பெருந்தொற்று கால வேதனைகளை மறக்கவேண்டும். பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும்! - ஆஞ்சல் மல்ஹோத்ரா
ஆஞ்சல் மல்ஹோத்ரா |
ஆஞ்சல்
மல்ஹோத்ரா
எழுத்தாளர்
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும் பிரிவினை கலவரங்கள் நடைபெற்றும் 75 ஆண்டுகள் ஆகின்றன. இன்று பிரிவினையால் பாதிக்கப்பட்ட குடும்ப வாரிசுகள் பலரும் வெளிநாடுகளில் பரவி வாழ்கின்றன. எழுத்தாளர் ஆஞ்சல் மல்ஹோத்ரா, தி லாங்குவேஜ் ஆஃப் ரிமெம்பரிங் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் பிரிவினை பற்றிய பல்வேறு நினைவுகளை பதிவு செய்துள்ளார். அவரிடம் இதுபற்றி பேசினோம்.
நூலில் நீங்கள் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் பேரன்கள் ஆகியோருடன் பேசியுள்ளீர்கள். இந்த சூழல் எப்படியிருந்தது?
பிரிவினையால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டிகள், அவர்களின் வாரிசுகள், பேரன்கள் ஆகியோருடன் நிறைய நேரம் செலவிட்டுத்தான் நூலுக்கான தகவல்களைத் திரட்டினேன். பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்றாலும் அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எளிதாக மறக்கமுடியாது. அதனை எளிதில் அகற்றிவிடவும் முடியாது.
பெரும்பாலான பேட்டிகளை நான் பாதிக்கப்பட்டவர்களின் பேரன்கள், வாரிசுகளிடம்தான் எடுத்தேன். இப்படி நேர்ந்த சம்பவத்திலிருந்து தூரமாக இருக்கவேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இப்படி நடந்த சம்பவங்களை இளம் தலைமுறையினர் கேட்கும்போது, பிரிவினை சம்பவத்தின்போது முன்னோர்கள் செய்த தியாகங்களை அவர்கள் முதல்முறையாக கேள்விப்படுகிறார்கள். அதுவரை பார்க்காத கோணத்தில் முன்னோர்களை புதிய வெளிச்சத்தில் பார்க்கிறார்கள்.
சில நேரங்களில் பெரியவர்கள் தாங்கள் சொல்லும் சம்பவங்களில் உள்ள இடங்களை மௌனத்தால் கடக்கின்றனர். இந்த வரலாற்று சம்பவங்கள்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்க உதவியாக இருக்கும்.
நீங்கள் எழுதிய நூலில் உள்ளவர்களின் அனுபவங்களை, அவர்களின் குடும்ப நபராக இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் வாழ்பவர்கள் எப்படி அடையாளப்படுத்துக்கொள்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இப்போது இந்தியாவில் வசிக்கவில்லையே?
நீங்கள் சொல்லுவது முக்கியமான கேள்வி. அவர்கள் இந்தியாவில் வாழவில்லை என்பது உண்மை என்றாலும் அவர்களின் இறந்தகாலத்தில் பிரிவினை நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்று. இந்த நூலின் வழியாக நானும் எனது தொடக்கத்தை அடையாளம் காண முயல்கிறேன். எனது தாத்தா, பாட்டி இங்குதான் வாழ்ந்தார்கள். அதனால்தான் நூலின் தொடக்கத்தில் கூட ஒருவரின் தொடக்க கால தோற்றத்தை நினைவை எப்போது அழித்துவிடமுடியாது என்று எழுதியிருக்கிறேன்.
இந்தியா பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் பிரிவினைகள் ஏற்பட்டன. இந்த நாடுகளைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
பாகிஸ்தானின் மேற்கு எல்லையோரம் பிரிவினை காரணமாக கடும் வன்முறை நடைபெற்றது. இன்று இந்தியா, பாகிஸ்தான் எல்லைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளின் உறவில் சமநிலை இல்லை. எளிதாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல முடியாத நிலையே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக சிக்கலான நிலையே நிலவுகிறது. வங்கதேசத்தில், இருந்து பிரிவினை காரணமாக பாகிஸ்தான் சென்றவர்கள் இன்றும் அங்கு எளிதாகவே செல்லமுடியும். இது மேற்கு எல்லையோர பாகிஸ்தான் போல சிக்கலாக மாறவில்லை.
மதம் சார்ந்த சகிப்பின்மை தொடர்ந்து எழுந்து வருகிற நிலையில், பிரிவினை என்றால் என்ன ? நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள என்ன விஷயங்கள் உள்ளன?
மதம் காரணமாக நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதே எனது ஆசை.
பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் பிரிவினை நிகழ்வுக்கு சற்றும் குறையாதவை. இந்த நிகழ்வு கூட எதிர்கால தலைமுறையினரை பாதிக்கும் என்று கூறலாமா?
பெருந்தொற்று கால அவலங்களை என்றேனும் ஒருநாள் நான் நூலாக மாற்றுவேன் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த சம்பவங்கள் இன்றே ஆவணமாகத்தானே இருக்கின்றன. பல்வேறு விஷயங்கள், சமூகவலைத்தளங்களில் தினசரி பதிவிடப்பட்டன. நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து பாடங்களை கற்பது அவசியம். அதில் பட்ட வேதனைகளை மறந்துபோவது அவசியம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக