இடுகைகள்

கேலக்ஸ் ஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறிய இமேஜரி ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து கொடுக்கும் கேலக்ஸ் ஐ! - சுயாஸ் சிங்

படம்
  சுயாஸ் சிங், கேலக்ஸ் ஐ கேலக்ஸ்ஐ குழுவினர் சுயாஸ் சிங், இயக்குநர், துணை நிறுவனர் கேலக்ஸ் ஐ இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான தேவைகளுக்கான இமேஜிங் ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறது, கேலக்ஸ் ஐ. இந்த நிறுவனம், உலகளவில் உள்ள இமேஜிங் ரேடார் சந்தையை குறிவைத்துள்ளது. 40 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இந்த சந்தை   வளர்ந்துள்ளது. தற்போது இந்தியா, இமேஜிங் ரேடார் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் மற்றும் பிற வெளிநாடுகளிடம் பெற்று பயன்படுத்தி வருகிறது. அரசியல் சூழல்கள் மாறும்போது வெளிநாடுகள், தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது நிறுத்தப்படும். எனவே, உள்நாட்டில் அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியம். அந்த வகையில் கேலக்ஸ் ஐ என்ற தனியார் நிறுவனம் இமேஜிங் ராடார் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் வணிக மதிப்பு 15 மில்லியன் டாலர்களாக உள்ளது. மல்டி சென்சார் இமேஜிங் தொழில்நுட்பத்தில் கேலக்ஸ் ஐ மூன்று காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சிறிய செயற்கைக்கோள்களை , போனில் உள்ளடங்கும் அளவிலான பொருட்களைக் கொண்டு தயாரித்து வருகிறது