இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறுப்பு மாற்ற சோதனைகளுக்கு உதவும் விலங்கு-மனித கலப்பு உயிரிகள்!

படம்
டாக்டர் எக்ஸ். விலங்கு மனிதர்கள் இணைப்பு சோதனைகளை ஏற்கலாமா? விலங்கு அணுக்கள், மனிதர்களின் அணுக்கள் இணைந்து உருவாக்கப்படும் உயிரிகளை சிமேரா என்று அழைக்கின்றனர். மனித ஸ்டெம் செல்களை விலங்குகளின் கருக்களுக்குள் செலுத்தி இந்த கலப்பு பரிசோதனையைச் செய்கின்றனர். என்ன பயன் என்று கேட்கிறீர்களா இருக்கிறது. டோக்கியோ பல்கலைக்கழகத்தின் அரசின் அனுமதி பெற்று எலி - மனிதன் ஆகியோரின் செல்களைப் பயன்படுத்தி சோதனைகள் நடைபெற்றது. இதனை டாக்டர் ஹிரோமிட்சு நாகாச்சி என்பவர் தலைமையேற்று செய்தார். இது ஜப்பானில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சால்க் பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் - குரங்கு செல்கள் கொண்ட கலப்பின  பரிசோதனை நடைபெற்றதாக ஸ்பானிஷ் பத்திரிகை எல் பாரிஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செல்கள் பின்னர் அழிக்கப்பட்டன. விலங்கு - மனிதர்கள் கலப்பின உயிரிகள் உருவாக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், உறுப்புகள் போதாமைதான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்திலும் ஏராளமானோர் உறுப்பு பழுதாகி மாற்று உறுப்புக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அதிக காலம் காத்தி

சில உருளைக்கிழங்கு வகைகள் மட்டும் சுவையாக இருப்பது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி சில குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்குகள் மட்டும் பிசைய சாப்பிட நன்றாக இருக்கிறதே ஏன்? உதயம் பருப்பு வகைகள் விளம்பரம் போல இருக்கிறது நீங்கள் கேட்பது. உபரி அதிகம் வரவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள் போல. உருளைக்கிழங்குகளை வேக வைத்து பிசைந்தால் நிறைய வருவது அதிலுள்ள ஸ்டார்ச் கையில்தான் உள்ளது. இதற்கென குறிப்பிட்ட வகைகள் உள்ளன. இவற்றை விதைத்து அறுவடை செய்து வேக வைத்து தாளித்து சாப்பிட வேண்டியதுதான். கிங் எட்வர்டு, மாரிஸ் பைபர் எனும் வகைகள் இதில் உங்களுக்கு உதவும். சார்லட் மற்றும் அன்யா ஆகிய வகைகள் குறைவான ஸ்டார்ச் கொண்டவை. இவற்றைப் பயன்படுத்துவதை விட மேற்சொன்ன வகைகள் சமைக்கவும் சாப்பிடவும் சிறப்பாக இருக்கும். பெப்சிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் சிப்ஸ் வகைகள் அவர்களின் தனித்துவமான உருளைக்கிழங்குகள் மூலம் உருவாகின்றன. இதனால் அவர்களுக்கு ஏற்றபடி உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய முடிகிறது. இதனால் அவர்களின் உருளைக்கிழங்குகளை சீவினால் மிக நேர்த்தியாக வரும். நன்றி - பிபிசி

குழந்தைகளுக்கு கதை சொல்வதில் முதியோர் எப்படி வெல்கிறார்கள்?

படம்
மிஸ்டர் ரோனி கதை சொல்வதில் வயதானவர்கள் தேர்ந்தவர்களாக இருக்கிறார்களே எப்படி? மரண அடிதான் ப்ரோ. வாழ்க்கை முழுவதும் ஏதேனும் ஒன்றை சுமந்துகொண்டு இருக்கிறார்கள். வீண்பழி சுமக்கிறார்கள். தினசரி ஏராளமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்களுக்குச் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன. மேலும் இளைஞர்களை விட (18-30), 60-92 வயது கொண்டவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளை கஷ்டப்படுத்தாத இலக்கணங்களைக் கொண்டது. எளிதில் புரியும்படியான விஷயங்களைக் கொண்டது. அறத்தை வலியுறுத்துவது என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கதைகளைச் சொல்லும்போது கதைகளுக்கு ஏற்றது போல குரலின் தொனிகளை மாற்றுவதும் பெரியவர்களுக்கு இயல்பாக வருவதை மைக்கேல் பிரான், சூசன் ராபின்ஸ், நான்சி மெர்க்லர் ஆகியோரின் ஆராய்ச்சிகள் விளக்கியுள்ளன. நன்றி: பிபிசி

மூளையை அப்கிரேட் செய்ய முடியுமா?

படம்
pixabay மூளையின் திறன்களைப் பற்றி நாம் நிறைய பெருமை கொள்கிறோம். ஆனால் சிறு சிப்களில் அதிக தகவல்களை அடக்கி வைக்கத் தொடங்கிவிட்டோம். மேலும் கணினி அளவுக்கு கணக்குகளைப் போட்டு நம்மால் செயல்பட முடியவில்லை. அதுவே மனித மூளையின் முதல் தோல்வி. இனிமேலும் பல்வேறு டெக் நிறுவனங்களின் ஆராய்ச்சி மனித மூளையை பல்வேறு துறை சார்ந்து வெல்வதாகவே இருக்கும். மூளையிலுள்ள தகவல்களை கணினியில் இணைப்பது பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. அவற்றில் புதுவரவு எலன் மஸ்கின், நியூராலிங்க். 1973 ஆம் ஆண்டு உலகில் முதன்முதலாக மனிதர்களின் மூளை -கணினி  இடைமுகம் உருவாக்கப்பட்டது. கலிஃபோர்னியா பல்கலையைச் சேர்ந்த ஜாக்யூஸ் விடல் என்பவர் இதனை உருவாக்கினார். மூளையின் மின் துடிப்புகளை எலக்ட்ரோபாலோகிராம் கருவி மூலம் அறிந்து கணினியில் பதிவு செய்தார். அதனை இயங்க வைத்தார். 1988 ஆம் ஆண்டு யூகோஸ்லேவியா ஆராய்ச்சியாளர்கள், இசிஜி சிக்னல்களை மூளையிடமிருந்து பெற்று, கணினியின் இணைப்பிலுள்ள ரோபோ ஒன்றை இயங்க வைத்தனர். கண்களை மூடவும் திறக்கவும் வைத்தனர். அவ்வளவேதான். 1991 ஆம் ஆண்டு நூறு எலக்ட்ரோடுகளைக் கொண்ட

மக்களை கறைபடிந்தவர்களாக்குவது அரசியல்வாதிகளின் தந்திரம் - சேட்டன் பகத்!

