துப்பாக்கிச்சூடுகளை தடுக்கும் பாதுகாவலர்!
பள்ளிகளின் பாதுகாவலர்!
பள்ளியின் நெருப்பு அலாரத்தை அடித்த சிறுவனை கண்டுபிடித்தபோது சிகாகோ பொதுப்பள்ளி பாதுகாப்பு அதிகாரி ஜேடின் சூ உறுதியாக சொன்னார். “இதற்காக நான் உன்னை தண்டிக்க போவதில்லை. நான் உனக்கு வேலைதருகிறேன். செய்கிறாயா?” என்று கேட்டார். கருப்பின மாணவர் ஒப்புக்கொள்ள, அதன்பின் நெருப்பு அலாரமணி ஒலிக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு நவ.11 முதல் 3 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களது பாதுகாப்புக்கு ஜேடின் சூ பொறுப்பு.
பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், பள்ளியிலும், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் வரையிலும் கண்காணித்து அனுப்புகிறது ஜேடின் சூ குழு. 2009 ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி இன்று விரிவான திட்டமாக பின்பற்றப்பட்டுவருகிறது. “பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்தின்போது, காலை பதினொரு மணிக்கு பள்ளிக்கு வெளியே மாணவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என யோசித்தேன்” என்கிறார் பள்ளி ஆய்வாளரான நிகோலஸ் ஜே ஸ்க்யூலெர். சிகாகோ பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் வென்றவர் மோட்டரோலா, கிராஃப்ட் புட்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்தவர் ஜேடின் சூ.