இடுகைகள்

கங்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கங்கை ஆற்றால் நிலமிழந்த மக்கள் - கண்டுகொள்ளாத மாநில, மத்திய அரசுகள்!

படம்
கங்கை ஆற்றால் அரிக்கப்படும் நிலம்!  கடல், ஆறு ஆகியவற்றால் நிலப்பரப்பு அரிக்கப்பட்டு வருவது காலம்தோறும்  நடந்துவருகிறது. மேற்கு வங்கத்தின், மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய மாவட்டங்களில் 400 சதுர கி.மீ. நிலப்பரப்பு அரிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசின் ஆய்வே, வெளிப்படுத்தியுள்ளது. கங்கை ஆறு மூலமாக நிலப்பரப்பு அரிக்கப்படுவது புதிதாக நடக்கவில்லை. அறுபது ஆண்டுகளாக நடந்த  மண் அரிப்பு, பெருமளவு நிலப்பரப்பை சிதைத்துள்ளது. மண் அரிப்பின் பாதிப்பால், பல லட்சம் மக்களின் வீடுகள் அழிந்துவிட்டன. இதோடு அவர்களின் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஃபராக்கா தடுப்பணை மேற்கு வங்கத்தில் கட்டப்பட்டு இருந்தாலும் கூட கங்கையின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மால்டாவிலிருந்த மசூதி, பள்ளிக்கட்டடம் உள்ளிட்டவை கங்கை ஆற்று நீரால் சிதைந்தன. இப்படி நடந்த சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசு என இரண்டுமே எந்த உதவியையும் செய்யவில்லை. ”ஆண்டுக்கு 73 கோடியே 60 லட்சம் டன்கள் வண்டல் மண் கங்கை ஆற்றில் படிகிறது. அதனை புனரமைத்தாலே பாதிப்புகள் குறையும். இதில் 32 கோடியே 80 லட்சம் டன் வண்ட

கோவிட் இறப்புகள் இந்தியாவில் அதிகமா?

படம்
  இந்தியாவில் 47 லட்சம் மக்கள் கொரானாவால் பலியானார்கள் என்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது. இது எந்த நாடுகளையும் விட அதிகம் என்பதால், பதறிப்போன இந்தியா, இதனை அப்படியெல்லாம் கிடையாது என ஒரே பேச்சாக முடிவாக மறுத்துள்ளது. உண்மை என்ன என்று டைம்ஆஃப் இந்தியா செய்தியை வெளியிட்டுள்ளது.  2020 -2021 காலகட்டத்தில் இந்தியா 47.4 லட்ச மக்களை இழந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தனது ஆவணங்களின்படி கூறியுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் ரஷ்யா உள்ளது. இந்த நாடு, 10.7 லட்ச மக்களை நோய்க்கு பலி கொடுத்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் இந்தோனேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வருகின்றன.  லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா குறிப்பாக உக்ரைன், போலந்து, ரோமானியா ஆகிய நாடுகளில் மக்களி இறப்பு சதவீதம் இந்தியாவை விட அதிகம். இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிட்டால், உலக சுகாதார நிறுவனம் கூறும் இறப்பு எண்ணிக்கை குறைவு.  இதனை எப்படி கணக்கிடுகிறார்கள்? நூறு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நாடுகளை பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும்.  அடுத்து அதில் லட்சத்திற்கு எத்தனை பேர் கொரானாவால் இறந்தார்கள் என்பதை கணக்கி

நீரின்றி தவிக்கப்போகும் கோடிக்கணக்கான மக்கள்!- இமாலயத்தில் உருகும் பனிப்பாறைகள்

படம்
  சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றிலிருந்து கிடைக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறது. ஆறுகள் உருவாகி வரும் இமயமலையில் இதற்கான பாதிப்புகள் தொடங்குவதால் விரைவில் டெல்லி, பெங்களூரு, இந்தூர், ரூர்க்கி, நேபாளம், அகமதாபாத் ஆகிய நகரங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியானா ஆகியவை சிந்து நதியினை நம்பியுள்ளன. டெல்லி, உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தானின் பெரும்பகுதி கங்கை நதியை நம்பியே நிலப்பரப்புகள் உள்ளன.  அசாம், சிக்கிம், நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் பிரம்ம புத்திரா ஆற்றை நம்பியே உள்ளன.  உலக மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி, டாகா, லாகூர், கராச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களையே அதிகம் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உலகளவில் பார்த்தால் எட்டில் ஒருவர் என்று கூறலாம்.  இமாலயத்திலுள்ள காரகோரம் பகுதியில் உருவான பனிப்பாறைகள் மெல்ல வெப்பத்தால் உருகத் தொடங்கியுள்ளன. இதனால