இடுகைகள்

வயது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்?

 அறிவியல் தகவல்கள் மிஸ்டர் ரோனி நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்? இப்போதுதான் உடையை வாங்கினேன். ஆனால், அதற்குள் இந்த நாகரிகம் பழசாகிவிட்டதா? காலம் வேகமாக ஓடுகிறது என சிலர் ஆச்சரியப்படுவார்கள். அவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயது ஆசாமிகளாக இருப்பார்கள். குழந்தையாக இருப்பவர்களுக்கு நேரம் என்பது அப்படியே உறைந்து நிற்பது போல தோன்றும். இளையோருக்கு குழந்தையிலிருந்து நீண்ட தொலைவு பயணித்து வந்தாலும், காலம் வேகமாக நகர்ந்திருப்பதை அறியமாட்டார்கள். எதிர்காலம் என்ன விஷயங்களைக் கொண்டிருந்தாலும் நடைமுறை மட்டுமே நிஜம் என்பதை புரிய சிலகாலம் தேவை.  ஒரு மனிதர் இயல்பாக நடைபாதையில் நடந்து செல்லும்போது சுற்றியுள்ள கட்டுமானங்கள் அப்படியே மாறிக்கொண்டே நவீனமாக மாறுவது போலத்தான் காலம் மாறுவதை கருதவேண்டும். காலம் வேகமாக நகருவதை நடுத்தர வயது கொண்டவர்கள் உணர்வார்கள்.  டிமென்சியா என்றால் என்ன? டிமென்சியா என்றால் மூளையில் உள்ள ஒருவரின் அறிவுத்திறன்களை இழக்கும் நோய் என்று கூறலாம். திட்டமிடல், கருத்துகளை கோர்வையாக கூறுவது, சுயமாக தன்னை கண்காணித்தல், நினைவுகள் ஆகியவற்றை நோயாளி இழந்துவிடுவா...

விலங்குகளின் வயதை மனிதர்களோடு எப்படி ஒப்பிடுவது?

படம்
     அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆபத்தான நாய் இனங்கள் எவை? பிட்புல், ராட்வெய்லர், ஜெர்மன் ஷெப்பர்ட் என்பவை முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. இந்த வகை நாய்களை வளர்க்கும் முன்னர் அவை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். நாய்களுக்கு பயிற்சியும் முக்கியம். உங்கள் மாநிலம், நாட்டில் எந்த நாய் இனங்கள் வளர்க்கலாம், வளர்க்கக்கூடாது என அரசு விதிகளை உருவாக்கியிருக்கும். அதை பின்பற்றினால் எப்பிரச்னையும் எழாது. நாய்கள் ஊளையிடுவது எதற்காக? அதனுடைய இடத்தைப் பிற நாய்களுக்கு தெரிவிப்பதற்காக. ஊளையிடுதலை நன்றாக கவனித்தால் ஆம்புலன்சின் சைரன் போலவே ஒலிக்கும். மர்ஜோரி என்ற நாயின் பங்களிப்பு என்ன? மாங்கெரல் இன நாயான மர்ஜோரிக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதற்கு இன்சுலின் செலுத்தி உயிரைக் காத்தனர். மருத்துவத்துறையில் இதுபற்றி மருத்துவர்கள் ஆராய மர்ஜோரி உதவியது. குரைக்காத நாய் இனம் எது? பசென்ஜி என்ற நாய் இனம் குரைப்பதில்லை. மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழமையான நாய் இனம். விலங்குகளின் வயது, மனிதர்களின் வயது எப்படி ஓப்பீடு செய்வது? நாய்களுக்கு ஒரு வயது என்றால் அது மனிதர்களின் பதினை...

பறவைகள் வலசை செல்வதன் காரணம்!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி எறும்பால், எவ்வளவு எடையை தூக்க முடியும்? பத்து முதல் இருபது மடங்கு எடையைத் தூக்க முடியும். இதை அதன் எடையோடு ஒப்பிட வேண்டும். சில எறும்பு இனங்கள், தனது எடையை விட ஐம்பது மடங்கு அதிகமாக தூக்குவதும் கூட உண்டு. எறும்புகள் எடையை தூக்கிக்கொண்டு மரத்தில், அல்லது பாறையில் செங்குத்தாக ஏறுவதையும் அதன் திறமையின் பங்காக சேர்த்துக்கொள்ளுங்கள். முதுகில் டாடா நானோ காரை கட்டிக்கொண்டு உலகின் உயரமான மலைச்சிகரத்தில் நீங்கள் ஏற முடியுமா? யோசித்துப் பாருங்கள். சுறாக்களின் பற்கள் பற்றி கூறுங்கள். சுறாக்களுக்கு, அதன் வாழ்நாளில் முளைக்கும் பற்களின் எண்ணிக்கை இருபது ஆயிரம். ஆறு முதல் இருபது வரிசையில் பற்கள் இருக்கும். முன்னே உள்ள பற்கள் இரையை பிடித்து கடித்து துண்டாக உதவுகிறது. மீன்களின் வயதை எப்படி அறிவது? அதன் செதில்களை வைத்து அறியலாம். மரங்களின் வயதை எப்படி அறிகிறோம். அதன் உட்புறத்திலுள்ள வளைய வடிவம் உதவுகிறது அல்லவா? அதே உத்திதான் இங்கும் உதவுகிறது. மீன்கள் செல்லும் திசையை சட்டென மாற்றிக்கொள்வது எப்படி? அப்படி மாற்றிக்கொள்ளாவிட்டால் சட்டியில் குழம்பாக கொதித்துக்கொண...

வயதாவதை தடுக்கும் உடற்பயிற்சி!

படம்
  வயதாக கூடாது என நினைப்பது தவறு கிடையாது. அதற்கு என்ன செய்யலாம் என நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதிக ஆயுள் கொண்டவர்களை ஆய்வு செய்து உணவு, வாழ்க்கைமுறையைக் கூட பதிவு செய்து வருகிறார்கள். உண்மையில் உணவு, லோஷன், காய்கறி, பழம் என ஏதுமே உதவாது என்பதே உண்மை. காரணம், வயதாவதை, உடல் பலவீனமாவதை தடுக்க முடியாது. ஆனால் அதன் வேகத்தை உடற்பயிற்சி மூலம் குறைக்கலாம். குறிப்பாக இதயநோய்கள், வாதத்தை உடற்பயிற்சிகள் செய்வது குறைக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.  செல்களில் உள்ள நச்சை நீக்கினால்தான் ஒருவர் வயதாவதைத் தீர்க்க முடியும். அந்த வகையில் உடற்பயிற்சியே உதவுகிற கருவியாக உள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்பின் சுரக்கிறது. சோர்வை போக்குவதோடு, மூட்டுகளை இலகுவாக்குகிறது. உடல் முழுக்க ஆக்சிஜன் செல்வதை ஊக்கப்படுத்துகிறது. செல்களின் வயதை டிஎன்ஏவே தீர்மானிக்கிறது. இந்த செயல்பாட்டில் உடற்பயிற்சி தாக்கம் ஏற்படுத்துகிறதா என்று தெரியவில்லை.  இதுவரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் ஒரே நாளில் மாரத்தான் ஓடவேண்டியதில்லை. மெதுவாக பயிற்சிகளை ச...

'காதல் போதும்' - காதலன், 'செக்ஸ் அவசியம்' - காதலி! மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா

