இளைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்!









Image result for Masspec pen











கிரியேட்டிவ் பொருட்கள்!

மாசு குறைக்கும் சோப்பு!

உலகில் தூய்மைப்பொருட்களுக்காக நீரினை எடுத்துச்செல்லும் போக்குவரத்து அதிகம். இதனால் அதிகரிக்கும் கார்பன் மாசை குறைக்க இளம் ஆராய்ச்சியாளர் மிர்ஜம் டி ப்ரூஜின்(Eindhoven Design Academy) 80% நீர் கொண்ட டிடர்ஜெண்ட், சோப்பு, ஷாம்பூ வகைகளை(Twenty) தயாரித்துள்ளார்.

மஸ்காரா அபாயம்!

இங்கிலாந்தின் லாஃப்போரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான பிப்பா பிரிட்ஜஸ், காஸ்மெடிக்ஸ் உலகில் மஸ்காரா கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை குறைக்க முயற்சிக்கிறார். தீர்வாக ரீயூசபிள் மஸ்காராவை(Infinity mascara) கண்டுபிடித்துள்ள பிப்பா பிரிட்ஜஸ், அதனை ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரீபிள் செய்துகொள்ளலாம் என்கிறார்.

புற்றுநோய் பேனா!

திசுக்களிலுள்ள புற்றுநோயை லிவியா எபர்லின் கண்டுபிடிப்பில் உருவான Masspec pen மூலம் பத்தே நிமிடங்களில் கண்டுபிடிக்கலாம். இதிலுள்ள வேதி திரவம் திசுக்களில் புற்றுநோய் பாதிப்பை கண்டுபிடித்து கூறுகிறது.

கழிவு உரம்!

சீனாவின் ஹூவாங்சாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸாங் லியே, பயிர்க்கழிவுகளை பயன்படுத்தி பாலைவனத்தில் பயிர்களை வளர்க்கும் முயற்சி() செய்துவருகிறார்.
மேற்கண்ட கண்டுபிடிப்புகள் துபாயில் நடைபெற்ற குளோபல் கிராட் ஷோ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவை.  
 




பிரபலமான இடுகைகள்