படம்
டெக்கன் கிரானிக்கல் ஊழலை ஒழிப்போம்! நீங்கள் நிச்சயம் அரசு அலுவலகங்களுக்குச் சென்றிருக்கலாம். தன் வேலைகளுக்கு சம்பளமும் பெறுவார்கள். கூடவே லஞ்சமும் ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.இவர்களை நீங்கள் ஏன் இப்படி என்றால் இருக்கவே இருக்கிறது யூனியன்கள். தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவார்கள். நாம் சாப்பிடும்போதும், அல்லது சினிமா பார்க்கும்போதும், பூங்காவில் சந்திக்கும்போதும் பொது விஷயங்களை நண்பர்களுக்குள் பேசிக்கொள்கிறோம். அதில் ஊழல் மறுக்கமுடியாமல் ஒரு பகுதியாக இருக்கிறது. என்ன காரணம் என்றால் அரசியல்தான். தூய்மையான அரசியல் என்றால் உங்களது வீட்டு சிறுவன் கூட சிரிப்பான். அந்தளவு நிலைமை சீரழிய அரசியல் ஓர் முக்கியக் காரணம். மக்கள் எப்போது அரசியல்வாதியைப் பார்த்து கேள்வி கேட்பார்கள்? அவர்கள் தூய்மையாகவும் எதிராளி தூய்மையற்று இருக்கும்போதுதானே? அரசியல்வாதிகள் இதைத்தான் குறி வைக்கிறார்கள். மக்களுக்கு வாக்களிக்க பணம் கொடுப்பது முக்கியமானது. இனி எப்படி மக்கள் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் உயர்த்த முடியும்? மக்களும் எப்படியும் வெற்றி பெறுபவர் தொகுதிக்கு வரப்போவதில்லை. குறைந்த பட்ச பணம

பிரட் காகிதப் பையில் கொடுக்கக் காரணம் என்ன?

படம்
மிஸ்டர் ரோனி பிரட்டுகளை ஏன் தாளில் சுற்றி அல்லது காகித பேக்கில் கொடுக்கிறார்கள்? பிரட்டை ஜாம் தடவி அல்லது ஓவனில் சுடும் கணநேரத்தில் இந்த கேள்விகள் உங்களுக்குத் தோன்றியிருக்கும். பிரட்டுகளை புத்தம் புதிதாக வைத்திருக்கவே காகித தாளில் வைத்திருக்கிறார்கள். காசு கொடுத்து வாங்குபவர்களுக்கும் அப்படியே கொடுக்கிறார்கள். மேலும் பாலிதீனில் அப்படிக் கொடுத்தால், அது விரைவில் வதவதவென போய்விடும். இதனை நீங்கள் பேக்கரி பிரெட்டுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். எனவே வாங்கி வைத்துப் பார்க்காமல் டபக்கென கிசான் ஜாம் தடவி விழுங்கிவிடுங்கள். பிரட் புத்தம் புதிதாக இருக்கும்போது, சாப்பிட நன்றாக இருக்கும். நன்றி: க்யூரியாசிட்டி

எலிப் படுகொலை! - பிரெஞ்சு காலனி தேச காமெடி!

படம்
வியட்நாம் தலைநகரான ஹனோய் அப்போது பிரெஞ்சு வசம் இருந்தது. பொதுவாக காலனி ஆதிக்க சக்திகளுக்கு, மக்களின் வரிப்பணத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடிப் பார்க்க எப்போதுமே ஆசை உண்டு. ஓஷோ சொன்ன கோழியின் சிறகுகளைப் பிடுங்கிப்போட்ட கதை உதாரணம். இங்கும் அப்படி ஒரு ஆட்சியாளர் என்ன செய்தார், தெரியுமா? நகரமயமாக்கலுக்கு ஆசைப்பட்டார். ஆனால் செயல்படுத்தியதில் சின்ன சிக்கல் ஏற்பட்டுவிட்டது. விளைவு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். பால் டூமோர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அவரை வியட்நாமின் ஹனோய் நகருக்கு நிர்வாக அதிகாரியாக நியமித்தனர். நாகரிக நகருக்கு முதல்படி என்ன கழிவறையும் சாக்கடையும்தானே! ஆம் உடனே ஆட்களைத் திரட்டி பதினான்கு கி.மீ. நீளத்திற்கு சாக்கடை ஒன்றை பிரமாதமாகக் கட்டினார். நகரை பிரமாதமான உயரத்திற்கு உயர்த்திவிட்டதாக நினைத்தார் பால் டூமோர். அவருக்கு மான்ஸ்டர் வில்லனாக வந்தது, வேறு யாருமில்லை எலிகள்தான். சிறப்பான வாழிடமாக சாக்கடைக் குழாய்களைத் தேர்ந்தெடுத்தன. ஒரு கட்டத்தில் உணவுப்பிரச்னை எழ, அதுதான் மாம்ஸ் இருக்கிறார்களென நேரடியாக மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்தன. உணவுக

இந்தியாவின் முக்கிய பிரச்னைகளுக்கு காந்தியத் தீர்வுகள்!

படம்
பின்டிரெஸ்ட் இந்தியாவின் பிரச்னைகளும் - காந்தியத் தீர்வுகளும்! இந்தியா சுதந்திரமடைந்தபோது,  அதனுடன் பல்வேறு சமஸ்தானங்கள் ஒன்றாக இணைந்தன. பின்னர்தான் அரசியலமைப்புச் சட்டப்படி ,மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. இவையெல்லாம் நிர்வாகரீதியானவையே. அன்றிலிருந்து இன்றுவரை நிலப்பரப்பு, கலாசாரம், மக்கள் என்று பார்த்தால் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய மாநிலங்கள் பலவும் தமக்கிடையே உள்ள இயற்கை வளங்களை, பல்வேறு பூசல்களுடன் பகிர்ந்துகொண்டு வருகின்றன.  அரசியல்கட்சிகள், இதனைப் பயன்படுத்திக்கொள்வதால் மாநில பிரச்னைகள் தேசிய அளவிலான பிரச்னைகளாக மாறுகின்றன. ஆட்சியாளர்கள், மாநில நலன் சார்ந்த பார்வையில் முடிவு எடுக்க நேரிடுகிறது. அப்போது, மாநிலங்களுக்கிடையே கடும் பிரிவினை போராட்டங்கள் மூளுகின்றன. சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிரம்மபுத்திரா நதி மற்றும் கர்நாடகம், தமிழகத்திற்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு, இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்கு காந்தியடிகள், நீதிமன்றத்தை நாடுவதும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்வதையும்  தனது தீர்வாக முன்வை

அகிம்சைச் சுடர் காந்தி! - காந்தி 150

படம்
pinterest காந்தி! காந்தி படிப்பில் சுமாரான மாணவர்தான். கணக்கில் நன்றாகப் படித்தவர். புவியியல் பாடத்தில் தடுமாறினார். காந்திக்கு பதிமூன்று வயதில் திருமணமானது. இவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துபோக, அதிலிருந்து குழந்தை திருமணங்களை தீவிரமாக எதிர்த்து வந்தார் காந்தி. காந்தியின் ஆங்கில ஆசிரியர் அயர்லாந்துக்காரர். எனவே அவரின் ஆங்கிலம், ஐரிஷ் தன்மை கொண்டிருக்கும். காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹென்றி டேவிட் டோரியு முன்மாதிரி. இவரைப் பற்றிய போராட்டச் செய்திகளை காந்தி சிறையில் படித்து அறிந்தார். 1930 ஆம் ஆண்டு காந்தி முதல் இந்தியராக டைம் பத்திரிகையில் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தி அமைதிக்கான நோபலுக்கு ஐந்துமுறை (1937,1938,1939,1947,1948) பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் பரிசு வழங்கப்படவில்லை. 2006 ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது. தன்னை பிறர் புகைப்படம் எடுப்பதை கடுமையாக வெறுத்தவர் காந்தி. ஆனால், அவரது காலத்தில் அதிகம் புகைப்படம் எடுக

சுந்தரசாமியுடன் தேநீர் குடித்தபோது... கடிதங்கள்!

படம்
நூல்வெளி தேநீர் குடிக்கவெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. சு.ரா பற்றி அறச்சலூர் சிவராஜ் ஏராளமான பதிவுகளை எழுதி வருகிறார். ஏதேனும் ஒருவகையில் மெய்யருள் போன்றவர்களும் அவரின் வார்த்தைகளை மெய்மறந்து கூறும்போது அவரின் நினைவுகள் தோன்றும். சு.ரா பற்றி முருகு கூறியபோது, பெரிய ஆச்சரியம் தோன்றியது. வார்த்தைகளை திருத்தி செம்மையாக்கி எழுதுவார் என்று கூறினார். அப்படித்தான் புளியமரத்தின் கதை நூலைப் படித்தேன். நாவல் படித்தாலும் அதனை வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்றவாறு படிக்கவேண்டும் என்பதை நான் நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் இந்த நாவலைப் படிக்கவேண்டும். அறச்சலூர் பிரகாஷ், அன்று  காவல்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். இன்று அவர் பதவி உயர்வு பெற்று ஊர் நீங்கிச்சென்றுவிட்டார். அன்று, தீவிரமாக பல்வேற நூல்கள் படிப்பதும், திரைப்படங்களைப் பார்ப்பதுமாக இருந்தார். இதில் ஆச்சரியம். அவரிடம் படிப்பவர்களைப் பற்றி அங்கதம் கேட்பதற்கு படு சுவாரசியமானது. புத்தகங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் கடன் கொடுக்க மாட்டார்கள். பிரகாஷ் அண்ணா என்னை நம்பிக் கொடுத்தார். புத்தகத்தைப் படித்துவிட்டு நானும் சரியா

மனமறிய ஆவல்! - கடிதங்கள்- துயரம் துரத்துதே ஏன்?

படம்
pixabay முன்னமே கூறினேனே திடீரென எழுதும்போது உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டு வெறுமனே காலியாக உட்கார்ந்திருப்பது என் வழக்கமென. வின்சென்ட் கூட திட்டுவான். இப்படி சட்டென உணர்ச்சி வசப்படுவது சரியல்லவென. என்ன செய்வது என் இயல்பு அப்படி ஆகிவிட்டது. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது போல திடீரென காலங்களில் பின்னால் கடிகாரத்தை திருப்பி வைத்துச் சென்றபோது கடும் விரக்தி ஏற்பட்டது. அந்தநேரத்தில் அஞ்சல் அட்டை கையில் கிடைத்தது துரதிர்ஷ்டம். உடனே எழுதி அப்போதே முருகானந்தம் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன். இன்று படித்தால் உண்மையில் ஏன் இப்படி எழுதினேன். என்ன பிரச்னை என எனக்கே புரியவில்லை.இப்படி நெருங்கிய நண்பர்களுக்கு எழுதி பின்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். நட்பில் அதெல்லாம் சாதாரணமப்பா என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  சரி, எழுதியதை மறைக்க முடியாது. படியுங்கள். 3 1.3.2013 அன்பு சகோதரருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உங்கள் நான் என்றும் உடன்பிறவாத சகோதரராகவே பாவிக்கிறேன். இனிமேலும் அப்படித்தான். தங்களது அறிவிற்கும் சிந்தனைக்கும் கி.மீ. தூரத்திலுள்ள என்ன

மனித உணர்ச்சிகள் ஒன்றுதானா? - கடிதங்கள்!

படம்
Wasafiri தாராபுரம் அருகே சந்தித்த ஜோதிட நண்பர், நிறைய நாவல்களை வாசிக்கிறவர். அவரிடம் நான் மண்ட்டோ பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அசுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர், என்ன மண்ட்டோ எழுத்து, மும்பைக்காரன் அழுதான்னா எனக்கு அழுகை வராது. அவன் வேற ஊர்ல இருக்கான். நான் வேற ஊர்ல இருக்கேன். எனக்கு அவனோட கலாசாரம் புரியாது. அவன் அழுதா நான் எதுக்கு அழணும். என்று பேசினார். எனக்கு இந்த வாதம் புதிதாக இருந்தது. கொல்கத்தா என்ற நகரில் இருப்பவனும் நம்மைப்போன்றவன்தான். அப்புறம் இதில் அவன் வேற ஆள் என்று சொல்வது வித்தியாசமாக இல்லையா? எனக்கு அவரிடம் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே சிறிதுநேரம் சமாளிப்பாக பேசிவிட்டு கிளம்பிவிட்டேன். அவர் நெசவு வேலைகள் செய்கிறார். அதற்கு இடையே எழுதுகிறார். ஜோதிடம் பார்ப்பதை கட்டண சேவையாக செய்கிறார். வாழ்வில் என்ன கசப்போ என்று நினைத்துக்கொண்டேன்.  ரைட். இந்த நேரத்தில் அந்த நினைவு எனக்கு வந்தது. அதற்காக கூறினேன். கடிதத்தை வாசியுங்கள். 2 23.2.2013 பிரிய நட்பிற்கு, வணக்கம். உடலும் மனமும் நலமாக இருக்க இறையை வேண்டுகிறேன். புதிதாக அம்ர

மனமறிய ஆவல்! - அன்பரசு - இரா.முருகானந்தம் கடிதங்கள்!