படம்
  மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் மை   ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் ஜப்பான் டிவி தொடர் ஜே டிராமா 9 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   தலைப்பில் தெரிகிறது அல்லவா…. அதுதான் கான்செஃப்ட். செக்ஸ் காமெடியை மையப்பொருளாக கொண்ட தொடர். ஷேர்ட் கோ வொர்க்கிங் பிளேஸ் அங்கு நிறையப் பேர் வேலை செய்கிறார்கள். கலைப்பொருட்களை ஆன்லைன் வழியாக வாடகைக்கு கொடுக்கும் நிறுவனத்தில் நாயகி, அவளது கல்லூரி கால தோழி, நண்பன் ஆகியோர் வேலை செய்கிறார்கள். அது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம். கல்லூரித் தோழி கேட்டுக்கொண்டதற்காக இந்த தொழிலுக்கு நாயகி வருகிறாள். மொத்தம் இரு பெண்கள், ஒரு ஆண் என மூவர் வேலை செய்யும் நிறுவனம். கோ வொர்க்கிங் ஸ்பேஸில் பொருட்களை புகைப்படம் எடுத்து அதை சந்தைப்படுத்தும் தொழிலில் உள்ள மூவரை, சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் புகைப்படக்கலைஞன் அழகாக கூடவே அமைதியாக இருக்கிறான். அவனுக்கும் சேர்த்து புறவயமான இயல்பு கொண்ட   நாயகியே பேசுகிறாள். தொழில்ரீதியாக நாயகியின் தோழி புகைப்படக்கலைஞன், சுயாதீனக் கலைஞன் என்பதால் அவனை தனது தொழிலுக்கு பயன்படுத்துகிறாள்....

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70! - அடுத்த சீன அதிபர் யார்?

படம்
  ஷி ஜின்பிங், சீன அதிபர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70 சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்திவருகிறார். இது அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு. மார்ச 2023இல் ஆட்சியை தக்கவைத்துள்ளவர், வாழ்நாள் முழுக்க அதிகாரத்தில் இருப்பதற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களை தனது அணியில் திரட்டியுள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்களை முற்றாக விலக்கியுள்ளார் என அசோசியேட் பிரஸ் தனது செய்தியில் கூறியுள்ளது. கடந்த ஜூன் பதினைந்தாம் தேதி அதிபர் ஷி ஜின்பிங் எழுபது வயதை எட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுடன பகை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அழுத்தத்தை சமாளித்து அதிகாரத்திலும் இருக்கிறார் ஷி ஜின்பிங். ஷி ஜின்பிங்கிற்கு எழுபது வயதாகிவிட்டது. அடுத்த அதிபராக யார் வருவார் என்ற கோணத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர்   சுன் ஹான் வாங் பார்டி ஆஃப் ஒன் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அடுத்து அதிபராக வருபவரின் சாத்தியங்களை அலசியிருக்கிறார். உண்மையில், சீனாவில் அட...

காதலியை பேருந்து விபத்தில் பறிகொடுத்துவிட்டு, வினோதமான நபராக மாறும் காதலன்! - ஸ்டில் 17- தென்கொரிய தொடர்

படம்
  ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 தென்கொரிய டிவி தொடர் யூட்யூப் – எஸ்பிஎஸ் வேர்ல்ட் கொரியாவின் சியோல் நகரம். இங்கு, பதினேழு வயதான காங் வூ ஜின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது, இசையை அனுபவித்து வாசிக்கும் பள்ளிச்சிறுமி ஒருத்தியை பார்க்கிறான். அவள் வயலின் வாசிப்பவள். பள்ளியில் போட்டியில் வாசித்து வென்று ஜெர்மனிக்கு பயிற்சிக்கு போகும் சூழலில் இருக்கிறாள். காங்கிற்கு, அவள் பெயர் தெரியாது. ஒருநாள் சைக்கிளில் வரும்போது, பள்ளிச் சீருடையுடன் சிறுமி ஒருத்தி நடைமேடையில் நிற்கிறாள்.   கைவிரல்களை முயல்போலாக்கி நிலவைப் பார்த்தபடி இருக்கிறாள். அப்போதுதான் தான் விரும்பும் சிறுமியின் பெயரை நோ சுமி என அறிகிறான். அந்த போஸை அப்படியே படமாக வரையும் காங், அவளிடம் கொடுத்து நட்பாக நினைக்கிறான். ஆனால், திடீரென நடக்கும் பேருந்து விபத்தில் நோ சுமி என்ற பெயர் கொண்ட சிறுமி இறந்துபோகிறாள். இதனால், காங் மனம் உடைந்து போகிறான்.   விபத்தான பேருந்தில் அன்றைக்கு பயணித்த காங், தான் விரும்பிய சிறுமிக்கு கலை அரங்கம் செல்ல தவறான வழியை சொல்லிவிடுகிறான். அந்த சிறுமியும் அதேப...

