ஸிசோபெரேனியா பிரச்னை கொண்ட மருத்துவப்படிப்பு மாணவன் கண்டுபிடிக்கும் உளவியல் மர்மங்கள்!
ஜர்னி அக்ராஸ் தி நைட் சீன டிவி தொடர் 26 அத்தியாயங்கள் லி ஜியா, சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்கு உளவியலாளர் படிப்பை படிக்க வருகிறார். அவர் அப்படி படிக்க வர அவரது குடும்பம் முக்கியமான காரணம். அவரது அம்மாவிற்கு ஸிசோபெரேனியா இருக்கிறது. அந்த நோய் வந்துதான் அவர் மனநிலை சிக்கலாகி இறக்கிறார். அடுத்து இதே பிரச்னையில் அவரது அண்ணன் கூட மாட்டிக்கொள்கிறார். எல்லோருமே இருபத்து நான்கு வயதில் மனநல பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். லி ஜியாவிற்கு இன்னும் சில மாதங்களில் 24 வயதாகப்போகிறது. தனது பிரச்னையை ஹாங்காங்கிலுள்ள பேராசிரியருக்கு விளக்கி கூற அவர் லி ஜியாவுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி படிப்பில் சேர்த்துக்கொள்கிறார். லி ஜியா படிப்பில் இணைகிறார். ஆனால் தங்குவதற்கு ஹாஸ்டலில் இடம் கிடைக்கவில்லை. அப்போதுதான் கல்லூரி வளாகத்தில் உளவியல் பிரச்னை கொண்ட ஒருவரிடமிருந்து இளம்பெண் ஒருத்தியைக் காப்பாற்றுகிறார். செங்குவான் சாசா எனும் அவள், தனக்கு தெரிந்த இடத்தில் வாடகைக்கு இடம் இருக்கிறது. மிகவும் குறைந்த வாடகை என்று சொல்லி வினோதமான ஆட்கள் உள்ள இடத்தில் அறையைக் காட்டுகிறாள். அப்போதுள்ள...