இடுகைகள்

புதிய கண்டுபிடிப்புகள் 2018 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ப்ரெய்லி போன்!

படம்
ப்ரெய்லி போன்! துபாய் கிராட் ஷோவில் அறிமுகமான ப்ரெய்லி போன் அனைவரையும் கவர்ந்துள்ளது. தனது தாத்தா பார்வையிழப்பால் பொருட்களை கையாள தடுமாற, அவரது பேரன் ஆயுஷ்மான் தல்வார் அதற்கென ப்ரெய்லி போனை உருவாக்கியுள்ளார். போனின் கேஸ் போல உள்ள இதில் பின்புறம் பிரெய்லி எழுத்துக்கள் இருக்கும். “இந்தியாவில் 40 பேர்களிடமும், நெதர்லாந்தில் நூறுபேரிடமும் சோதித்துள்ளோம்” என புன்னகை பூக்கிறார் தல்வார். இந்த டிசைன் திருவிழாவில் நாற்பது நாடுகளிலிருந்து பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளை தரும் கருவிகளின் ஐடியாக்களை 200 க்கும் மேலான மாணவர்கள் காட்சிபடுத்தியிருந்தனர். சுமை பிரச்னையில்லை! அடுத்ததாக ரயிலில் சுமைகளை தூக்கும் போர்ட்டர்களின் முதுகெலும்பு பாதிக்கப்படுவதை தடுக்க ரிஷப் சிங் என்ற மாணவர் சகாயக் கருவியை உருவாக்கியிருந்தார். இக்கருவி சுமையை தலை, மூளைக்கு சமமாக பிரித்துதருகிறது.

இளைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்!

படம்
கிரியேட்டிவ் பொருட்கள்! மாசு குறைக்கும் சோப்பு! உலகில் தூய்மைப்பொருட்களுக்காக நீரினை எடுத்துச்செல்லும் போக்குவரத்து அதிகம். இதனால் அதிகரிக்கும் கார்பன் மாசை குறைக்க இளம் ஆராய்ச்சியாளர் மிர்ஜம் டி ப்ரூஜின்(Eindhoven Design Academy) 80% நீர் கொண்ட டிடர்ஜெண்ட், சோப்பு, ஷாம்பூ வகைகளை(Twenty) தயாரித்துள்ளார். மஸ்காரா அபாயம்! இங்கிலாந்தின் லாஃப்போரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான பிப்பா பிரிட்ஜஸ், காஸ்மெடிக்ஸ் உலகில் மஸ்காரா கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை குறைக்க முயற்சிக்கிறார். தீர்வாக ரீயூசபிள் மஸ்காராவை(Infinity mascara) கண்டுபிடித்துள்ள பிப்பா பிரிட்ஜஸ், அதனை ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரீபிள் செய்துகொள்ளலாம் என்கிறார். புற்றுநோய் பேனா! திசுக்களிலுள்ள புற்றுநோயை லிவியா எபர்லின் கண்டுபிடிப்பில் உருவான Masspec pen மூலம் பத்தே நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம். இதிலுள்ள வேதி திரவம் திசுக்களில் புற்றுநோய் பாதிப்பை கண்டுபிடித்து கூறுகிறது. கழிவு உரம்! சீனாவின் ஹூவாங்சாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸாங் லியே, பயிர்க்கழிவுகளை பயன்படு