நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது!



Nervous On Fire GIF by Robert E Blackmon
giphy





மிஸ்டர் ரோனி


நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது எது?

கல்யாணம் செய்துகொள்ளும் வயது என சீரியசாக காமெடி செய்யக்கூடாது. பொதுவாக நிறைய பொறுப்புகள் இந்தியர்கள் ஏற்கிறார்கள். இதனால் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆளாகி அறுபது வயதிலேயே இதயம் வெடித்து சாகிறார்கள். ஒகே இதனை மாரடைப்பு என வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு காரணம் மன அழுத்தம். இந்த பிரச்னைகள் தொடங்கும் வயது 47. வளர்ந்த நாடுகளில் 48 என்கிறது ஆய்வு. இந்த வயது தொடங்கி ஐம்பது, அறுபதுகளில் மெல்ல தூக்கமும் குறையத்தொடங்கும். உங்கள் வாயில் நிறைய புலம்பல்களும் கேட்கத் தொடங்கும்.

இதுபற்றி ஆராய்ந்த மருத்துவர் டெரங்க் செங், மகிழ்ச்சி என்பது யு வடிவத்தை ஒத்தது என்கிறார். இதுபற்றி 2015ஆம் ஆண்டு ஒரே வயது கொண்டவர்களை ஆராய்ந்தார். ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இதுபற்றி மருத்துவர் டீன் பர்னட், “மனதில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் இளமையில் இறந்துவிடுகிறார்கள். காரணம், இளம் வயதில்  நிறைய பொறுப்புகள் கிடையாது. நாற்பது மற்றும் ஐம்பது வயதுகளில் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. இளம்வயது பிள்ளைகள் இருக்கின்றனர். இவை அவர்களின் மனநிம்மதியை குறைக்கிறது.” என உண்மையை சடாரென பேசுகிறார்.

அப்போது மகிழ்ச்சியாகவே நாம் இருக்க முடியாதா? இருக்கலாம். வயது முதிர்ந்தபின்பு, நமக்கு நிறைய பொறுப்புகள் குறைந்துவிடும். அப்போது பிள்ளைகள் வளர்ந்து திருமணம் செய்திருப்பார்கள் அல்லது நல்ல வேலையில் இருப்பார்கள். அப்போது நாம் முடிவெடுத்து செய்யவேண்டிய விஷயங்கள் குறைவாக இருக்கும். இந்த காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவிக்கலாம். உடல் தளர்ந்திருப்பதால், அதற்கான பிரச்னைகளை நாம் சந்திக்கவேண்டும்.

நன்றி - பிபிசி