இடுகைகள்

ஆய்வகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆய்வகத்தில் பாதுகாப்பாக ஆய்வுகளை செய்வதற்கான முன்னெச்சரிக்கை முறை!

படம்
  ஆய்வகத்தில் பாதுகாப்பு! மாணவர்கள் ஆய்வகத்தில் அறிவியல் சோதனைகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க உதவும் முன்னெச்சரிக்கை குறிப்புகள்தான் இவை.  பாதுகாப்பு கண்ணாடிகள் (Safety Googles) திரவ வடிவில் உள்ள  வேதிப்பொருட்களைக் கையாளும்போது, அவை குழாய்களிலிருந்து வெளியே சிதறும் வாய்ப்புகள் அதிகம். இச்சூழலில், மாணவர் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்திருப்பது அவசியம்.  பன்சன் பர்னர்ஸ் (Bunsen burners) பன்சன் பர்னரைப் பயன்படுத்தும்போது, அருகில் நிறைய பொருட்களை வைக்கக் கூடாது. நெருப்பு சுடரில், மாணவரின்  தலைமுடி படாமல் கவனித்துக் கொள்வது முக்கியம். தீச்சுடரில் எத்தனால், ஆல்கஹாலை எப்போதும் சூடு செய்யக்கூடாது.  சோதனைக்குழாய் (Test tube) சோதனைக் குழாய்களை சூடுபடுத்தும்போது, அவற்றை கிளாம்ப் கருவி (Clamp) கொண்டு பிடிக்கவேண்டும். மேலும் சூடு தாங்கும் கையுறைகளையும் பயன்படுத்தலாம். கண்ணாடி குடுவைகளை எப்போதும் மேசையின் மையப்பகுதியில் வைத்திருப்பது அவசியம்.  கெமிக்கல் ஃப்யூம் ஹூட் (Chemical Fume Hood) ஆபத்தான வேதிப்பொருட்களை சோதனைக் குழாய்களில் வைத்து சோதிக்கும்போது, எழும் புகை வெளியே செல்ல கெமிக்கல் ஃப்யூம்

ஆய்வகத்தில் தயாரிக்கலாம் பாலை....

படம்
  பால் மற்றும் முட்டை ஆகிய உணவுப்பொருட்களை ஆய்வகத்தில் தயாரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.   அமெரிக்காவிலுள்ள பர்ஃபெக்ட் டே என்ற நிறுவனத்தைத் தொடங்கிய உயிரி பொறியாளர் ரியான் பாண்டியா, சோயாவிலிருந்து பால் பொருட்களைத் தயாரித்து வருகிறார். இந்த பாலில் எதிர்பார்க்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இப்போது வரை க்ரீம் சீஸை தயாரிக்க முடியாவிட்டாலும் ஐஸ்க்ரீமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த வகையில் விலங்குகளுக்கு மாற்றாக தாவரங்களின் புரதங்களிலிருந்து உணவுப்பொருட்களைத் தயாரிப்பது புதிதல்ல. ரியானின் நிறுவனத்தைப் போலவே அங்கு வேறு பல நிறுவனங்களும் பால் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.  இதில் புதுமையான விஷயம்,நொதிக்க வைக்கும் முறையில்  நுண்ணுயிரிகளிடமிருந்து குறிப்பிட்ட வேதிப்பொருளை பெற்று அதிலிருந்து பால் போன்ற பொருட்களை தயாரிக்கும் முயற்சிதான்.  இதனை புதிய முறை என்று கூறமுடியாது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரொட்டி, யோகர்ட், சீஸ், மதுபானங்கள் நொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.  தொண்ணூறுகளில் அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு(F

தலையில்லாத கோழி வாழுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி கோழி தலையில்லாமல் எத்தனை நாட்கள் வாழும்? 1940 ஆம் ஆண்டு அமெரிக்காவில், மைக் என்ற கோழி தலையின்றி பதினெட்டு மாதங்கள் உயிர் வாழ்ந்தது. கோடாரியால் தலை வெட்டப்பட்ட  கோழி இது. தாய்லாந்தில் மார்ச் 2018 ஆம் ஆண்டு, இதுபோல கோழி ஒன்று வாழ்வதாக பதிவு உள்ளது. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் உண்டு. தலையில்லாமல் வாழ்வது பெரும்பாலும் கடினம். ஏனெனில் தலை வெட்டப்பட்டபிறகு ரத்தம் அதிகம் வீணாகி விடும். எனவே கோழி உயிர்பிழைப்பது மிக கடினம். பாதுகாக்கப்பட்ட சூழலில் இது சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக ஆய்வகம்.