படம்
கடிதங்கள் pixabay அன்பரசு சண்முகம் - இரா.முருகானந்தம் 1 2012-2013 இந்த கடிதம் எழுதும்போது வேலை என்று ஒரு வார்த்தை வருகிறது. அந்த வேலை என்பது வீட்டில் சோறைத் தின்றுவிட்டு சும்மா சுற்றாதே என்று சொல்லி அப்பா கொடுத்த வேலைகள்தான். எங்கள் அப்பாவுக்கு தெரிந்த வேலை தேங்காய்களை வெட்டி, சுமந்து, காய வைத்து விற்பது. இக்காலங்களில் அதைத்தான் செய்து வந்தேன். அந்நேரத்தில்தான் தமிழ் கம்ப்யூட்டர், வளர்தொழில் இதழ்களில் கிடைத்த வேலையைச் செய்யமுடியாமல் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அன்புமிக்க ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் செய்த அப்பணி அப்போது வருத்தம் தந்தது. பின்னாளில் சென்னை புத்தகத்திருவிழாவில் அவரைப் பார்க்கும்போது அன்று மனதிலிருந்து வருத்தம், கோபம் எதுவுமே வரவில்லை.  என்னை நிருபராகவும், பத்திரிகைக்கான மார்க்கெட்டிங் ஆளாகவும் மாற்ற முயன்றார். என் உடல் இருந்த நிலையில் அதனை ஏற்க முடியவில்லை. அவ்வளவுதான். இந்த வேலை பறிபோனபிறகு சென்னையில் இருக்க முடியவில்லை. கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் தங்கியிருந்தேன். எனக்கு இறைவன் கொடுத்த சகோதரர், மிகச்சிறந்தவர் என்பதால் வி

மாற்றுப்பாலின சாதனையாளர்கள் நூல் தரவிறக்க முகவரி!

படம்
இந்த நூலை தினகரன் நாளிதழில் பணியாற்றும் போதே எழுத தொடங்கினேன். ஆனால் சாத்தியம் ஆகவில்லை. காரணம் கடுமையான பணிச்சுமை. இன்றும் நான் நிதானமாக உட்கார முடியவில்லைதான். ஆனால் முன்பை விட தெளிவாக எழுதுவதற்கான நேரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு வரையறுத்துவிட்டேன். எனவே இனி பிரச்னையில்லை. மொத்தம் இருபது மாற்றுப்பாலினத்தவர் இந்த நூலில் உள்ளனர். விபச்சாரம், பிச்சை என இரண்டையும் தவிர்த்துவிட்டு தனக்குப் பிடித்த தொழிலைச் செய்துகொண்டு வாழ்கின்றவர்கள் இவர்கள். எனவே இந்த தன்னம்பிக்கை மாற்றுப்பாலினத்தவருக்கு வரவேண்டும் என்பதே என் ஒரே நம்பிக்கை. ரயிலில் பணத்தை அடித்து பிடுங்குவது, தன் அந்தரங்க இடத்தை சேலையை தூக்கிக் காட்டி அவமானப்படுத்துவது என வாழும் மாற்றுப்பாலினத்தவர்கள்  சிலர், அப்பிரிவினருக்கே களங்கமாக இருக்கிறார்கள். இங்கு சமூகம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பது உண்மை. அவரவருக்கான இடங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மக்களுக்கும் இழிவைத் தேடித்தருவது நியாயமும் இல்லைதானே! வாழ்வதற்கான நம்பிக்கை அணுவளவேனும் அவர்களுக்கு கிடைத்தால் போதும். அந்த நம்பிக்கையில் இந்த நூலை மொழிபெயர

மலம் கழித்தால் மரணதண்டனை - ஆல் இஸ் நாட் வெல்!

படம்
மத்தியப்பிரதேசத்திலுள்ள பஞ்சாயத்து பவன் அருகில் திறந்த வெளியில் மலம் கழித்த ரோஷினி என்ற சிறுமியும், அவினாஷ் என்ற சிறுவனும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். குச்சிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்துள்ளனர். சிறுவர்களை  சோதித்த மருத்துவர்கள் அவர்கள் முன்னமே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். கொலைகாரர்கள் யாதவ் சாதியைச் சேர்ந்தவர்கள். அடித்துக்கொன்றதாக கைது செய்யப்பட்ட இருவருமே சகோதர ர்கள்தான். சிறுவன், சிறுமியைக் கொல்லும் முன்பு அவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர். கடவுள் சாத்தான்களை கொல்ல உத்தரவிட்டுள்ளார் என போலீசில் வாக்குமூலம் கூறியுள்ளார் கொலைகாரர்களில் ஒருவரான  ஹக்கீம் யாதவ். கொல்லப்பட்ட சிறுவர்களின் வீட்டில் கழிப்பறை இல்லை. கட்டுவதற்கு சில முட்டுக்கட்டைகள் இருந்துள்ளன. அதற்காக மலம் கழிக்காமல் இருக்க முடியுமா? 2016 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ள குற்ற சம்பவங்களின் அளவின் படி அதுவே நம்பர் 1 இடத்தில் உள்ளது. தலித் மற்றும் பட்டியலின மக்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஊரில் இருந்த ஒரே தலித் குடும்பம் அதுதான் என்பதோடு, அங்கு

பரலோக நரகம் - அக்னியில் கொதிக்கும் ஆன்மா!

படம்
தெரிஞ்சுக்கோ! நரகம்! இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களிலும் நரகத்திற்கு முக்கியமான இடமுண்டு. புத்த மதத்தில் ஏழு பனி நரகங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளன. ஒழுக்கம் தவறுபவர்களை அச்சுறுத்த நரகங்கள் புராணக் கதைகளில் உருவாக்கப்பட்டன. இன்று மோசமான ஆட்சியாளர் அதனை தன் வாழ்நாளில் மக்களுக்கு உருவாக்கிக் காட்ட முடிகிறது. இதையும் நாம் கர்ம பூர்வம் என்று சொல்லித் தப்பிக்க முடியும். கொடும் செயல்களை செய்பவர்களுக்கு நரகம் விதிக்கப்படுகிறது. மெசபடோனிய நம்பிக்கைப்படி, மோசமான செயல்களைச் செய்தவர்கள் கழிவுநீரைக் குடித்தபடி கற்களைத் தின்றபடி இங்கு வாழ வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டில் தியோபிளஸ் அடானா என்பவர், வரலாற்றில் முதன்முறையாக தன் ஆன்மாவை சாத்தானுக்கு விற்கிறார். இதற்குப் பரிசாக பிஷப் பதவியைப் பெறுகிறார். ஒரு கட்டத்தில் குற்ற உணர்வு பெருக்கெடுக்க, கன்னி மேரியிடம் மன்னிப்புகேட்க, சாத்தானின் ஒப்பந்தத்தை மேரி முறிக்கிறார். ஜெரிலாக் என்பவர், ஸ்பெயினில் படிக்கிறார். இவரது எதிரிகள் இவர் சாத்தானின் அருள் பெற்றவர் என பிரசாரம் செய்கின்றனர். காரணம் இவர் போப்

காலாவதி எனும் குழப்பம்! -பாலில் அச்சிடப்பட்டுள்ள வார்த்தைகள்!

