டெஃப்லான் பிறந்த கதை!








டெஃப்லான் கதை!

பாலிடெட்ராப்ளூரோ எத்திலீன்(PTFE) என்ற வேதிப்பொருள், ஈதர், அசிட்டேன், சல்ஃப்யூரிக் அமிலம் ஆகியவற்றில் கரையாது என்பதை 1908 ஆம் ஆண்டு ராய் ப்ளங்கெட் என்ற டுபான்ட் நிறுவன ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். குளிர்பதன வசதியை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் மெழுகு போன்ற தன்மையிலான வெள்ளைநிற பவுடரை கண்டுபிடித்தார் ப்ளங்கெட். இதனை அறிந்த ராணுவத்தலைவர் லெஸ்லி குரோவெஸ், ப்ளங்கெட் கண்டறிந்த PTFE யை இரண்டாம் உலகப்போரில் ராணுவத்துறையில் சீல்களுக்கும் கேஸ்கட்களுக்கும்(யுரேனியத்தால் பாதிக்கப்படாத தன்மையால்) பயன்படுத்த ஊக்குவித்தார். PTFE என்பது பிளாஸ்டிக் வகைகளில் ஒன்று.
1960 ஆம் ஆண்டு டெஃப்லான் என இதனை பெயரிட்டு வணிகப்படுத்த டுபான்ட் முனைய கீறல் விழாத எண்ணெய் அவசியமில்லாத நான்-ஸ்டிக் தவா உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள், கார்பெட், சூழலால் பாதிக்கப்படாத ப்ரூஃப் ஆகியவை மார்கெட்டில் உருவாயின. அதிக உருகுநிலை காரணத்தால் வெப்பத்தால் பாதிக்கப்படாத பொருட்களை உருவாக்குவதில் PTFE பெரிதும் பயன்பட்டது. பேஸ்ட் மற்றும் பசை வடிவில் PTFE தயாரிக்கப்பட்டு பொருட்களில் கோட்டிங்காக பயன்படுத்தப்படுகிறது. இதுபற்றி மேலும் அறிய: Ebnesajjad, Sina. Fluoroplastics. Norwich, NY: Plastics Design Library, 2000. நூலை வாசிக்கலாம்.