு இருபது வயது. கேம்பிரிட்ஜ் பல்கலையில் வகுப்புகள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்த

முக்கியமான எழுத்தாளர்கள்!

படம்
giphy உலகில் உள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களின் அணிவரிசை இது.  21ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாவல்கள், கட்டுரைகளை எழுதியவர்கள் இவர்கள். இசபெல் அலாண்டே  1982ஆம் ஆண்டு இசபெல் அலாண்டே எழுதிய ஹவுஸ் ஆஃப் ஸ்பிரிட்ஸ் என்ற நாவல் இவரின் பெயரை உலகிற்குச் சொன்னது. மேஜிக்கல் ரியலிசம் என்ற வகையில் தாத்தாவுக்கு பேத்தி எழுதும் கடிதமாக நாவல் விரியும். இந்த வடிவத்தில் சிலியின் வரலாற்றை இந்த நூல் பேசியது.  இதற்கடுத்து 2002இல் வெளியான சிட்டி ஆஃப் பீஸ்ட் என்ற நாவல் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்ற நூலாகும். மார்க்கரேட் அட்வுட்  கனடிய எழுத்தாளர் மார்க்கரேட் கவிதை, நாவல், கட்டுரை ஆகியவற்றுக்கு புகழ்பெற்றவர். இவரது புகழ்பெற்ற நூல்கள்  " Oryx and Crake " (2003), "The Handmaid's Tale" (1986), and "The Blind Assassin" (2000).  ஜொனாதன் ஃபிரான்சன் குடும்ப உறவுகள், சமூக விமர்சனம் என்றே இவரது நாவல்கள், கட்டுரைகள், நியூயார்க்கரில் எழுதும் பத்தி எழுத்துகள் அமைந்துள்ளது. தி கரக்ஷன்ஸ் என்ற நாவல் 2001ஆம் ஆண்டு தேசிய புத்தக விருது வென்றது. இயான் மெக்ஈவன் இவர் எழுத

தமிழ் சினிமாவும் நாவல்களும்! - ஒரு அலசல்!

படம்
எழுத்தாளர் பூமணி வெற்றிமாறன் அசுரன் படத்தை வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுத்து ஜெயித்துவிட்டார். உடனே டெலிகிராம் குழுக்கள் முழுக்க விழிப்புணர்வு பெற்று நூலை பீடிஎஃப்பாக படித்தே ஆக வேண்டும் என இறங்கிவிட்டனர். வெற்றிமாறன் தன் விசாரணை படத்தை லாக்கப் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இயக்கினார். நாவல்கள் எல்லாம் வேண்டாம் என கொரிய படங்களை மூலமாக வைத்து மிஷ்கின் போன்றோர் துப்பறிவாளன், முகமூடி என படமாக்குகின்றனர். நாவல்களை படமாக்குவது புதிதல்ல. பாலச்சந்தர் எழுத்தாளர் சிவசங்கரியின் 47 நாட்கள் நாவலை படமாக்கியிருக்கிறார். இவரது ஒரு சிங்கம் முயலாகிறது என்ற கதையை முக்தா சீனிவாசன், அவன் அவள் அது என படமாக்கினார். 1970 காலகட்டத்தில் ஜெயகாந்தன், சிவசங்கரி, அனுராதா ரமணன் ஆகியோரின் நாவல்களைத் தழுவி நிறைய படங்கள் வெளியாகின. அக்காலகட்டம் குடும்பம், காதல், முரண்பாடுகள், சீர்திருத்தம், மரபுகளை மீறுதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதைகளுக்கு வரவேற்பு இருந்தது. எழுத்தாளருக்கும், அதை படமாக தழுவி எடுக்கும் இயக்குநருக்கும் கருத்து ஒற்றுமை அவசியம். இல்லையென்றால் நாவல் படமாக உருவாகாது. அப்படி