படம்
செல் பை, யூஸ்டு பை, பெஸ்ட் இஃப் யூஸ்டு பை என பல தேதிகளை நிறுவனங்கள் தங்களது பால் பொருட்களின் மீது அச்சிடுகிறார்கள்.இது பெரும் குழப்பத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. விளைவு? ஆகா பால் கெட்டுப்போச்சு என பால் பாக்கெட்டை ஃபிரிட்ஜிலேயே கடாசிவிட்டு செல்வதுதான். பெஸ்ட் பை  - சிறந்த தரத்தில் பாலைப் பயன்படுத்துவதற்கான நாள் யூஸ் பை - நல்ல தரத்தில் பொருட்கள் இருக்கும் நாள் செல் பை - இது கடைக்காரருக்கானது. சிறந்த தரத்தில் பால் உள்ள காலத்தைக் காட்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் 20 சதவீத பால் பொருட்கள் இதுபோன்ற லேபிள்கள் மூலம் வீணாவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவிலுள்ள எஃப்டிஏ, கட்டாயமாக பால் பாக்கெட்டுகளில் அதன் காலாவதி நாட்களை குறிப்பிடக்கூறவில்லை. அதன் தரம் பற்றிய குறிப்புகளை மட்டும் அச்சிடக்கூறுகிறது. அமுல் கோல்டு என்றால் 180 நாட்கள் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்களே அதுதான். பாஸ்ட்ரைஸ்டு என்று பாலில் அச்சிடப்பட்டிருக்கும். இதன் பொருள், பாலை சூடுபடுத்தி ஈகோலி, சால்மோனல்லா ஆகிய பாக்டீரியாக்களை அழித்திருப்பார்கள் என்பதே. அழிப்பது என்ற வார்த்தை தவறு. கட்டுப்படுத்தியிரு

வியாபார வியூகம் அமைப்பது எப்படி? - சதீஸ் கிருஷ்ணமூர்த்தி!

படம்
புத்தக விமர்சனம்! வியாபார வியூகங்கள் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு பொதுவாக வியாபாரம் என்பதை தமிழர்கள் மிக ரகசியமாக யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்றே செய்வார்கள். காரணம், தொழில் ரகசியம் லீக்காகி விடக்கூடாது என்பதுதான். இன்றும் கூட அமோல் கமேஷன், டிவிஎஸ், கவின்கேர், செட்டிநாடு குழுமங்கள் செயல்பாடு என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்தால்தான் புரிந்துகொள்ள முடியும். பெருமளவு விஷயங்களை அவர்களாக கூறுவது சாத்தியம் இல்லை. இந்திய தொழிலதிபர்கள் என வரும்போது நிலைமை பரவாயில்லை. தங்களது வெற்றியை மனம் விட்டு கொண்டாடுகிறார்கள். சதீஸ் கிருஷ்ணமூர்த்தி, இந்த நூலில் நிறுவனத்தின் அடிப்படை நோக்கம், திட்டங்கள், செயல்பாடு, மார்க்கெட்டிங், காலத்திற்கேற்ற புதுமை என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். இதன்மூலம், சாதித்த நிறுவனங்கள், இவற்றைக் கண்டுகொள்ளாததால் வீழ்ந்த நிறுவனங்கள் என பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறார். மைக்கேல் போர்ட்டர் என்று எழுத்தாளரின் ஆய்வுக்கட்டுரைகள் நூலெங்கும் விளக்கப்பட்டுள்ளன. தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு புகழ்பெற்ற சிவகாசி, அடுத்துவரும் காலமாற்றங்களுக

மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 20! - புதிய நூலுக்கான அட்டைப்படம்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 20! மாற்றுப் பாலினத்தவர் வாழ நிறைய வழிகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் அப்சரா ரெட்டி போன்று ஊடகங்களில் சாதிப்பவர்கள் உண்டு. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாற்றுப்பாலினத்தவர் என்று கூறவே இங்கு வெட்கப்படும் நிலை உள்ளது. வறுமையான சூழலில் இருந்து மேலேறி வருபவர்கள் மிகவும் தடுமாறுகிறார்கள். அரசு அளிக்கும் உதவிகள் பற்றிக்கூட கூறுவதற்கு இங்கு ஆட்கள் இல்லை. ஏனெனில் படித்தவர்கள் கூட ஓரினச்சேர்க்கையாளர் என்று ஒருவரைப் பற்றிக் கேள்விப்படும்போது, அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று பேசுகிறார்கள். இந்த விவகாரம் என்னை பெரிதும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நூலில் உள்ளவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களின் வாழ்க்கை  அனைத்து அவமானங்களையும் சகித்து வந்ததுதான். வெறுத்து விபசாரம் பக்கம் செல்லாமல் பிறரின் உரிமைக்காகவும் உழைத்து வருகின்றனர். புகைப்படம், டிவி, சினிமா, ஃபேஷன் என பல்வேறு துறைகளிலும் மாற்றுப்பாலினத்தவருக்கு முன்மாதிரியாக உள்ளனர். தம்மைப்போன்ற பிறருக்காகவும் போராட்டத் தீப்பந்தத்தை கையில் ஏந்துவதற்கு இவர்கள் தயங்குவதில்லை.  இத

கேப்டன் பிரின்ஸ் முறியடிக்கும் அபாயச் சுறா!

