அதிகாரச் செல்வாக்கு பெற்ற தொழிலதிபர்கள் - பெண்கள்
பிட்டாயா வோரபன்யாசாகுல் அதிபர், இயக்குநர், குருங்தாய் கார்ட் தாய்லாந்து pittaya vorapanyasakul krungthai card தாய்லாந்து நாட்டில் நிதிச்சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் குருங்தாய். இந்த நிறுவனம் கடன் அட்டைகளை மக்களுக்கு வழங்கி அதன் வழியாக நிதிச்சேவைகளை செய்து வருகிறது. பிட்டாயா, கடந்த ஜனவரி மாதம், குருங்தாயின் அதிபர், இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னர், குருங்தாய் சொத்து நிர்வாக நிறுவனத்தின் கணக்கு தணிக்கை கமிட்டியின் தலைவர், உறுப்பினாக செயல்பட்டு வந்தார். ரோடா ஏ ஹூவாங் அதிபர், இயக்குநர், ஃபில்இன்வெஸ்ட் டெவலப்மென்ட் நிறுவனம் பிலிப்பைன்ஸ் rhoda a huang fillinvest development 2023ஆம் ஆண்டு நிறுவனத்தின் இயக்குநர், அதிபராக பொறுப்பேற்ற ரோடா, கோடியானுன் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. முதல் வெளிநபராக நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த உள்ளார். இதற்கு முன்னர், ஜேபி மோர்கன் சேஸ், கிரடிட்சூஸ் பிலிப்பைன்ஸ், பிபிஐ கேபிடல் முதலீட்டு வங்கி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஃபில் இன்வெஸ்ட் நிறுவனம், வங்கி, நிலம், மின்சாரத்துறையில் இயங்கி வருகிறது. ரோடா, சூரிய ...