வயதுவந்தவர்களுக்கு மூளையின் அமைப்புகள் புதிதாக வளர்கின்றன

 

 

 Free illustrations of Artificial intelligence

 

 

 

 

 

விட் ஈகிள்மேன் David eagleman

நரம்பியல் அறிவியலாளர், stanford university, california


நமது மூளை இன்றும் கூட அதிசயமான பொருள். அதில் கற்றல் எப்படி நடைபெறுகிறது என்பதை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இன்றும் கண்டறிய முயன்று வருகிறார்கள். இப்படி மூளையில் பல்வேறு உணர்வுநிலைகளில் எப்படி கற்றல் நடைபெறுகிறது என டேவிட் ஆராய்ச்சி செய்துவருகிறார்.





 

மனிதர்கள் தாம் பெறும் அனுபவங்களைப் பொறுத்து மூளையின் மாறுதல்களைப் பற்றியதுதானே உங்களது ஆராய்ச்சி?


மூளையின் அமைப்பு மாறுவதைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இந்த துறையில்தான் நீங்கள் எனது பெயரைப் பார்க்க முடியும். இப்படித்தான் என்னை நீங்கள் அடுத்தமுறை நினைவுபடுத்திக்கொள்ளமுடியும். மூளையை தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருள் போல என்றுதான் நினைத்தார்கள். ஆனால் நான் அதை லைவ் வயர்ட் என்ற அமைப்பாக பார்க்கிறேன். அதாவது அனுபவங்களுக்கு ஏற்றபடி நிகழ்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. இதன் வலிமை மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்றாற்போல பிளக்குகளை பிடுங்கி வேறிடம் பொருத்திக்கொள்ளும் முறையில் மூளை செயல்படுகிறது.


அப்போது நியூரான்களின் பங்கு இதில் உள்ளதா?


ஆராய்ச்சியாளர்கள் மூளையில் உள்ள ஸ்னாப்செஸ் எனும் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டனர். ஆனால் உண்மையில் நாம் அதை விட முக்கியமான பிறபகுதிகளைப் பார்க்கவேண்டும். குறிப்பாக, நியூரான். இதனை ஆழமாக பார்த்தால், அதன் உள்ளே தனி நகரமே இருப்பது போல தெரியும். அத்தனை விஷயங்களை தகவல்தொடர்புக்கு உதவும் நியூரான் தன்னுள் வைத்திருக்கிறது. இது ஆச்சரியம்தானே? மேலும் மூளையில் நாம் ஆராயவேண்டிய நிறைய அடுக்குகள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து அதன் உண்மைகளை அறிவது முக்கியம்.


மூளையின் கற்றல் செயல்பாடுகளைப் பற்றி சொல்லுங்கள்


நகரத்தில் எப்படி குறிப்பிட்ட பழக்கங்கள் வேகமாக மாறுகிறதோ அதுபோலவே மூளையின் அமைப்பிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்த வகையில் ஃபேஷனைக் கூறலாம். இதனோடு ஒப்பிடும்போது பிற விஷயங்களுக்கு மக்கள் சற்று தாமதமாகவே பழகுவார்கள். சட்டம், அரசு நிர்வாகம், கட்டிடங்களில் உள்ள உணவகங்கள் ஆகியவற்றை இப்படி வரையறுக்கலாம். புதிய விஷயத்தை ஒருவர் கடைப்பிடித்து அது முக்கியம் என்றால் மட்டுமே மூளையில் அது தங்கும். மூளையில் 86 பில்லியன் நியூரான்கள் உள்ளன. நீங்கள் அத்தனையையும் கண்காணிப்பது என்பது கடினமானது. இதன் செயல்பாடுகள் மனிதர்களின் இனக்குழுவில் உள்ளதைப் போலவே திருமணம், விவகாரத்து என அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகின்றன இடமாகவே உள்ளது.


வயதுவந்தவர்களுக்கு மூளையின் அமைப்புகள் புதிதாக வளர்கின்றன என்று கூறுகிறார்களே அது உண்மையா?

