பாலியல் தளங்கள் குடும்பங்களை சிதைப்பதில்லை!
முத்தாரம் Mini
நீங்கள் எழுதியுள்ள சைபர் செக்ஸி
நூலில் அதிகார கட்டமைப்பை பாலுறவு தகர்த்ததாக கூறியுள்ளீர்கள். கலாசார மதிப்பு கொண்ட
இந்தியாவில் அது எப்படி சாத்தியம்?
இந்தியாவில் கலாசார பெருமையை குடும்பங்கள்
அடைகாத்து வைத்திருந்தன. அவை பெண்களை இல்லத்தரசி என்ற பெயரில் ஆசைகளை மறைத்து வைத்திருந்தன.
அந்தரங்கமான ஆசைகள் விதிகளை மாறுவதாக மாறியதது இப்படித்தான். குடும்பங்களை பாலியல்தளங்கள்
குலைப்பதாக வரும் அவதூறு அதிகாரம் உடைபடும் தவிப்பினால் ஏற்படுவதுதான்.
உங்களது பாலியல் சிந்தனைகள் தெற்காசியாவின்
உயிரியல் சார்ந்த அணுகுமுறையை விட மேம்பட்டதாக உள்ளதே?
இந்தியாவில் கலாசாரம் சார்ந்ததாக
கல்வியை பார்க்கின்றனர். பாலியல் கல்வியை நாடு முழுவதும் அமுல்படுத்த அரசு சுதந்திர
சிந்தனையாளர்களின் மூலம் முயற்சிக்கவேண்டும். அரசின் ஒப்புதல்/தடை செய்யப்பட்ட ஆபாசம்
என்பதன் பொருள் என்ன? உங்களையும், உங்களது ஆசைகளையும் தவறு என்று கூறும் சட்டத்தால்
என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது?
தனிப்பட்ட மனிதரின் உரிமை, அரசியல்
ஏன் பிரச்னையாகிறது?
இந்த விவகாரத்தில் இரண்டும் பிரிக்க
முடியாத சிக்கல்களை கொண்டிருக்கின்றன.
-ரிச்சா கௌல் பட்டே, எழுத்தாளர்.