நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு கருத்துகளை கூறுகிற கட்டுரை நூல்!
உறைப்புளி செல்வேந்திரன் கட்டுரை நூல் இந்த நூல் கிண்டிலில் வெளியானது. மொத்தம் எழுபத்தாறு பக்கங்கள். மொத்தம் பத்து கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே வாசகர்களுக்கு வாசிப்பு பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி நிறைய விஷயங்களைக்கூறுகிறது. நூலின் இறுதியாக இடம்பெற்றுள்ள கட்டுரை, நவீன கால இளைஞர்கள் தினசரி வாழ்க்கையைக் கூட அணுக முடியாமல் இருக்கிறார்கள். அதேசமயம் அவர்கள், சமூகத்தின் அனைத்தையும் மொக்கை என்ற ஒற்றைச் சொல் மூலம் எப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விமர்சனமும் கண்டனமுமாக பேசியுள்ளது. அக்கட்டுரை இறுதியாக இடப்பெற்றது சிறப்பானதுதான். வாசிப்பு ஏன் முக்கியம் என்பதை மறக்கமுடியாதபடி காட்டமாக கூறுகிறது. கல்லூரியொன்றில் ஆற்றிய உரை, எழுத்தாக்கமாக மாற்றப்பட்டு இந்து தமிழ் திசையில் வெளியாகியுள்ளது. நடப்பு விஷயங்களோடு நூலின் தொடர்பு பற்றி தேடினால், இயக்குநர் மிஷ்கின் அகப்பட்டுவிடுகிறார். நூலில் அறம் புத்தகம் வெளியிடப்பட்டபோது அந்த விழாவுக்கு அவர் வருகை தந்தபோது நடந்த விஷயங்களைப் பற்றி விவரிக்கிற கட்டுரை ஒன்றுள்ளது. அந்தக்கட்டுரை, மிஷ்கினின் எளிய மனிதர்கள...