நம்பிக்கையூட்டும் ஸ்டார்ட்அப்கள்
நம்பிக்கையூட்டும் ஸ்டார்ட்அப்கள் ஏரோஸ்ட்ரோவிலோஸ் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், மைக்ரோ கேஸ் டர்பைன்களைத் தயாரித்து வருகிறது. கழிவுப்பொருட்களில் இருந்து கிடைக்கும் பல்வேறு வித எரிபொருட்களை கேஸ் டர்பைன்கள் பயன்படுத்தி இயங்குவதாக வடிவமைத்துள்ளனர். வாகனத்துறைக்கான டர்பன்களைத் தயாரித்த நிறுவனம், பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. தற்போது ஜெனரேட்டர்களுக்கான பகுதிப்பொருட்களைத் தயாரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட ஏரோஸ்ட்ரோவிலோஸ், மைக்ரோ கேஸ் டர்பைன்களை தயாரித்து வருகிறது. இதன் நிறுவனர்கள், ரோகித் குரோவர், பிரதீப் தங்கப்பன்,சத்யநாராயணன் சக்ரவர்த்தி. பெற்ற முதலீடு, 0.5 மில்லியன் டாலர்கள். பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் 2015ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. நிறுவனர்கள், ரோகன் கணபதி, யாஸ்காஸ் கரணம், விண்வெளி போக்குவரத்து, விண்வெளி டாக்சி ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தற்போது வரை 11.3 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றிருக்கிறார்கள். 2024ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழ் தலைமைத்துவ விருதை வென்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இது. கடந்த...