நீங்கள் கூறுவது உண்மையா, இல்லையா என்று கண்டறிய முடியாத தன்மை கொண்டது. செயற்கையான நுண்ணறிவில் திடீரென ஒரு நோடை உருவாக்கினால், அதன் செயல்பாடு குறையும். இதுபோல மூளையில் ஆராய்ச்சியைச் செய்ய நம்மால் முடியுமா? நீங்கள் கூறிய கூற்றை உண்மையா என்று ஆராய நாம் ஆராய்ச்சியில் வெகுதூரம் போகவேண்டும்.


நியூரோபிளாஸ்டிசிட்டி என்பதன் விளைவை நாம் பார்க்க முடியுமா? அதாவது தினசரி வாழ்க்கையில் இதை உணர வாய்ப்புள்ளதா?


சைக்கிள் ஓட்டுபவர், அல்லது ஸ்கேட்டிங் போர்டைப் பயன்படுத்துபவர் என இவர்களின் மூளையில் மாறுதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதாவது, புதிய திறனாக பியானோ அல்லது வயலின் கற்றுக்கொள்கிறீர்கள் என்றால், மூளையில் அதற்கான மாற்றம் நடக்கிறது. இதைத்தான் பிளாஸ்டிசிட்டி என்று கூறுகிறோம். இப்படி உடல் உறுப்புகளை குறிப்பிட்ட முறையில் வைத்து கருவியை வாசிப்பவர்களின் மூளை பிறரது மூளை அமைப்பிலிருந்து மாறுபடும். உடலின் செயல்பாடுகளை செய்யும் மூளையின் பகுதி சற்றே பெரிதாக இருக்கும். குறிப்பாக வயலின் அல்லது பியானோ கருவிகளை வாசிப்பவர்களுக்கு விரல்கள் முக்கியம். இதைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி பெரிதாக இருக்கும். பியானோ வாசிப்பவர்களுக்கு இடது, வலது என இரண்டு மூளை பாகங்களும் பெரிதாக இருக்கும்.


இப்படி மூளை மாறுபாடுகளை அடைவது நமக்கு ஏதாவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமா?


பிற விலங்கினங்களை விட மனிதர்களுக்கு மூளை பிறக்கும்போது ஓரளவு வளர்ச்சி அடைந்துள்ளது. அவர்களை சரியானபடி கவனித்து வளர்த்தால், அன்பு, பராமரிப்பு, உணர்ச்சி என அனைத்துமே சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது. இப்படி மூளை சிறப்பாக இயங்குவதால்தான் நாம் இணையத்தை உருவாக்கி உலகை இணைத்துள்ளோம். உலகில் எந்த இடத்தில் சென்றாலும் வாழ முடிகிற திறனைப் பெற்றுள்ளோம்.


அப்படியென்றால், மூளை காலப்போக்கில் திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நமக்கு நிறைய பயன்கள் உண்டு என நினைக்கிறீர்கள் அல்லவா?


பத்தாண்டுகளுக்கு முன்னர் எனக்கு விலங்குகள் கொண்டுள்ள உணர்வு உறுப்புகள் மீது காதல் இருந்தது. அதாவது, விலங்குகளால் ஒளி, வாசனை, புற ஊதாக்கதிர்கள் என பல்வேறு விஷயங்களை தங்களுக்கு இயற்கை கொடுத்துள்ள திறனால் அறிய முடியும். புதிய உணர்வுகளை உருவாக்க ஒவ்வொரு முறையும் இயற்கை மூளையை தனியாக வடிவமைப்பதில்லை. அதில் மாறுதல்களை செய்வதில்லை. மனிதர்களின் திறன்களைப் பொறுத்தவரை அவை, அவற்றை பயன்படுத்தினால் தான் செயல்படும். அதாவது பிளக் இன் பிளக் அவுட் முறை.


நீங்கள் என்ன மாதிரியான புதிய டிடெக்டர்களை மனதில் வைத்துள்ளீர்கள்?