அறிவியல் முன்னேற்றத்தால் எளிமையான வாழ்க்கை - ஜித்து கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி பதில்கள் கே. அறிவியல் முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதா? ப. அறிவியல் கண்டுபிடிப்புகள் உங்கள் வாழ்க்கையை எளிதாக மாற்றவில்லையா என்ன? மின்சாரம் இருக்கிறது. உங்கள் அறையில் ஒரு ஸ்விட்சை தட்டினால் விளக்கு எரிகிறது. ஆகாயவிமானத்தில் ஏறினால் லண்டனிலிருந்து டெல்லிக்கு எளிதாக சென்றுவிடலாம். தொலைபேசி அறையில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உங்களுக்கு நண்பர்களோடு பேசத் தோன்றினால் அவர்களோடு பேசலாம். அறிவியல் கண்டுபிடிப்புகள் வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளன என்பது உண்மைதான். நோய்களை எளிதாக கண்டறிந்து தடுக்க முடிகிறது. அதேசமயம் அதே அறிவியல் மூலம்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை கண்டறிந்தனர். இதை வெடிக்க வைப்பதன் மூலம் பல லட்சம் மக்களை கொல்ல முடியும். நமது அறிவை விழிப்புணர்வோடும் அன்புடனும் சேர்த்து பயன்படுத்தினால் நம் வாழ்க்கையை நாமே அழித்துக்கொள்வதிலிருந்து காக்கலாம். கே. பெரிய மீன் சிறிய மீனை தின்று வாழ்வது இயல்பானதா? விலங்குகள் உலகில் நீங்கள் சொல்வது போல பெரிய மீன், சிறிய மீனை உணவுக்காக நம்பியிருக்கலாம். இது இயற்கையாக   அமைந்தி...

ஐரோப்பாவில் பட்டு சாலை வணிகத்தடம் உருவானதா? - உண்மையா? உடான்ஸா?

படம்
  விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்ப ராக்கெட்டிற்கு மாற்று ஏதுமில்லை                                                     உண்மை. இப்போதைய தொழில்நுட்பப்படி ராக்கெட்தான் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்ப உதவும் ஒரே சாதனம். இதற்கு மாற்றாக வளரக்கூடிய விதமாக வர்ஜின் நிறுவனத்தின் ஸ்பேஸ்ஷிப் 2 விண்வெளி விமானம் உள்ளது. இதே நிறுவனத்தின் லான்ஞ்சர் ஒன் செயற்கைக்கோள்  லான்ஞ்சரையும் இதேபோல குறிப்பிடலாம். ஆனாலும் விண்வெளிக்கு செல்ல ராக்கெட்டின் உதவி உறுதியாக தேவை.  நெகட்டிவ் கலோரி கொண்ட உணவு வகைகள் உண்டு! இல்லை. குறிப்பிட்ட வகை உணவை செரிக்க உடல் செலவழிக்கும் ஆற்றலை கலோரி அளவை, நெகட்டிவ் கலோரி என குறிப்பிடுகின்றனர். அதிக நீர்ச்சத்து கொண்ட உணவு வகைகளை  இந்த வரையறைக்குள் பொருத்தலாம். இப்படி உணவு இருப்பதாக தெரியவில்லை என ஆராய்ந்த உணவு வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். செரிக்க தாமதமாகும் செலரி (celery) என்ற தாவர உணவு கூட நெகட்டிவ் கலோரி உணவு பட்டியலில் வராது...

