விண்வெளி சாதனைகள் 2018 - மறக்கமுடியாத முயற்சிகள்!






Image result for elon musk super car at space




விண்வெளியில் கார்


தொழில்துறை சூப்பர்ஸ்டார் எலன் மஸ்க், விண்வெளிக்கு காரை அனுப்பி சாதித்தார். டெஸ்லா ரோட்ஸ்டர் காரை பால்கன் ராக்கெட்டில் ஏற்றி விண்வெளிக்கு பார்சல் அனுப்பி பலரையும் பீதி கொள்ளச்செய்தார். கார் கவிழ்ந்துவிடவில்லை. இன்றும்  56, 237 கி.மீ வேகத்தில் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது.



ஜீன்களை மாற்றும் விண்வெளி

விண்வெளியில் வாழ்ந்த நாசா வீரர் ஸ்காட் கெல்லிக்கு உடலிலுள்ள மரபணுக்கள் மாற்றம் கொண்டன. அவர் விண்வெளியில் ஓராண்டு இருந்ததால் பூமிக்கு திரும்பியும் ஜீன்கள் 7 சதவிகிதம் மாற்றமின்றி அந்நிலையிலேயே இருப்பது கண்டறியப்பட்டது.


செவ்வாயில் நீர்

மூன்று ஆண்டுகள் விண்வெளியில் செவ்வாயை ஆராய்ந்த இத்தாலி விண்வெளி ஆராய்ச்சியாளர் அங்கு 20 கி.மீ நீளத்தில் உறைந்த ஏரி இருப்பதாக கூறி பலருக்கும் பிரமிப்பூட்டினார். அந்த இடம் மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் நீர் உறைந்துள்ளதை ஆய்வறிக்கைகள் உறுதி செய்தன.


சக்திவாய்ந்த ராக்கெட்

கடந்த பிப்ரவரியில் எலன்மஸ்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ், 27 எஞ்சின்களை கொண்ட திரும்ப பயன்படுத்தும் திறன் கொண்ட ராக்கெட்டை விண்வெளியில் ஏவியது. பயன்படுத்திய மூன்று பூஸ்டர்களில் இரண்டு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது. ஒன்று மட்டும் இலக்கு மிஸ் ஆகி, அட்லாண்டில் கடலில் விழுந்தது.


நியூட்ரினோ துகள்

அட்லாண்டிக் பகுதியில் நியூட்ரினோ துகள்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் கண்டறிந்து தெரிவித்தனர். இதன் பின்னணி விண்வெளியிலுள்ள கருந்துளை வரை நீண்டு ஆச்சரியம் தந்தது.


சூரியனைத் தொட்டோம்!

நாசாவின் பார்க்கர் சூரியனை ஆராய தில்லாக அனுப்பப்பட்டது. தற்போது பார்க்கர், சூரியனைச் சுற்றி 3,43,112.1 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. சூரியன் எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராய இம்முயற்சி உதவும். 19,99,982 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இடங்களிலும் பார்க்கர் சிறப்பாக வேலை செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


இன்சைட் ரோபோ

நாசாவின் அடுத்த சாதனை. இன்சைட் ரோபோ செவ்வாயில் இறங்கி சாதித்தது. குளிர்ந்த பாலைவனமான செவ்வாய் குறித்த புகைப்படங்களையும் ஆய்வுத்தகவல்களையும் அனுப்பியது.

நன்றி: பிஸினஸ் இன்சைடர்