இடுகைகள்

சீனு வைட்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருதலைக்காதலில் இழுத்துவிடப்படும் பெருமாள் பக்தனின் நிலை! - நமோ வெங்கடேசா - வெங்கடேஷ், த்ரிஷா

படம்
    நமோ வெங்கடேசா - தெலுங்கு  விக்டரி வெங்கடேஷ், த்ரிஷா, பிரம்மானந்தம். முகேஷ் ரிஷி, அலி இயக்கம் சீனு வைட்லா   வெங்கட்ரமணா, ஹைதராபாத்தில் தனது சித்தப்பா குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தொழிலே கலை நிகழ்ச்சிகளை செய்வதுதான். இந்த நிலையில் வயசாகிறதே திருமணம் செய்யலாம் என நினைத்து ஜோதிடம் பார்க்கிறார்கள். ஆனால் ஜோதிடர் போட்ட சோளிகளில் ஒன்று எந்த பக்கமும் திரும்பாமல் நடுவில் நிற்கிறது. அதாவது கல்யாணம் நடந்தாலும் நடக்கும். இல்லையானாலும் சரி. வெங்கட்ரமணாவைப் பொறுத்தவரை அவர் பிறரை ஏமாற்றுவதில்லை. அவரும் ஏமாறுவதில்லை. இப்படி இருப்பவருக்கு பாரிசில் நிகழ்ச்சி நடத்த அழைக்கிறார்கள். அழைத்த ஆள் லேசுபட்டவரில்லை. ஆனால் அவரையும் வெங்கட் ரமணா எந்த கல்மிஷம் இல்லாமல் நடந்துகொண்டு பீதிக்குள்ளாக்குகிறார். பிரசாத் என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரமணாவை தனது சொந்தக்காரப் பெண் காதலிப்பது போல மாயையை உருவாக்குகிறார். அதையும் வெங்கி நம்புகிறார். ஆனால் உண்மையில் அவர் காதலிக்கும் பெண் யார், அவர் யாரை விரும்புகிறார், பிரசாத்தின் பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா என்பதை நகைச்சுவையாக சொல்ல

கெத்து காட்டும் அப்பா, பம்மி பதுங்கும் மகன் - அந்தாரிவாடு - தெலுங்கு - சிரஞ்சீவி, தபு, ரைமான் சென்

படம்
                  அந்தாரிவாடு சிரஞ்சீவி, ரைமா சென், தபு இந்த படம் சினிமா என்றாலும் கூட பார்க்க சன் டிவி சீரியல் போலவே இருக்கும். கவனம் படத்தில் இரண்டு சிரஞ்சீவி. ஒருவர் மென்மையானவர். இன்னொருவர் அடிதடி, சவுண்டு பார்ட்டி. அப்பா, சிரஞ்சீவி தான் அந்தாரிவாடு. இவர், கட்டிடம் கட்டும் மேஸ்திரியாக இருக்கிறார். தனது மனைவி இறந்தபிறகு, திருமணம் செய்யாமல் மகனை நல்லபடியாக வளர்த்து கல்வியில் உயர உதவுகிறார். அவரும் படித்து முடித்து டிவி ஒன்றில் ஃபேஸ் டு ஃபேஸ் எனும் நிகழ்ச்சி நடத்தும் நெறியாளராக நாட்டுக்கே அறிந்த முகமாக இருக்கிறார். இந்த நிலையில் அப்பா சிரஞ்சீவி, தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அடிதடியில் இறங்குவது வழக்கம். இப்படி மக்களுக்கு நீர் கொடுக்கும் தண்ணீர் லாரியை பார்ட்டிக்கு பயன்படுத்தும் காண்ட்ராக்டர் ஒருவரின் மகனை போட்டு சாத்து சாத்து என கனல்கண்ணன் உதவியுடன் அடிக்கிறார். இதனால் அவர்கள் கூட்டம் சிரஞ்சீவியை அதாவது கோவிந்த ராசுலுவை தாக்க திட்டம் தீட்டுகிறது. இந்த நேரத்தில் கோவிந்தராசுலுவுக்கு புதிய கட்டுமான வேலை கிடைக்கிறது. அதை கொடுப்பது, வீரேந்திரா எனும் கோவிந்தராசுலுவின் பழைய நண்பர்