புதிய மின்னூல் வெளியீடு - மயிலாப்பூர் டைம்ஸ் - அமேஸானில் வாசியுங்கள்
பிளாக்குகளில் அதாவது வலைப்பூவில் எழுதுவது என்பது டயரிக்குறிப்பு போலத்தான் அதற்கு மேல் அதில் ஏதுமில்லை என்று கணியம் சீனிவாசன் ஒருமுறை கூறினார். வலைப்பூவில் எழுதப்படும் கட்டுரைகளைப் பொறுத்து இப்படி கூறலாம். அவர் கூறுவதற்கு மயிலாப்பூர் டைம்ஸ் கட்டுரைகள் சற்று ஒத்துவரும். இந்த நூலில், எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது வரையிலான நிகழ்ச்சிகளை சுட்டப்பட்டுள்ளன.
மயிலாப்பூர் என்பது காஞ்சிபுரம் போலத்தான். இங்கும் தெருவுக்கு தெரு கோவில்கள் உண்டு. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கும் பிராமணர்களின் குழுக்கள் உண்டு. கபாலீஸ்வரர் கோவில், அதைச்சுற்றியுள்ள முக்கியமான நூல், உணவு நிறுவனங்கள் என பேச ஏதாவது விஷயங்கள் உண்டு. ஆண்டுதோறும் அனைத்து மாதங்களிலும் இங்குள்ள கோவில்களில் ஏதேனும் ஒரு விசேஷம் நடந்தவாறே இருக்கும். இங்கு வாழும் ஒரு பத்திரிகையாளன் பார்க்கும், கேட்கும், அனுபவித்த விஷயங்களின் தொகுப்புதான் நூல்.
இந்த அனுபவங்களை வாசிக்கும் யாவரும் புன்னகையுடன் அதை வாசிக்க முடியும். நூலின் கட்டுரைகள் அனைத்துமே சுய எள்ளல் தன்மையுடன் தான் உள்ளன. எனவே, வெறும் டயரிக் குறிப்பாக மட்டும் மிஞ்சாது என்பது உறுதி.
கோமாளிமேடையில் எழுதும்போது நேர நிர்பந்தங்களால் கட்டுரைகளில் ஏற்பட்டிருந்த எழுத்துப்பிழைகள், வாக்கிய அமைப்பு சிக்கல்ள் நூலில் நீக்கப்பட்டுள்ளன. பதினாறு கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. சிறிய நூல் என்பதால் எளிதாக வாசிக்க முடியும், நேரம் கிடைக்கும்போது அமேஸானில் வாசியுங்கள்.
https://www.amazon.in/dp/B09ZPWDLMX
ஸ்கேன் செய்து வாசிக்க....
கருத்துகள்
கருத்துரையிடுக