இடுகைகள்

ஆரோக்கிய சேது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரோக்கிய சேது செயலியின் குறைபாடுகள், இந்தியர்களை பெரிதும் பாதிக்கும்! - மிஷி சௌத்ரி

படம்
மிஷி சௌத்ரி மொழிபெயர்ப்பு நேர்காணல் மிஷி சௌத்ரி, மென்பொருள் சுதந்திரசட்ட அமைப்பு மக்களின் தொடர்புகளைக் கண்காணிக்கும் செயலிகள்தான், பெருந்தொற்று பிரச்னையைத் தீர்க்கும் என்று நினைக்கிறீர்களா? அடிப்படையில் ஒருவரின் தொடர்பு எண்களை கண்காணிப்பது என்பது, அவரின் நோய் பாதிப்பைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்குத்தான். இதன்மூலம் குறிப்பிட்ட நபரால் மற்றவர்களுக்கு நோய் பரவாது. ஆனால் இந்த தொடர்பு முகவரிகளை கண்காணிக்கும் செயலி என்பது பெரிய மந்திரக்கோல் செயல்பாடு அல்ல. இதன்மூலம் நமக்ககு இயல்பு வாழ்க்கை திரும்ப கிடைத்துவிடும் என்று கூறமுடியாது. இந்த ஆப் மூலம் நோய் எதிர்ப்பு குறிப்பிட்ட நிலையில் இருக்கும். ஆனால் இந்த செயலி உங்களுக்கு பூரண குணத்தை தரும் என்று எதிர்பார்க்காதீர்கள். தகவல்சுதந்திரம் இல்லாத இதுபோன்ற செயலிகள் நம் தகவல்களை பிறருக்கு திருடுவதற்கு வாய்ப்பாக அமையும். இதைவிட நேரடியாக மக்களை சமூக இடைவெளி கடைபிடிப்பது, நோய்தடுப்பு செயல்பாடுகளை செய்யலாம். சோதனைகளை செய்யலாம். இவற்றை குறிப்பிட்ட அளவுதான் செய்யமுடியும் என்பதால் அரசு செயலி முறையைக் கையில் எடுத்துள்ளது. ஆனால் இந்த முறை இந்தியா போன

ஆரோக்கிய சேது செயலில் தகவல் கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை! - செயலிக்குழு தலைவர் அர்னாப் குமார்

ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது மென்பொருள் குழு தலைவர், அர்னாப் குமார். எலியட் ஆல்டர்சன் என்ற ஹேக்கர், உங்களது ஆப்பை ஹேக் செய்து தகவல்களைத் திருட முடியும் என்ற நிரூபித்துள்ளாரே? அந்த பிரச்னைகளை சரி செய்துவிட்டீர்களா? நாங்கள் மென்பொருள் ஆய்வாளர்களுக்கு வழங்கியது பீட்டா வெர்ஷனைத்தான். பாதுகாப்பு பற்றிய பிரச்னைகளை நாங்கள் இப்போது ஏறத்தாழ தீர்த்துவிட்டோம். செயலியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முன்னரே நாங்கள் பாதுகாப்பு பிரச்னையை சரி செய்துவிட்டோம். நீங்கள் கூறும் தகவல்   கசிவு என்பது நடக்கவில்லை. ஐஐடி மெட்ராஸ் தலைமையிலான குழு இந்த மென்பொருளை தயாரித்து மேம்படுத்தியுள்ளது. இதில் எந்தவித தகவல் கசிவையும், தகவல் கொள்ளையையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை. ஆரோக்கிய சேது செயலியை மேம்படுத்த எவ்ளவு காலம் பிடித்தது? நாங்கள் இந்த செயலிக்கான வடிவமைப்பை மார்ச்சில் தொடங்கினோம். அறுபதிற்கும் மேற்பட்டோர் உழைத்த இந்த செயலி ஏப்ரல் மாதம் 2 அன்று வெளியிடப்பட்டுவிட்டது. கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு உட்பட்ட மக்களை இதன்மூலம் அறிய முடியுமா? நாங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் நோய் பாதிப்பிற்கு உட்பட்ட இடங