கங்கை ஆற்றால் நிலமிழந்த மக்கள் - கண்டுகொள்ளாத மாநில, மத்திய அரசுகள்!
கங்கை ஆற்றால் அரிக்கப்படும் நிலம்!
கடல், ஆறு ஆகியவற்றால் நிலப்பரப்பு அரிக்கப்பட்டு வருவது காலம்தோறும் நடந்துவருகிறது. மேற்கு வங்கத்தின், மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய மாவட்டங்களில் 400 சதுர கி.மீ. நிலப்பரப்பு அரிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசின் ஆய்வே, வெளிப்படுத்தியுள்ளது. கங்கை ஆறு மூலமாக நிலப்பரப்பு அரிக்கப்படுவது புதிதாக நடக்கவில்லை. அறுபது ஆண்டுகளாக நடந்த மண் அரிப்பு, பெருமளவு நிலப்பரப்பை சிதைத்துள்ளது.
மண் அரிப்பின் பாதிப்பால், பல லட்சம் மக்களின் வீடுகள் அழிந்துவிட்டன. இதோடு அவர்களின் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஃபராக்கா தடுப்பணை மேற்கு வங்கத்தில் கட்டப்பட்டு இருந்தாலும் கூட கங்கையின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மால்டாவிலிருந்த மசூதி, பள்ளிக்கட்டடம் உள்ளிட்டவை கங்கை ஆற்று நீரால் சிதைந்தன. இப்படி நடந்த சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசு என இரண்டுமே எந்த உதவியையும் செய்யவில்லை. ”ஆண்டுக்கு 73 கோடியே 60 லட்சம் டன்கள் வண்டல் மண் கங்கை ஆற்றில் படிகிறது. அதனை புனரமைத்தாலே பாதிப்புகள் குறையும். இதில் 32 கோடியே 80 லட்சம் டன் வண்டல் மண் ஃபராக்கா தடுப்பணையில் படிகிறது ”என்கிறார் விஞ்க்யான் தர்பார் அமைப்பைச் சேர்ந்த அனுப் ஹால்டர்.
உத்தரகாண்ட், மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கங்கை ஆற்றைத் தடுத்து 32 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இங்கும் நிலைமை பெரிதாக மாறவில்லை. மத்திய அரசு, ஹால்டியா தொடங்கி அலகாபாத் வரையிலுள்ள 1,600 கி.மீ. தொலைவில் நூறு கி.மீ. தொலைவுக்கு தடுப்பணைகளை கட்ட முடிவு செய்துள்ளது. கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக, உலக வங்கி 70 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கவுள்ளது. தெற்காசிய ஆறுகள், அணைகள், மக்கள் கூட்டமைப்பு கங்கையில் தடுப்பணைகள் கட்டுவதை எதிர்க்கிறது. “வண்டல்மண் என்பது, தடுப்பணைக்கான முக்கியமான காரணம் அல்ல. ஆற்றின் உருவம், விசை, மின்னோட்டம் ஆகியவையும் தடுப்பணை அமைக்கப்படும் அவசியத்தை கோருகின்றன” என்றார் முன்னாள் ஃபராக்கா தடுப்பணை ஆணைய தலைவரான ஆர். அழகேசன். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிதி, உலகவங்கியின் நிதி உதவிகளை மேற்கு வங்க அரசு பெற்றுத்தந்தால், வீடுகளை இழந்த மக்களுக்கு மறுவாழ்வு பணிகளை செய்து தருவது எளிதாகும்.
தகவல்
The River Refugees
Romita datta
india today 18 april 2022
கருத்துகள்
கருத்துரையிடுக