வயதாகும் போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

படம்
Illustration -tanga balamurugan   வயதாகும்போது என்ன ஆகிறது? பொதுவாக சிறுமிகள், ஆன்டி, அங்கிள் எனும்போதுதான் பேசிக்ஸ் ஷர்ட்டை ஆபரில் வாங்கி போட்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் சுர்ரென வலிக்கும். ஆகா, வயசாச்சே என கண்ணாடியைப் பார்த்தால், வடிவேலு கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து குரங்கு பொம்மை என சொல்லுவது போல இருக்கும்.  அந்தளவு குடும்ப சுமை, அலுவலகம் என அனைத்தையும் செய்துவிட்டு வந்தால் வயசாச்சு ப்ரோ, பூமர் அங்கிள் என உலகமே சொல்லிவிட்டு எளிதாக கடந்துபோய்க்கொண்டிருக்கும். டிப்பம் டிப்பம் டிப்பர டிப்பர என ஃபோக் மார்லியின் பாடலைக் கேட்டாலும் கூட உடலுக்குள் வயதாவதால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டுதான் ஆக வேண்டும்.  பொதுவாக ஒருவருக்கு வயதாகிறது என்றால் கண்ணில் தெரிவது தோல் சுருக்கமும், நரைமுடியும், உடலில் தளர்ச்சியும் வெளிப்படையாக தெரிவதுதான். இதெல்லாம் தாண்டி உள்ளுக்குள் என்ன நடக்கிறது? உறுப்புகளின் செயல்திறன் குறைந்துகொண்டே வரும். ஆத்தோ, சவர்மா சாப்பிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் ஐபிஎஸ் அல்லது ஃபேட்டி லிவர் என மருத்துவர பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்து மருந்து வ...

குளோனிங் முறைக்கு உருவாகும் எதிர்ப்புகள்!

படம்
      காணாமல் போன குளோனிங் முறை ! நம்மைபோல இன்னொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? இந்த எண்ணத்தை சாத்தியப்படுத்திய குளோனிங் ஆராய்ச்சிகள் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன . ஆனால் இன்றுவரை டிஎன்ஏ விஷயங்களில் நிறைய முன்னேற்றங்களை அடைந்தும் , ஆராய்ச்சியாளர்கள் அதனை பெரியளவில் தொடரவில்லை . இம்முறையில் உள்ள இடர்ப்பாடுகள்தான் இதற்கு காரணம் . 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மறியாடு குளோனிங்கில் உருவாக்கப்பட்டது . இம்முயற்சி வெற்றியடைய 277 முறை ஆராய்ச்சியாளர்கள் உழைக்கவேண்டியிருந்தது . அதைத் தொடர்ந்து முயல் , எலி , குதிரை , நாய் பல்வேறு விலங்குகளும் உருவாக்கப்பட்டன . குளோனிங் முறையின் மூலம் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் முடியும் என்றுதான் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன . ஆனால் மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட செல்களால் உருவாகும் குளோனிங் நகலின் வாழ்நாள் குறைவாகவே உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது . தானம் பெறப்பட்ட குரோமோசோம்களை கருவில் வைத்தாலும் அதன் தன்மை , மனிதர்களுடையதைப் போல இயல்பாக இல்லை . தானம் பெறப்பட்ட முட்டையிலிருந்து மையக்கருவை எடுப்பதும் கடினமானதாகவே ஆராய்ச்சியாளர்...

நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது!

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது எது? கல்யாணம் செய்துகொள்ளும் வயது என சீரியசாக காமெடி செய்யக்கூடாது. பொதுவாக நிறைய பொறுப்புகள் இந்தியர்கள் ஏற்கிறார்கள். இதனால் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆளாகி அறுபது வயதிலேயே இதயம் வெடித்து சாகிறார்கள். ஒகே இதனை மாரடைப்பு என வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு காரணம் மன அழுத்தம். இந்த பிரச்னைகள் தொடங்கும் வயது 47. வளர்ந்த நாடுகளில் 48 என்கிறது ஆய்வு. இந்த வயது தொடங்கி ஐம்பது, அறுபதுகளில் மெல்ல தூக்கமும் குறையத்தொடங்கும். உங்கள் வாயில் நிறைய புலம்பல்களும் கேட்கத் தொடங்கும். இதுபற்றி ஆராய்ந்த மருத்துவர் டெரங்க் செங், மகிழ்ச்சி என்பது யு வடிவத்தை ஒத்தது என்கிறார். இதுபற்றி 2015ஆம் ஆண்டு ஒரே வயது கொண்டவர்களை ஆராய்ந்தார். ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதுபற்றி மருத்துவர் டீன் பர்னட், “மனதில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் இளமையில் இறந்துவிடுகிறார்கள். காரணம், இளம் வயதில்  நிறைய பொறுப்புகள் கிடையாது. நாற்பது மற்றும் ஐம்பது வயதுகளில் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. இளம்வயது...

