பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் - ராஜஸ்தான் முதலிடம்
கடந்த பத்தாண்டுகளில் பட்டியலினத்தவர்கள் மீது அதிகளவு தாக்குதல்கள் நடத்தப்பட்ட விவரம் வெளியாகியுள்ளது. கரகோஷத்துடன் முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 8,591 வழக்குகள் எஸ்சி, எஸ்டி இனத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக பதியப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இத்தாக்குதல்களின் அளவு 8,451ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தலித்துகள் மீதான தாக்குதலில் ஒருவரின் ஆசனவாயில் ஸ்க்ரூ ட்ரைவரை செருகியுள்ளனர். இவர்கள் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு இப்படி ஒரு குரூரமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்த முந்தைய காலத்திலும் தலித்துகள் மீதான தாக்குதல் குறையவில்லை.
2018ஆம் ஆண்டைவிட 2019ஆம் ஆண்டில் 50.67 சதவீதம் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. 2018 இல் காவல்துறை பதிவுகள்படி 5,702 வழக்குகள்தான் பதிவாகியுள்ளன. இதில் 47 சதவீத தாக்குதல்கள் தலித்துகள் மீது நடத்தப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் நடக்கும் வேகமும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
குற்றவழக்குகள் அதிகரிப்புக்கு முக்கியக்காரணம், காவல்நிலையத்திற்கு புகாரோடு யார் வந்தாலும் அதனை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யச்சொல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. காவல்துறை அதனை செய்யத் தவறினால் மாவட்ட சூப்பரிடென்ட் அலுவலகத்தில் புகார்தாரர் தன் புகாரை பதிவு செய்யலாம்.
”நீங்கள் ஆயிரம் வழக்குகளை கூட பதிவு செய்து பத்திரமாக வைத்துக்கொள்ளலாம். அவற்றின் மீது நடவடிக்கை எடுத்தால்தானே தலித்துகள், பட்டியல் இனத்தவர் மீதான குற்றங்கள் குறையும். அதை செய்ய மாநில காவல்துறை தவறுகிறது.இதனால் தொடர்ச்சியாக தலித்துகள், பழங்குடியினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் நாகர் மாவட்ட சம்பவம் கூட சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிய வந்தது. அதில் வராத குற்றங்கள் நிறைய இருக்கின்றனவே? அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பொறுப்பு காவல்துறைக்கு உண்டு” என்கிறார் தலித்துகளுக்காக செயல்பட்டு வருபவரான சதீஸ் குமார்.
நன்றி - இந்துஸ்தான் டைம்ஸ்