எங்களது ஆய்வகம் புதிய டிடெக்டரை உருவாக்கியுள்ளது. இது உடலின் மொழியைப் பொறுத்து செயல்படக்கூடியது. இதனை உடைபோல நீங்கள் அணிந்துகொள்ளவேண்டும். ஸ்மார்ட்வாட்ச் எப்படி ஒருவரது உடல் அதிர்வுகளைக் கொண்டு அவரது செயல்பாட்டைக் கணிக்கிறதோ அதுபோலத்தான் இதுவும். நாங்கள் தயாரித்துள்ள உடை டிடெக்டர் மூலம் அகச்சிவப்பு, புற ஊதாக்கதிர்கள், ட்ரோன், ரோபோட் ஆகியவை வெளிப்படுத்தும் சிக்னல்களைக் கூட கண்டறிய முடியும். நாங்கள் இதற்கென இந்த தன்மைமைகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றைக் கண்டறிந்துள்ளோம். இதற்கு பஸ் என்று பெயர். மணிக்கட்டிலுள்ள பல்வேறு சிக்னல்களை மூளை பெற்று கட்டளைகளை பிறப்பிக்கிறது. எங்களது கருவியை காதுகேளாதவர்கள் நிறையப் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் கருத்துகளை நாங்கள் மின்னஞ்சல் வழியாக அறிந்து வருகிறோம்.


மாற்றுத்திறனாளிகள் உங்களது கருவி வழியாக பேச்சுகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும் என்று கூற வருகிறீர்களா?


நாங்கள் கண்டுபிடித்த மணிக்கட்டில் பொருத்தும் கருவியை எடுத்துக்கொள்ளுங்கள். அது மணிக்கட்டில் நடக்கும் பல்வேறு செயல்பாடுகளை அடையாளம் கண்டறிந்து புரிந்துகொள்கிறது. தோராயமாக 4 பில்லியன் பேட்டர்ன்களை அது உருவாக்கும் திறன் கொண்டது. அதனை நான் அணிந்துகொண்டு ஒன்று, இரண்டு என்று சொன்னால், அதன் வேறுபாட்டை ஒருவர் எளிதாக புரிந்துகொள்ளமுடியும். மணிக்கட்டில் அணியும் இக்கருவியை ஒருவர் ஓராண்டு அல்லது அதற்கு மேலான காலம் அணிந்தால்தான் அதில் வேறுபாட்டை அறிய முடியும். நாங்கள் அதற்காகத்தான் காத்திருக்கிறோம். மூளை இக்கருவியில் கிடைக்கு்ம் சிக்னல்களை வைத்து எப்படி மாறுபாடு அடைகிறது என்பதை பார்ப்பது அவசியம்.


இக்கருவியை பயன்படுத்தும்போது எப்படியிருக்கும் என்று கூறுங்கள்.


இதனை கையில் மாட்டியிருக்கும்போது நாயின் முகம் அசைவதைப் பார்த்தால் முதலில் ஒருவருக்கு நாய் குரைக்கிறது என்பது புரியும். கருவி சிறிய அதிர்வுகளை எழுப்பும். பிறகு, மெல்ல நாய் குரைப்பதை ஒருவர் கேட்பதை உணரலாம். குழந்தைகளுக்கு காது அமைப்புகள் வளரும்போது அவர்கள் எப்படி ஒலியை உணர்வார்கள்? ஒருவருக்கு மூளை உருவாகிய உடனே ஒலியை எளிதாக உணர்ந்து புரிந்துகொள்ளமுடியாது. இந்த கருவியும் அப்படித்தான். ஒலியின் அலைவரிசை எப்படி இருக்கிறது என்பதை விட, கேட்கும் ஒலியை அனுபவிக்க தொடங்குவார்கள். எங்களது பஸ் என்ற கருவி இப்படித்தான் செயல்படுகிறது.


உங்களது கண்டுபிடிப்பை இன்னும் மேம்படுத்த நினைக்கிறீர்களா?


நிச்சயமாக. நான் சிலிகன்வேலியில் வாழ்கிறேன். இங்கு வன்பொருள், மென்பொருள் தயாரிப்புதான் அதிகம் நடைபெறுகிறது. மூளை சார்ந்த நடக்கும் விஷயங்களை நான் லைவ் வேர் என்று அழைக்கிறேன். மூளையைப் பற்றி புரிந்துகொள்வதில் நாம் இன்னும் மலையேறுவதற்கு முன்னதாக அதன் அடிவாரத்தில் நிற்பதுபோலவே இருக்கிறோம். இதுபோல ஒரு இயந்திரத்தை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் மாற்றங்கள் சாத்தியமாகலாம்.

Pixabay





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்