உட்கார்ந்து வேலை செய்தால் வயதாகுமா? ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி giphy.com நாற்காலியில் உட்கார்ந்தே இருந்தால் நோய் வருமா? இன்று பல்வேறு வேலைகளை உட்கார்ந்தே செய்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. பஸ் ட்ரைவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் உட்கார்ந்து வண்டி ஓட்டாவிட்டால் நாம் எங்கேயும் போகமுடியாது. கால்சென்டர். ஐடி வேலைகள் என பல்வேறு இடங்களிலும் கூட உட்கார்ந்து வேலை செய்வது முக்கியம். இங்கிலாந்தில் செய்த ஆய்வுப்படி உட்கார்ந்து வண்டி ஓட்டும் ஓட்டுநர்களுக்கு பெருமளவில் மாரடைப்பு ஏற்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.இது நின்றுகொண்டே இருக்கும் நடத்துநர்களை விட அதிகம். அவர்கள் மட்டுமல்ல மேற்சொன்ன பல்வேறு பணிகளில் உட்கார்ந்துகொண்டு ஏழுமணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு நிச்சயம் இதய நோய்கள், டிமென்ஷியா, நீரிழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரச்னை எங்கிருந்து தொடங்கும் தெரியுமா? தோள்பட்டை, முதுகெலும்பு என தசைகள் வலுவிழக்கத் தொடங்கும். பின்னர் மெல்ல அந்த இடங்களில் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதன்விளைவாக எலும்புகள் வலுவிழந்து நம் உடல் மெல்ல நோய்களை நோக்கிச் செல்லும். விரைவில் வயதாவதும் இப்படித்தான் நடக்கும். நன்றி - பிபிசி ...

உடற்பயிற்சிகளை செய்யும்போது என்ன நடக்கிறது?

படம்
மிஸ்டர் ரோனி உடற்பயிற்சி செய்யும்போது உடலில் என்ன நடக்கிறது? உடற்பயிற்சிகளை அர்னால்டு போஸ்டர் பார்த்து நாம் செய்யும்போது, உடலெங்கும் ரத்த ஓட்டம் வேகமாகும். இதன் விளைவாக உடலுக்கு கிடைக்கும் சிக்னல், உடலின் கொழுப்பை கரைத்து சக்தியாக்கு என்பதுதான். தசைகளில் அடர்த்தியான உடற்பயிற்சியின் அளவைப் பொறுத்து லேக்டிக் அமிலம் உற்பத்தியாகிறது. உடல் பாகங்களில் மூளைதான் அதிகளவு ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. உடற்பயிற்சியின்போதும் இதுதான் நடக்கிறது. இதயத்தில் அட்ரினலின் சுரப்பு அதிகரித்து இதயத்தின் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் அளவும் பெரிதாகிறது. நுரையீரல் மட்டும் சும்மாவா, சாதாரண அளவை விட பதினைந்து மடங்கு அதிகமாக ஆக்சிஜனை உள்வாங்கி வெளியிடுகிறது. இருபது லட்சம் வியர்வை சுரப்பிகள் கொண்ட தோலில் இருந்து 1.4 லிட்டர் வியர்வை ஒருமணிநேரத்திற்கு வெளிவரும்.  உடற்பயிற்சியின் முக்கியமான நல்லவிஷயம், உடலில் கால்சியம் வீணாவதைத் தடுத்து, எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. நன்றி - பிபிசி