படம்
கேப்டன் பிரின்ஸ்! கேப்டன் பிரின்ஸ் கலக்கும்  பயங்கரப்புயல் சன்ஷைன் லைப்ரரி விலை ரூ.65 கேப்டன் பிரின்ஸ் கடல் பயணமாக செல்கிறார். அப்போது லோபோ என்ற ஒற்றைக்கண் சூதாடியைச் சந்திக்கிறார். லோபோ சூதாட்டத்தில் அமெரிக்கரை தோற்கடித்து தீவு ஒன்றை வென்றிருக்கிறார். ஆனால் அதன் பின்னால் பெரும் பழங்குடி மக்கள் பிரச்னை இருக்கிறது. இது பிரின்சுக்கு தெரியாது. பிரின்ஸ் ஓர் கடலில் வாழும் காந்தி. முடிந்தவரை போலீஸ், கைது, சூதாட்டம் என எல்லாவற்றிலும் தள்ளியிருக்க முயற்ச்சிக்கிறார். ஆனால் பார்னே எனும் அவரது தோழர் குடி, சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டவர். அப்படி ஒரு தீவுக்குப் போகும்போதுதான் லோபோவை அடித்து துவைப்பதைக் காண்கிறார். உடனே லோபோவுக்கு உதவுகிறார். ஆனால் போலீஸ் இவர்களை நடந்த சம்பவத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டு தேடி வருகிறது. உடனே பிரின்சின் கப்பலில் அடைக்கலமாகி லோபோவும் பார்னேவும் தப்புகின்றனர். அடுத்து அவர்கள் சென்றது, லோபோவுக்கு சொந்தமான தீவு. ஆனால் அங்கு பழங்குடி மக்கள் அமெரிக்கருக்கு எதிராக கடும் கோபத்தில் உள்ளனர். காரணம் அங்குள்ள பேராசைக்கார பழங்குடித்தலைவன்தான். அவன் விரிக்

காமெடி அறிவியல் விருதுகள் - எல்ஜி நோபல் பரிசு!

படம்
எல்ஜி நோபல் பரிசு! விநோதமான வித்தியாசமான யோசனைகள் சிந்தனைகள் அறிவியலுக்கு அவசியம். முன்பு என்ன இது, கிறுக்குத்தனமாக இருக்கிறதே என்று நினைத்த விஷயங்கள்பின்னாளில்  மகத்தான கண்டுபிடிப்புகளாக நிறைவேறியுள்ளன. அவற்றைக் கவனப்படுத்தி பரிசுகளை வழங்குகிறது எல்ஜி நோபல் கமிட்டி. அனாட்டமி விருது! ஆண்களின் விதைப்பையின் இடதுபுறம் ஏன் வலதுபுறத்தை விட சூடாக இருக்கிறது என்பதுதான் ஆராய்ச்சி. ஏண்டா இப்படி என்று கேட்டீர்கள் என்றால் உடனே கட்டுரையைவிட்டு வெளிநடப்பு செய்துவிடுங்கள். இதற்காக ஆய்வாளர் ரோஜர், போரஸ் எத்தனை பேரை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் தெரியுமா? தபால்காரர்களை 20-52 வயது வரை தேர்ந்தெடுத்து ஆராய்ந்திருக்கிறார்கள். சங்கோஜமாக இருக்காதா என்று கேட்காதீர்கள். நமக்கு ஆராய்ச்சிதான் முக்கியம். வேதியியல் விருது ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பை ஜொள் விட்டு உலகமே பார்த்தது. அப்போது அனைவரின் வாயில் வடித்த தோராய ஜொள்ளின் அளவு என்ன? ஆம். இதைதான் ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க முயற்சித்துள்ளனர். ஐந்து வயது சிறுவனின் வாயில் சுரக்கும் எச்சிலின் அளவு சதவீதத்தை இதன்மூலம் கணித்துள்ளனர்.

தமிழ் சூரியன் சி.பா.ஆதித்தனார்! - தினத்தந்தி உருவான கதை!

படம்
தினத்தந்தி. இன்றுவரை கிராமத்தில் உள்ளவர்கள் செய்தியை எளிமையாக தெரிந்துகொள்வது இதன் வழியாகத்தான். காரணம் மேல்தட்டு பத்திரிகைகள் புராணம், ஆன்மிகம் என எழுதி வந்தபோது, மக்களுக்கு செய்திகள் தேவை என்ற காரணத்தால் தினத்தந்தி எளிய தமிழில் உருவாக்கப்பட்டது. சி.பா. ஆதித்தனார், தமிழ்நேசர். எனவே இங்கிலாந்தில் படித்த பார் அட்லா படிப்பையும், அதன் மூலம் கிடைத்த சிங்கப்பூர் வேலையையும் கைவிட்டு தினத்தந்தி தொடங்கினார். தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கை தினத்தந்தி தொடங்கப்பட காரணம். இன்று அந்த லட்சியம் வென்றதா, அல்லது அதே கோட்பாட்டில் தினத்தந்தி நிற்கிறதா என்பது தனிக்கதை. சி.பா. ஆதித்தனார், இருந்தவரை தினத்தந்தி பத்திரிகையை முக்கியமான நாளிதழாக வளர்ச்சிப் பாதைக்கு உயர்த்தினார். காரணம், அன்று விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்றிருந்தது. கூடுதலாக, இந்தி எதிர்ப்பு போராட்டமும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ் மக்களுக்கு முக்கியமான கருத்துகளைக் கூறும் பொருட்டு எளிய வாக்கியங்களில் அமைந்த கட்டுரைகள் தேவைப்பட்டன. இதற்காக பின்தங்கிய எளிய பகுதிகளிலிருந்து ஆட்களைத் தேர்ந்தெடுத்து நிருபர்களாக்கினார் ஆதித்

காந்தி தீர்த்து வைத்த ஆற்றுநீர் பஞ்சாயத்து! - காந்தி 150!

படம்
காந்தி @ 150 காந்தி இன்று வாழ்ந்தால் இந்தியாவில் நடைபெறும் பூசல்களுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என கண்ணை மூடி யோசித்தால் என்ன தோன்றுகிறது? அப்படியே பலரும் தூங்கிச் சாய்வார்கள். ஆனால் இந்த கான்செஃப்டில் நாங்கள் யோசித்து ஓர் கட்டுரை எழுதினோம். இது ஓகே ஆனால் அடுத்து அணு உலையோ என்று கூட பயம் வந்தது. பயப்படாதடா சூனா பானா என்று முதுகை நாமே தட்டிக்கொடுத்து சமாளித்து எழுதிய ராவான கட்டுரை. இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களில் முக்கியமானவை, நதிகள். இவை குறிப்பிட்ட மாநிலங்களில் உருவாகி, அவை செல்லும் பாதையிலுள்ள பல்வேறு மாநிலங்களை வளப்படுத்துகிறது.  உதாரணத்திற்கு காவிரி நதி. கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி எனுமிடத்தில் காவிரி நதி உற்பத்தியாகிறது. இந்த நதி தோன்றிய இடத்திலிருந்து பாய்ந்து சென்று கர்நாடக மாநிலத்திலுள்ள பல்வேறு நகரங்களை வளப்படுத்துகிறது. பின்னர், தமிழ்நாட்டிலுள்ள திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை வளப்படுத்தி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பல்லாண்டுகளாக காவிரியின் நீர்வளத்தை பங்கிடுவதில் கர்நாடகம் - தமிழகத்திற்கிடையே கருத்துவேறுபாட

