இடுகைகள்

இலவச நூல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனமொழி பேசுவதற்கான இலவச நூல் - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை கொண்டது!

படம்
          இனிய நண்பர்களுக்கு வணக்கம் முன்னாள் விகடன் மாணவப் பத்திரிகையாளரான பயணிதரன் எழுதியுள்ள இலவச நூல் இது. இந்த நூலை அவரது பயணி என்ற வலைத்தளத்தில் சென்று தரவிறக்கிக் கொண்டு படிக்கலாம். வலைத்தளத்தில் சந்தாதாரராக இணைந்தால் நூலை இலவசமாக அளிக்கிறேன் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வலைத்தளத்தை விளம்பரப்படுத்த சிறந்த யோசனை. ஆனால், நூலை உடனே தரவிறக்க முடியவில்லை. வலைத்தளத்தில் இணைந்து ஏறத்தாழ சில மாதங்கள் கழித்து மின்னஞ்சலில் நூலை அனுப்பி வைத்தார். அனேகமாக அறிவிப்பை வெளியிட்டுவிட்டு நூலை எழுதிக் கொண்டிருந்திருக்கக்கூடும். கிரியேட்டிவ் காமன் உரிமையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நூலை பிறருக்கும் நீங்கள் பகிர்ந்து வாசிக்கலாம்.    

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட இலவச மின்னூல்கள்!

படம்
        கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட நூல்கள் இவை. இப்போதைக்கு ஃப்ரீதமிழ் இபுக்ஸ் வலைத்தளம், டெலிகிராமின் இலவச நூல் சேவை சேனல்களில் கிடைக்கிறது. நாளைக்கு யாராவது ஒருவரின் மனம் புண்பட்டால் உடனே ஃப்ரீதமிழ் இபுக்ஸில் இருந்து நீக்கிவிடுவார்கள். டெலிகிராம் சேனலில் அந்த சூழல் வராது என நினைக்கிறேன். எப்படி இருந்தால் என்ன, இலவச நூல் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். அவ்வளவுதான். பூனை எலியைப் பிடித்தால் சரிதான். அதுவரை அதன் நிறம் கறுப்பா, வெள்ளையா என விவாதிக்க தேவையில்லை என சீன முதன்மைத் தலைவர் டெங் ஷியாபோபிங் கூறியது நினைவுக்கு வருகிறது. அதை நாம் நினைவில் கொள்வோம். கிரியேட்டிவ் காமன் உரிமை என்பதால் குற்றவுணர்ச்சியின்றி நூலை தரவிறக்கி வாசியுங்கள். இலவசமாக கொடுத்தால் தரமாக இருக்காது என முன்முடிவோடு நூல்களை புறக்கணிக்காதீர்கள். இந்த நூல்கள் அனைத்து பல்வேறு ஆங்கில நூல்களை, இதழ்களை வாசித்து எழுதப்பட்டவை. தரமானவை.    நன்றி சீனிவாசன், கணியம் வலைத்தள நிறுவனர் எழுத்தாளர் பாலகிருஷ்ண மேனன்