சிரிக்க சிந்திக்க எல்ஜி நோபல்!




Image result for lg nobel





காமெடி நோபல் பரிசு!

1991 ஆம்ஆண்டு தொடங்கப்பட்டு எல்ஜி நோபல் பரிசு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அறிவியல் படைப்புகளுக்கானது. நிறுவனர் மார்க் ஆப்ரஹாம்ஸ்.

மருத்துவம்

உடலின் 3 லட்சம் சிற்றறைகளில் உருண்டோடி வந்து சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இச்செயல்முறையை வேகப்படுத்த மார்க் மிச்செல் மற்றும் டேவிட் வர்ட்டிங்கர் ரோலர் காஸ்டரில் பயணிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.

மானுடவியல்

சிம்பன்சிகள் மனிதர்களின் பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறது என்பது ஆராய்ச்சி. அப்படியெனில் சிம்பன்சி போல நடந்துகொள்ளும் மனிதர்களும் உண்டு என சீரியஸாக கிச்சு கிச்சு மூட்டுகிறது தாமஸ் பர்சென், கேப்ரியல் அலினா சாசியக் ஆகியோரின் ஆராய்ச்சி.

உயிரியல்

வைனில் விழுந்து கிடக்கும் ஈ, ஆணா, பெண்ணா என வாசனை வழியாக கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி. வைனில் விழும் பெண் ஈக்கள் பெரோமோன் எனும் மனிதர்கள் கண்டறிய முடியும் வாசனையை வெளியிடுகின்றன என்பதை கண்டறிந்துள்ளது பால் பெக்கர் குழு.

வேதியியல்

எச்சில் மூலம் அழுக்கான தரைகளை தூய்மையாக்க முடியுமா என்பதே ஆராய்ச்சி. வேதிப்பொருட்களை விட எச்சிலை பயன்படுத்தி துடைத்தால் சூழல் கெடாது என்பது பாலா ரொமாவோவின் கண்டுபிடிப்பு.