புதிய இசை பிடிக்காமல் போகும் வயது எது? - உளவியல் ஆராய்ச்சி

படம்
மிஸ்டர் ரோனி முப்பது வயதுக்கு மேல் புதிய இசை பிடிக்காமல் போவது ஏன்? நல்ல கேள்வி. எங்கள் அலுவலகத்தில் கூட 53 வயதான சீனியர் ரஹ்மானையும் அனிருத்தையும் திட்டி ராஜ விசுவாசத்தை நிரூபித்து வருகிறார். இதற்கு காரணம், மூளையில் இருக்கிறது. இயல்பாகவே நாம் திருவிழா, சாவு, மயானக் கொள்ளை என பல்வேறு இடங்களிலும் இரண்டு சாமி பாட்டுகளைப் போட்டு பின்னர் அதிரடியாக சினிமா பாட்டுகளுக்கு இறங்கி வந்துவிடுவோம். இதனால் நம் 13 -14 வயதில் குறிப்பிட்ட இசை வகைக்கு செட் ஆகிவிடுவோம். இருபது வயதில் ரஹ்மான்தான்டா லெஜண்டு, ஜிப்ரான்லாம் அவரோட கால் தூசுக்கு சமம்டா என சண்டை இழுக்கும் அளவுக்கு தரை லோக்கலாக மாறிவிடும். இயல்பாகவே இருபதுகளில் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். அதனால் யூட்யூப்பில் வைரலாகும் அனைத்தையும் நாம் கேட்போம். நண்பர்கள் ஹேங்அவுட்டில் கிடைக்கும் நண்பர்களின் பரிந்துரைகளையும் லிங்குகளையும் ஏற்று ரசிப்போம். ஆனால் 30 வயது ஆகும்போது அனைத்தும் மாறிவிடும். அதற்குப் பிறகு, வேலை, குடும்பம் என நச்சு வேலைகள் மூளையெங்கும்  நிறைந்துவிடும்.  அதற்குப் பிறகு நாம் நினைத்தாலும் புதிய விஷயங்களுக்குச...

சாதிக்க நல்லநேரம் பார்க்காதீர்கள்!

படம்
டொனால்ட் ஃபிஷர் தொழில் தொடங்கலாமா என்று தன் மனைவியிடம் ஆலோசனை கேட்டார். எந்த அனுபவமும் இல்லை என்று அவர் கவலைப்படவில்லை. தன்னை நம்பினார். அப்படித்தான் ஃபர்ஸ்ட் கேப் கடை திறக்கப்பட்டது. அங்கிருந்த நாகரிக உடைகளுக்கு மக்கள் அடிமை ஆனார்கள். இன்று இக்கடை உலகமெங்கும் உண்டு. வேரா வாங் பார்க்க பேங்க் கட்டி நடத்துகிறார் என்று தோன்றும். பெண்களுக்கான உடைகளை வடிவமைத்து விற்கிறார். தன் தொழில் முயற்சிகளை செய்யும் முன்பு பத்திரிகையாளரான பணியாற்றியவர். இவர் நாற்பதில்தான் டிசைனர் தொழிலைக் கையில் எடுத்தார். சாமுவேல் ஜான்சன் இன்று இவரை அறிவீர்கள். ஆனால் அன்று ஹாலிவுட்டில் சிறிய கேரக்டர்களில் நடித்தபோது பெரிய பிரபலம் கிடையாது. நம்பிக்கையுடன் என்னால் முடியும் என நம்பியதால் 1993 இல் வெளியான ஜங்கிள் ஃபீவர் படத்தில் புகழ்பெற்று முன்னுக்கு வந்தார். அப்போது சாமுவேலின் வயது 43. சாம் வால்டன் இவரது நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க நினைத்தும் அரசியல் பிரச்னைகள் விடவில்லை. விற்பனைத்துறையில் சிறிய வேலையில் இருந்தார். தன் மீது கொண்ட நம்பிக்கையை கைவிடாத தால் 44 வயதில் 1962 ஆம் ஆண்டு வால்மார்...