நான் வளர்ந்து வந்த கதையை தமிழ் இயக்குநர்கள் திரைப்படமாக எடுத்தனர்! - அனுராக் காஷ்யப், இந்தி சினிமா இயக்குநர்
கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படம் 2012ஆம் ஆண்டு கான் படவிழாவில் திரையிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு இது பெரிய கௌரவமான நிலை. இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் இதுபற்றி பேசியபோது,
கான் படவிழா அனுபவம் எப்படியிருந்தது?
2010இல் தட் கேர்ள் இன் யெல்லா பூட்ஸ் என்ற படத்தை வணிகப்படமாகவே நான் எடுத்தேன். 2013இல் தி லன்ச் பாக்ஸ் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. எனக்கு கான் திரைப்பட விழாவில் படத்தை திரையிடுவது முக்கியமாகப் படவில்லை. மார்கோ முல்லர் தான் வாசிப்பூர் படத்தை நான் பார்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அவர்களுக்கு அந்தப்படம் பிடித்திருந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
கான் படவிழாவில் படத்தை திரையிட்டபோது உங்கள் அனுபவம் எப்படியிருந்தது.
எனக்கு பதற்றமாக இருந்தது. நான் தியேட்டரிலிருந்து வெளியேறி வெளியே தான் ஐந்து மணிநேரம் இருந்தேன். அப்போது அங்கே குடிக்கத் தொடங்கியிருந்தேன். திரைப்பட விழாவில் விற்கவென நான் உருவாக்கிய படம் யெல்லோ பூட்ஸ் தான். படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது. படத்தின் இடையே பத்து நிமிட இடைவேளைதான் இருந்தது. நடிகர்களை பார்வையாளர்கள் தெருவிலேயே நிறுத்திவிட்டனர். நாங்கள் நள்ளிரவில் ஜாலியாக நடனம் ஆடத் தொடங்கினோம்.
வாசிப்பூர் படத்தை தனிப்பட்ட முறையிலான ஒன்று என்று கூறலாமா? படம் எடுக்கப்பட்ட நகரம், நீங்கள் சிறுவயதில் வளர்ந்த நகரம் அல்லவா?
படத்தின் கதை உண்மையானதுதான். படத்தின் பட்ஜெட் குறைவு என்பதால் நாங்கள் வாசிப்பூரில் நேரடியாக படம் எடுக்கவில்லை. எனது தந்தைக்கு ஊரில் நல்லபெயர் இருந்தது. அதன் காரணமாகவே, பலரும் தங்கள் வீடுகளை படப்பிடிப்புக்கு கொடுத்தனர். ரிச்சா சதா இருக்கும் வீட்டில்தான் எனது சகோதரர் பிறந்தார். எனது அப்பா வேலை செய்த பவர் ஹவுஸைக் கூட படத்தில் காட்டியிருப்பேன்.
திரைக்கதை எழுத்தாளர்கள் உங்களை அணுகியபோது , படத்தின் கதையை சிட்டி ஆஃப் காட் என்று கூறியது உண்மையா?
அது ஒரு டெம்பிளேட் என்பதால் அப்படி சொன்னேன். நான் சொன்னதைக் கேட்ட எழுத்தாளர் ஜெய்சனுக்கு கோபம் வந்துவிட்டது. அவர், உடனே தன்னுடைய கதைக்கு ஆதாரமாக செய்தித்தாட்களை, பல்வேறு ஆதாரங்களைக் காட்டினார். முழுக்கதை எனக்கு வேண்டும் என்றேன்.அவர் தொடர்புடைய ஊருக்கு சென்று கதையை விசாரித்து 150 பக்க நாவலாக எழுதினார். அதுதான் வாசிப்பூர் படத்தின் அடிப்படை. தி பெஸ்ட் ஆப் யூத் 2013 என்ற இத்தாலி படம் எனக்கு பிடித்தமானது. இந்த படம் ஆறு மணிநேரம் ஓடும். பீகாரின் அரசியல் வரலாற்றை ஜெய்சனின் கதை மூலம் சொல்ல முடியும் என நினைத்தேன். சுரங்க தொழில், அரசியல் ஆகியவற்றோடு நிலத்தின் வரலாற்றையும் நான் படத்தில் சுமந்திருக்கிறேன் என பின்னர் தான் தெரியவந்தது.
வாசிப்பூர் படத்தை தமிழ் இயக்குநர்களான பாலா, அமீர் சுல்தான், எம் சசிகுமார் ஆகியோருக்கு சமர்பணம் செய்திருந்தீர்கள் அல்லவா? ஏன்?
வாசிப்பூர் எடுக்க அவர்கள் மூவர்தான் தூண்டினார்கள். 2008ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் படம் வந்தது. அதைப் பார்த்தபோது நான் இப்படித்தானே வளர்ந்தேன் என்ற எண்ணம் வந்தது. 2009இல் பாலாவின் நான் கடவுள் படம் வெளியானது. இன்றைய வாரணாசியில் படம் எடுக்கப்பட்டது. நான் அங்கு வாழ்ந்திருக்கிறேன். ஆனால், அந்த வாழ்க்கையை இன்னொரு இயக்குநர் படமாக எடுக்கிறார். 2010இல் உடான் படத்திற்கான கதையை விக்ரமாதித்ய மோட்வானே எழுதி என்னிடம் காட்டினார். நான் எழுத வேண்டிய கதையை நீ எப்படி எழுதலாம் என எனக்கு பெருங்கோபம் வந்தது. இதனால்தான் வாசிப்பூர் படத்தை எடுத்தேன். வேடிக்கையான குழந்தைதனமாக கேங்ஸ்டர்களைப் பற்றி படம் எடுத்தேன். ஜெய்சனின் கதை மூலமாக கொல்கத்தாவிலிருந்து துப்பாக்கியைப் பெற பிளாட்பார்மில் அவர்கள் காத்து கிடப்பதைப் பற்றி எழுதியிருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது.
மின்ட்
உதய் பாட்டியா
fullyfilmy artstation
கருத்துகள்
கருத்துரையிடுக