வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்த பசுமை தொழில்நுட்பங்கள் தேவை!
பெஞ்சமின் ஜெய்ட்சிக்
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.
அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது?
2015ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு நிறைய மரணங்களை ஏற்படுத்தியது. மக்களின் மரணம் உண்மையில் வேதனையானது. ஆனால் வெப்ப அலை பற்றி குறைத்து மதிப்பிட்டதுதான் இப்பட்டிப்பட்ட சிக்கலுக்கு காரணம். இதயம் தொடர்பான பாதிப்பு கொண்டவர்கள், ஆஸ்துமா, நுரையீல் சார்ந்த நோய்கள், குறைபாடு கொண்டவர்களுக்கு வெப்ப அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி பாதிப்பை நாம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அப்படி செய்யும்போதுதான் பாதிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.
வெப்ப அலைகளால் ஏதும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா?
கண்டிப்பாக. வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஆவியாதலின் அளவும் கூடும். இதனால் நகரங்களில் வாழும் மக்கள் புழுக்கத்தால் தவிப்பார்கள். வெப்ப அலையால் வியர்வை பெருகும். தாவரங்கள், மண் ஆகியவையும் ஈரப்பதத்தை இழக்கும். வறண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை வெளியேற்றும். வெப்ப பாதிப்பை வெப்ப அலை மேலும் அதிகரிக்கும்.
இப்போதுள்ள வெப்ப அலைக பாதிப்பை உலகளவில் எப்படி வரையறை செய்வீர்கள்?
வரலாற்று ரீதியாக பார்க்கும்போது நவீன காலத்தில் உள்ள வெப்ப அதிகரிப்பது என்பது அதிகம் தான். காலநிலை ஆராய்ச்சியாளர்கள், வெப்ப அலை பாதிப்பின் அடர்த்தியும், அது ஏற்படுவதும் அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
ஆர்க்டிக், அன்டார்டிக் பகுதியை வெப்பம் எப்படி பாதிக்கிறது?
கார்பன் வெளியீடுதான் இதற்கு முக்கியமான காரணம். பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளியிடப்படுவதால், ஆர்க்டிக், அன்டார்டிக் பகுதிகள் வேகமாக வெப்பமடைந்து வருகின்றன.
பூமி இப்படி சூடாகும்போது நமக்கு அதிலிருந்து தப்பிக்க குளிர்சாதன வசதி தேவைப்படுகிறது. ஆனால் இதனால் மேலும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறி பூமி சூடாகும். இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது?
ஆற்றலை சேமிக்கும் குளிர்சாதன வசதியை வழங்கும் தொழில்நுட்பம் நமக்குத் தேவை. ஆவியாதல் கூடுதலாக உள்ள இடத்தில் பயன்படும் குளிர்விப்பான்கள் ஈரப்பதமாக இடத்தில் பயன்படாது. பசுமையான தொழில்நுட்பங்களை நாம் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
ஸ்ரீஜன மித்ர தாஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக