இடுகைகள்

பதில் சொல்லுங்க ப்ரோ? பூச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சிகளின் ரத்த வேறுபாடு? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  pixabay-  பதில் சொல்லுங்க ப்ரோ? பூச்சிகளின் ரத்தம் மனிதர்களின் ரத்தம் மாதிரி இருப்பதில்லையே ஏன்? வேறுபாட்டிற்கு காரணம், நமது உடலில் உள்ள  சிவப்பணுக்கள்தான். பூச்சிகளின் உடலில் ஹீமோலிம்ப் எனும் திரவம் உள்ளது. இந்த திரவம்தான் அந்த உயிரிகளின் உடலிலுள்ள செல்களை பாதுகாக்கிறது. பூச்சிகளின் ரத்தத்தில் பெரும்பாலும் நீர்தான். கூடவே அயனிகள், கார்போஹைட்ரேட், கிளிசரால், அமினோ அமிலங்கள், நிறமிகள், செல்கள் ஆகியவை இருக்கும்.  பூச்சிகளின் உடலிலிருந்து சிவப்பு நிற திரவம் வந்தால் அது அதன் கண்களில் உள்ள சிவப்புநிறத்திலிருந்து வந்ததாக இருக்கும்.  பூச்சிகளின் ரத்தம் பொதுவாகவே வெள்ளை அல்லது பச்சையாக இருக்கும். பாலூட்டிகளின் உடலில் சிவப்பணுக்கள் மூலமாக செல்கள் உயிரோடு இருக்கின்றன. இவைதான் செல்கள் அனைத்திற்கும் ஆக்சிஜன் கிடைக்கிறது. பூச்சிகளுக்கு இப்பணியை ட்ரிச்சல் ட்யூப் என்ற உறுப்பு இப்பணியை செய்கிறது.  பூச்சிகளுக்கு என்னவிதமான நோய்கள் ஏற்படும்? அனைத்து உயிரினங்களுக்குமே பாக்டீரியம் மற்றும் வைரஸ், பூஞ்சைகள் எப்போதும் நோய்களை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளுக்கு கூடுதலாக ஒட்டுண்ணிகள் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.