இடுகைகள்

தொலைத்தொடர்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோக்கத்தை தொலைத்தால் அவ்ளோதான்!

படம்
  ஐரோப்பிய பாணி ஹூவெய் அலுவலகம், டாங்குவான் நகரம், சீனா 2019 படி படம் - LA Times தொழிலைத் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தொழில் முதலீடு என்பது பல்வேறு வாய்ப்புகளைக் காட்டும். இதில் சரியாக மனதை கட்டுப்படுத்தி செயல்படாதபோது சூதாட்டத்தில் இந்த முறை இந்தமுறை என அனைத்து பணத்தையும் சூதாடி தொலைப்பது போன்ற சூழல்தான் உருவாகும்.   இதைப்பற்றி ரென், நான் லாஸ் வேகாஸ் நகருக்கு செல்வேன். சூதாட்ட கிளப்புகளுக்கு சென்றால் கூட அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவே செல்வேன். நான் சூதாடியது கிடையாது. அப்படி மனம் விரும்பினாலும் அதை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று சொன்னார்.   சீனாவில் யூடிஸ்டார்காம் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் இருந்தது. அப்போது ஜப்பானில் நடைமுறையில் இருந்த பிஹெச்எஸ் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை வழங்கியது.சீனாவில் பிஹெச்எஸ் தொழில்நுட்பம் புதிது, போட்டி  நிறுவனங்கள் இல்லை ஆகிய காரணங்களால் நன்றாக இயங்கியது. ஆனால் ஆராய்ச்சி, புதுமை இல்லாத காரணத்தால் கிடைத்த லாபம் காலப்போக்கில் குறைந்து பத்தாண்டுகளுக்குள் நிறுவனம் நஷ்டத்தில் வீழ்ந்து மூடப்பட

வாடிக்கையாளர்களை உருவாக்குவதே நிறுவனத்தின் சாமர்த்தியம்!

படம்
  வாடிக்கையாளர் தான் தெய்வம்!   அண்மையில் ஊடகவியலாளர் கோகுலவாச நவநீதன் ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர்களே தெய்வம். தெய்வத்திற்கு கடன் கொடுக்கும் தகுதி எனக்கில்லை எழுதியிருந்தது. இந்த வாசகத்தை எளிமையாக கடன் கிடையாது என்று எழுதலாம். ஆனால்  என மளிகை கடைக்காரர் கிரியேட்டிவாக யோசித்து வாடிக்கையாளரையும் உயர்த்திப்பிடித்து, தனது கடன் கிடையாது கொள்கையையும் சொல்லிவிட்டார்.   ஹூவெய்யின் வணிக சூத்திரமே இதுதான். ரென்  நடத்தும் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை தொடர்பானது. தினசரி ஏராளமான கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் நடக்கும் துறை. இதில் எப்படி அவர் வாடிக்கையாளர்களை பொருட்படுத்தாமல் இருக்க முடியும். அப்படி செய்தால், அவரது நிறுவனம் விரைவில் வீழ்ந்துவிடும் அல்லவா? இந்த வணிக கொள்கைக்கு பெயர்தான் கஸ்டமர் சென்ட்ரிசிட்டி.   வாடிக்கையாளரின் சூழல், குணம், தேவை புரிந்து பொருட்களை தயாரித்து வழங்குவது. இதைத்தான் ஹூவெய் ரென் தனது ஊழியர்களுக்கு வகுப்பெடுத்து சொல்லித் தருகிறார். அதிக மாறுதல்களை சந்திக்காத அணுசக்தி துறையில் சில முதலீடுகளை ரென் செய்துள்ளார

தோல்வியைக் கண்டு பயப்படாத மனோபாவம்!

படம்
  தோல்வியை நோக்கி திட்டமிடுவோம்!   தலைப்பிலுள்ளதைப் போல ஒருவர் கலந்துரையாடலில் பேச முடியுமா? ரென் அப்படித்தான் பேசினார். எதிர்காலத்தில் ஒருநாள் நாம் தோல்வியை சந்திக்கப் போகிறோம். எனவே, முன்கூட்டியே நாம் அதற்கு தயாராக இருப்போம் என்று பணியாளர்களிடம் பேசினார்.   நடிகர்களைப் பற்றி உலகத்தமிழர்  தேசிய நாளிதழ்களில் என்ன எழுதுவார்கள்? அவரே தன் கையால் தானே சொகுசு கார் கதவைத் திறந்தார். அவரே சோடாவை தன் கையில் வாங்கிக் குடித்தார். பிரியாணி லெக்பீசை தன் வாயால் தானே மென்றார் என எழுதுவார்கள். ரென்னைப் பொறுத்தவரை இப்படி யாராவது நிறுவனரை அல்லது அதிகாரிகளை புகழ்ந்தால் வீட்டுக்குச் சென்று வேறு வேலையைத் தேடுங்கள் என அனுப்பிவிடுவார்.   ரென்னைப் பொறுத்தவரை தனது வேலைகளை தானே செய்வதுதான் அவருக்குப் பிடித்தமானது. மூன்றுமணிநேர விமானப் பயணம் என்றால் கூட அவருக்கு புத்தகம் ஏதாவது இருந்தால் போதும். அதைப்படிப்பார். இடையில் ஒரு முக்கல் முனகல் கூட இருக்காது. ஏதாவது சந்திப்பு இருந்தால், நகரிலுள்ள ஹூவெய் அலுவலகத்திற்கு கூட சொல்ல மாட்டார். நேரடியாக யாரை சந்திக்கவேண்டுமோ அங்கேயே வாடகை டாக்சியைப் பிடித்துப் போய்விடுவார்

6 ஜி இந்தியா! - இந்தியா தொலைத்தொடர்பு ஆய்வுகளில் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியம் என்ன?

படம்
          6 ஜி இந்தியா ! தொலைத்தொடர்பு துறை நாள்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வளர்ந்து வருகிறது . இதன்மூலம் அத்துறை மட்டுமன்றி , எளிய மனிதர்களின் வாழ்க்கையும் காலப்போக்கில் வளர்ச்சியடைகின்றன . வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை தொண்ணூறுகளில் யாரும் நினைத்து பார்த்திருக்கமுடியாது . ஆனால் பெருந்தொற்று காலத்தில் வளர்ந்துள்ள நவீனத் தொழில்நுட்பம் அதனை சாத்தியப்படுத்தியுள்ளது . தொண்ணூறுகளில் 2 ஜி தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர் . அந்த வளர்ச்சி , மெல்ல வளர்ந்து 5 ஜி , 6 ஜிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேலைநாடுகளில் அமைத்து வருகிறார்கள் . 5 ஜியின் வேகம் 1 Gbps (1000 Mbps) என இருக்கும் என டெக் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர் . 6 ஜி வேகம் 1 Tbps (1000 Gbps) ஆக இருக்கும் . எரிக்ஸன் , சாம்சங் , ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகி்ன்றனர் . இந்த அதிவேக இணைய ஆற்றலை எப்படி எதற்கு பயன்படுத்தலாம் ? அலுவலகம் சார்ந்த சந்திப்புகளுக்கு ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கு ஒருவர் அலைவது கடினம் . எனவே 5 ஜி , 6 ஜி தொழில்நுட்பம் மூலம் ஒரு இடத்தில் பே