அமெரிக்காவிற்கு சாகச பயணமாக இடம்பெயர்ந்த வங்கதேச மனிதரின் கதை!

 









விவேக் பால்ட்
ஆவணத் திரைப்பட இயக்குநர்

இன் சர்ச் ஆஃப் பெங்காலி ஹர்லேம் என்ற படத்தை அண்மையில் உருவாக்கியுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எப்படி அமெரிக்காவிற்கு வந்து பிழைக்கிறார் என்பதை சொல்லும் படம். படத்தின் உதவி இயக்குநரான அலாவுதீன் உல்லா என்பவரின் தந்தை பற்றிய கதை இது. 


அகதி ஒருவரைப் பற்றிய கதையை எப்படி எடுத்தீர்கள்?

1999ஆம் ஆண்டு அலாவுதீனின் தனிக்குரல் நிகழ்ச்சியைப் பார்த்தேன். நிகழ்ச்சிக்குப் பிறகு என்னை சந்தித்த அலாவுதீன், தனது தந்தை பற்றிய கதையை சொல்லி அதை படமாக்க கேட்டார். அந்த கதை இதுவரை நான் அறிந்த விஷயங்களை மாற்றிப்போட்டது. 1965ஆம் ஆண்டு வரையில் கூட அமெரிக்காவில் வெளிநாட்டினர் வந்து குடியேற முடியாத நிலையை சட்டம் உருவாக்கியிருந்தது. ஆன்டி ஆசியன் இமிகிரேஷன் என்பதுதான் அதன் பெயர். ஆனால் 1920ஆம் ஆண்டில் அலாவுதீனின் தந்தை அமெரிக்காவிற்கு வந்து புவர்டோ ரிகோ பகுதியைச் சேர்ந்த பெண்ணை மணந்து வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமான கதைதான். இப்படி இடம்பெயர்ந்த மனிதர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் இதுவரையில் இல்லை. 

இவர் இப்படி அமெரிக்கா சென்றது விதிவிலக்கான செயல் என நினைக்கிறீர்களா?

கல்கத்தாவிலுள்ள கிராமத்திலிருந்து அலாவுதீனின் அப்பா சென்றிருக்கலாம். அவர் பிரிட்டிஷாரின் நீராவிக்கப்பலில் ஏறி அமெரிக்கா வழியில் செல்லும் கப்பலுக்கு தாவியிருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இப்படி ஆயிரம் பேர்களுக்கும் மேல் சென்றிருக்க வாய்ப்பு உண்டு. அமெரிக்காவில் ஆசியர்கள் அங்கு வந்து தங்குவது சட்டப்படி குற்றம் என்ற சட்டம் உருவாகும்போது அவர்கள் ஆப்பிரிக்க, புவர்டோரிகன் இனக்குழுக்களை உருவாக்கியிருக்கலாம். 

அலாவுதீனின் அப்பா ஹபீப் போன்றவர்கள் வாழ்ந்த பகுதியை என்னவென்று சொல்லுவீர்கள்?

அங்குதான் ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், தெற்காசியர்கள் அனைவருமே வாழ்ந்து வந்தனர். அதைத்தான் நான் ஹர்லேம் என்று கூறுகிறேன். இங்குதான் 1940 வரையில் பல்வேறு உணவக வேலைகளை செய்து வந்த ஹபீப், பெங்காலி கார்டன் என்ற உணவகத்தை தொடங்கினார். 

உங்கள் படத்தில் ஹபீப் வாழ்ந்த வங்கதேசத்திற்கும் நாம் காட்சி வழியாக செல்கிறோம். அவர் தன் சொந்த ஊருக்கு செல்லமுடியாத காரணங்களை கூறியிருக்க வாய்ப்புள்ளதாக நினைக்கிறீர்களா?

ஹபீப், நெடுங்காலமாக த
னது கிராமத்தில் வசிக்கவில்லை. ஆனால் அவர் கடிதங்களை அனுப்பிவந்தார். அமெரிக்க முகவரியை எழுதித்தான் கடிதங்களை அனுப்பினார். இதற்கு ஹபீப்பின் அப்பாவுக்கு படிக்கத் தெரியாது என்பதும் முக்கியமான காரணம். இந்த கடிதங்கள் வழியாகவே அலாவுதீன் தனது உறவினர்களை அறிந்துகொண்டார். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா
 சந்தீப் ராய்




கருத்துகள்