உடல்நலத்திற்கு குடல் நலம் மிக முக்கியம் - மேகன் ரோசி

படம்
நேர்காணல் மேகன் ரோசி, ஊட்டச்சத்து வல்லுநர், கிங் கல்லூரி லண்டன் தம்பதிகள் நெருக்கமாக இருக்கும்போது முத்தமிட்டால் பாக்டீரியாக்கள் பரிமாறப்படும் என்கிறீர்களே? நம்முடைய எச்சிலில் நிறைய பாக்டீரியாக்கள் உள்ளன.அவை முத்தமிடும்போது இணையரின் வாயிற்குள் செல்கிறது. இது அவர்களின் உணவுப்பழக்கத்தை மாற்றுகிறது. உடல்பருமன் சார்ந்த பிரச்னைகளுக்கும் இதுவே காரணம். எனவே தம்பதிகள் தம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். நீங்கள் எப்படி வயிறு சார்ந்த உணவு வல்லுநர் ஆனீர்கள். என்னுடைய பாட்டி குடல் சார்ந்த புற்றுநோயால் காலமானார். தினசரி, சிகிச்சை பலனளிக்காமல் அவர் வயிற்றுவலியால் துடித்ததைக் கண்டேன். பலரும் சிறுநீரகம், குடல் பாதிப்பு என இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்வதில்லை. எனவே நான் குடலிலுள்ள நுண்ணுயிரிகளின் மீது கவனம் செலுத்த தொடங்கினேன். இதன் விளைவாகவே  உணவு மீது ஆர்வம் கொண்ட நான், குடல் சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீச்சல் குழு கூட பதற்றம் கொண்டு அவதிப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு செய்யப்பட்ட சோதனையில் குடல் சா

கலைந்துபோன கனவு - இந்திய சுயராஜ்ஜியம் - காந்தி

படம்
pixabay இந்திய சுயராஜ்ஜியம் காந்தி ரா.வேங்கடராஜூலு இன்று இந்தியா பெரும் சிதைவில் உள்ளது. கலாசாரம், மதிப்பீடுகள் என அனைத்திலும் பிரதானமாக பணமே உள்ளது. மேலும் ஒருவர் கூறும் கருத்தை மற்றொருவர் பயத்துடன் ஆமோதிக்க வேண்டிய  கட்டாயம் உள்ளது காரணம், கருத்தை கூறுபவரின் பின்னே ஆயுதங்களுடன் கும்பல் நிற்கிறது. இவர்களின் தலைவர் ஆல் இஸ் வெல் என்று அயல்நாட்டில் சொல்லும்போதே, உள்நாட்டில் இறைச்சி சாப்பிட்ட காரணத்திற்காக ஒருவர் கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். காரணம், அவர் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணம்தான். உ.பியில் மதிய உணவுத் திட்டத்தில் நடந்த  ஊழல் உண்மையைச் சொன்ன பத்திரிகையாளர்  மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதியப்படுகின்றன. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று இனி கூறுவது கஷ்டம். இந்து கும்பலை விரட்டி, கலவரத்தை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்திய போலீஸ்காரர்,  திட்டமிட்டு கொலை செய்யப்பட மாநில முதல்வரே உதவுகிறார்.  இதுபோன்ற சிதைவுகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. மற்றொரு அபாயம், அடிப்படைவாத தலைவர்கள் ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வாதிகாரத்த

கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கிறதே ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி கண்ணாடி பாட்டில்களிலிருந்து எடுத்து குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கிறதே? அமெரிக்கப் படங்கள் நிறையப் பார்ப்பீர்கள் போல. ஆனால் அது உளவியல் சார்ந்ததே. இன்று கடைகளில் பாலிமர் அதாவது பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படுவது குறைந்து விட்டது. மற்றபடி பிளாஸ்டிக், கேன் என்பது வெரைட்டி காட்டும் வேலை. அதில் சுவை மாறுவது என்பது உங்கள் மனநிலையின் விளையாட்டு. நன்றி - பிபிசி

அழுக்கு நல்லதா? கெட்டதா?

படம்
மிஸ்டர் ரோனி படுசுத்தமாக சிலர் இருக்கிறார்கள். சிலர் சோப்புகளை பயன்படுத்தினால் அலர்ஜி என்கிறார்கள். எதுதான் சரி? பொதுவாக சுத்தம் என்பது டெட்டால் பாட்டிலை 25 ரூபாய்க்கு வாங்கி வந்து நீரில் கலந்து குளித்தால் வருவதல்ல. இயற்பாக உடலில் தோன்று இறந்த செல்களை அகற்ற குளித்தால் போதும். ஏன் சோப்பு போட்டு குளிக்கிறோம் என்றால் செல்களுடன் எண்ணெய் பிசுக்கையும் அகற்றவே. நமது தோலில் எவ்வளவுதான் அகற்றினாலும் போகவே போகாத ஆயிரம் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் பூஞ்சைகள் உண்டு. கடுமையான உடல் உழைப்பில் அல்லது வெயிலால் வெளிவரும் வியர்வைக்கு பொதுவாக மணம் கிடையாது. ஆனால் உடலிலுள்ள பாக்டீரியாக்கள் அதில் செய்யும் சில வேதிவினை வேலைகளால் அதில் வாசனை உருவாகிறது. இதனை நாற்றம் வீச்சம் நெடி என வைத்துக்கொள்ளுங்கள். தோலில் வாழும் பாக்டீரியாக்கள் ஹாலிவுட் பல சைக்கோ வில்லன்களல்ல. அவை, ஸ்டாபைலோகாக்கல், ஸ்ட்ரெப்டோகாக்கல் ஆகிய பாதிப்புகளையும் தடுக்கிறது. குளிப்பது தவறில்லை. தரமான டிஎஃப்எம் அதிகமுள்ள சோப்புகளை வாங்கி குளியுங்கள். அவ்வளவுதான். -பிபிசி

நிதானமான ஆவி! - பழிக்குப்பழியில் வருகிறது கொட்டாவி

படம்
சௌபர்ணிகா - கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் விலை - 65 சின்னத் திருமேனி ஸ்ரீகுமார், எலும்புக்கூடு ஒன்றை கல்லூரி லேபில் ஒன்று சேர்க்கிறார். இதன் விளைவாக சக்தி பெறும் ஆத்மா அவரை எதிரிகளை பழிவாங்க உதவக்கோருகிறது. அதற்கு அவர் இசைய, நேரும் பல்வேறு பிரச்னைகள், ஹோமங்கள், ஏவல்கள், பில்லி சூனியங்கள்தான் கதை. முழுக்க யூ சர்டிபிகேட் கதை. ஸ்ரீதேவி எனும் பெண் சொத்துக்காக்க சந்து நாயரால் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்க ஸ்ரீகுமாரைப் பயன்படுத்துகிறார். ஸ்ரீகுமார், நம்பூதிரி குடும்பம் என்றாலும் அவருக்கு மாந்த்ரீகத்தில் அனுபவமில்லை. எனவே, அவரின் குலதெய்வமான பகவதி தன் சக்தியை அவருக்கு கொடுத்து உதவுகிறாள். அது என்ன? அவரின் எதிரிகள் யார்? என்பதுதான் கதை. காதல், செக்ஸ் இல்லாத கதை என்பதால் கதையில் பெரிய வேகம் இல்லை. எதிரிகளின் நோக்கம் சொத்து என்பது ஓகே. அதனைக் காப்பாற்றுபவருக்கு அதன் மீதான தீவிர மோகம் இல்லை என்பதால், கதை பாதியில் நொண்டியடிக்கிறது. ஸ்ரீதேவியின் ஆவி கூட நாளைக்கு பழிவாங்கிக்கொள்ளலாம் என்று நிதானமாக இருப்பது கதையினை நீட்டிக்க என்றே புரிந்துகொள்ள முடிகிறது. சன்டிவியில் திகில்

சவுண்ட் அதிகம் சக்தி குறைவு - அர்ஜூன் பட்டியாலா

படம்
அர்ஜூன் பட்டியாலா - இந்தி இயக்குநர் - ரோஹித் ஜக்ராஜ் கதை - ரிதேஷ் ஷா, சந்தீப் லெய்ஷெல் ஒளிப்பதிவு - சுதீப் சென் குப்தா இசை - சச்சின் - ஜிகார் படம் பார்த்து சிரிப்பது ஒருவகை என்றால், படத்தில் நடித்தவர்களே பார்வையாளர்களுக்கும் சேர்த்து சிரித்து காமெடி செய்வது நம்மைக் கொல்வது இரண்டாம் வகை. அர்ஜூன் பட்டியாலா இரண்டாம் வகை. அவர்களே சிரிக்கிறார்கள். நாம் சேட்ஜியோடு சல்மான்கான் படத்திற்கும் போனது போல, அவர் சிரிக்கும்போது ஜோக் போல என்று  சிரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்த படத்தை எப்படி காசு போட்டு எடுத்தார்களோ? படத்தை தியேட்டரிலும் போட்டு  தைரியமாக படத்தில் டிக்கெட் கொடுத்து விற்பதை உண்மையில் மனசாட்சி உள்ளவர்கள் செய்ய மாட்டார்கள். காசு கொடுத்து பார்ப்பவர்களுக்கு கீர்த்தி சனோனின் மெல்லிய வாழைத்தண்டு வழுவழு இடுப்பு மட்டுமே பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. மற்ற எதுவுமே.. அடிக்க வராதீர்கள்.  படத்தில் மற்ற விஷயங்கள் எதுவுமே உருப்படியாக இல்லை என்று சொல்ல வந்தேன். கதையின் முட்டைக்கரு: ஃபெரோஸ்பூர் நகரை குற்றங்களற்ற ஸ்வச் பாரத் ஆக்குவதே சப் இன்ஸ்ப

செக்ஸை ஊக்குவிக்கும் தர்ப்பூசணி!

படம்
மிஸ்டர் ரோனி @ ஏன்?எதற்கு?எப்படி? உணவுக்கும் செக்ஸூக்கும் சம்பந்தம் உண்டா? மேட் இன் சீனா டிரெய்லர் பார்த்துவிட்டு கேள்வி கேட்கிறீர்கள் போல. உணவு என்பது உடலுக்கான அனைத்து தேவையை நிறைவு செய்வது என்று புரிந்துகொள்ளுங்கள். உடலின் விந்து உற்பத்தி உடலின் இயற்கையான செயற்பாடுகளில் ஒன்று. உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் உடலைப் பராமரிக்க உதவுகின்றன. தர்ப்பூசணி பழம் இதுபோன்ற சமாச்சாரத்தில் கெட்டி. இதிலுள்ள எல் சிட்ருலின் என்ற வேதிப்பொருள், எரக்டைல் டிஸ்பங்க்ஷன் எனும் பாதிப்பை சரி செய்கிறது என கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தாலியைச் சேர்ந்த  பல்கலைக்கழகம் இதற்கான ஆராய்ச்சியை 2011 ஆம் ஆண்டு செய்தது. நன்றி: பிபிசி

தற்செயல் என்பதை நம்பலாமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? @ மிஸ்டர் ரோனி தற்செயல் என்பதை நம்பலாமா? பொதுவாக இதனை நிகழ்தகவு என்ற வகையில் புரிந்துகொள்ளலாம். ஒரே நாளில் சிலருக்கு பிறந்தநாள் வருவது, குறிப்பிட்ட தினத்தில் ஒரே கலரில் டிரெஸ் போட்டு வருவது, ஒரே யோசனையை இருவரும் முன்வைப்பது என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதனை எண்கள், நாள், குணம் என தொடர்புபடுத்தாதீர்கள். அது நமக்கு சிக்கலையே தரும். ஒன்றுபோல இரு கார்கள் நிறுத்தப்பட்டிருப்பது, ஒரே டிசைன் போன்ற கவுன்களை பெண்கள் அணிந்து ஷாப்பிங் மாலில் சந்திப்பது என்பது தினமும் நாம் பார்த்து வருவதுதானே? ஆனால் தனித்தன்மையை விரும்புபவர்கள் நிச்சயம் தற்செயலாக இப்படி நடப்பதை விரும்ப மாட்டார்கள். பிக்பஜாரில் நீங்கள் எடுக்கும் உடையை அதேபோல இன்னொருவரும் எடுத்து அணிந்தால், நீங்கள் அதை ரசிப்பீர்களா? மேலும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் நண்பர்களாக அமைவார்கள். இதை நீங்கள் தற்செயல் என்கிறீர்களா? அப்படி கூறமுடியாதுதானே. எனவே இதனை சோழி போட்டு பார்க்காமல் நமது வேலையை நாம் பார்ப்பதே நல்லது. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்