கதையும் இயக்குநரும்தான் படத்திற்கு மிக முக்கியம்! - ராஜ்குமார் ராவ், இந்தி சினிமா நடிகர்
ராஜ்குமார் ராவ்
இந்தி சினிமா நடிகர்
நீங்கள் பதாய் டோ படத்தில் நடித்த ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரமான ஷர்துல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கு உங்கள் நீங்கள் எப்படி தயார் செய்துகொண்டீர்கள்?
ஷர்துல் பாத்திரம் பிற ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரம் போல இருக்க கூடாது என முன்னமே நினைத்தோம். அந்த பாத்திரம் உண்மையாக இருக்கவேண்டுமென நினைத்தோம். சிறுநகரம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவனின் வாழ்க்கையில் பாலியல் என்பது சிறுபங்கு வகிக்கிறது. ஆனாலும் அது முக்கியமானது. தன்னை வெளிக்காட்டாமல் அவன் வாழ்கிறான். அவனைப் போலுள்ள பிறர் அவனை தொடும்போது அது அவனுக்கு தெரிந்துவிடுகிறது. அவன் விழிப்பாகவே இருக்கிறான். நானும் படத்தின் இயக்குநரான வர்தான் குல்கர்னி இந்த நீளத்திற்குத்தான் பாத்திரம் பற்றி பேசினோம். இதைத்தாண்டி கூடுதலாக நான் ஏதும் செய்யவில்லை. காதல் என்பது நீங்கள் உணர்வது அதனை வெளிக்காட்டலாம்.
ஷர்துல் ஒரு ஆணழகன். கட்டழகு உடலுக்காக பயிற்சி செய்தது கடினமாக இருந்தது. நான் சைவ உணவு சாப்பிடுபவன் என்பதால், சற்று கடினமான சவால்தான். ஆனாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். ஆண்மைத்தன்மை கொண்ட நாயகன் என்பதால்தான் பாத்திரத்திற்கு மீசையும் உண்டு.
ஓடிடி தளத்தில் கன்ஸ் அண்ட் குலாப் என்ற வெப் சீரிஸ் செய்து வருகிறீர்கள். இந்த இடத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
ஆல்ட் பாலாஜிக்காக போஸ் - டெட் ஆர் அலைவ் செய்திருக்கிறேன். ஓடிடி பிரபலமாக மாறுவதற்கு முன்னாடியே செய்த பணி அது. நாங்கள் வெப் சீரிசுக்காக கடினமாக உழைத்து வருகிறோம். எனக்கு இது பெருமையாகவே இருக்கிறது. ஸ்த்ரீ படத்திற்குப் பிறகு எனக்கு வெப் சீரிஸ் செய்யவே நேரம் கிடைக்கவில்லை. வெப் சீரிஸ் நீளமானது என்பதால் இதில் நிறைய நேரத்தை முதலீடு செய்யவேண்டும். பெருந்தொற்றுக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. மக்கள் இப்போது வீட்டில் உட்கார்ந்து நிறைய வெப் சீரிஸ்களைப் பார்க்கிறார்கள். அதனால் நான் வெப் சீரிஸ் செய்கிறேன். மக்கள் பார்த்தால் போதும். எந்த பிளாட்பாரத்தில் செய்தால் தான் என்ன?
திரைப்படம், கதை, பாத்திரம் ஆகியவை பெருந்தொற்றில் மாறியுள்ளதாக நினைக்கிறீர்களா?
நான் எப்போதும் நம்பும் விஷயம் என்பது கதை, இயக்குநர்கள். இந்த இரண்டு விஷயங்கள் முக்கியம். கதை நன்றாக இருந்தால் மக்கள் அதைப் பார்த்து பாராட்டுவார்கள். நான் எனது திரைப்பட பயணத்தின் தொடக்கத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்தேன். இப்போதும் பல்வேறு விதமான கதைகள், கதை சொல்லும் முறைகளைக் கொண்ட படங்களில் நடித்து வருகிறேன். பெருந்தொற்று காலத்தில் மக்கள் பலரும் உலக சினிமா முதல் பிராந்திய சினிமா வரையில் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இது நல்ல விஷயம்தான். சைலேஷ் கதை, ஒளிப்பதிவு, நடிப்பு என பல்வேறு விஷயங்களையும் மாற்றித்தான் எடுக்கிறார். எனவே இது காப்பி பேஸ்ட் படமாக இருக்காது.
ஸ்த்ரீ படத்தில் இரண்டாவது பாகத்தில் நடிக்கிறீர்கள். இது வேலை செய்யும் என நினைக்கிறீர்களா?
நாங்கள் இதுபற்றிய பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறோம். இரண்டாவது பாகம் என்பதால் சற்று அழுத்தம் இருக்கிறது என்பது உண்மைதான். இயக்குநர் கௌசிக் திறமையானவர். ஸ்த்ரீ படத்தை அவர் சிறப்பாக உருவாக்குவார் என்றே நினைக்கிறேன்.
நீங்கள் நடிக்கும் ஹிட் என்ற படம் தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்படுகிறது. தென்னிந்திய சினிமா, பான் இந்தியா சினிமாவாக எடுக்கப்பட்டு வருகிறது. பிராந்திய சினிமாவை ரீமேக் செய்வது கடினமானதா?
எனக்கு ரீமேக் படங்களுக்கான வாய்ப்புகள் என்பது வாரம்தோறும் ஒன்று என்ற ரீதியில் வருகிறது. படத்தில் கதை, சுவாரசியமாக விஷயம் இருந்தால் அதை ஏற்று நடிக்கலாம். ஒரு படத்தை எதையும் மாற்றாமல் எடுத்தால் அது சலிப்பானது. நான் அதில் இடம்பெற விரும்பவில்லை.
தெலுங்கில் ஹிட் படத்தை எடுத்த இயக்குநர் சைலேஷ் கொலானு தான் இந்தியிலும் படத்தை உருவாக்குகிறார். இளமையான ஊக்கம் நிறைந்த மனிதர்.
இந்தியில் சிறுநகரம் சார்ந்த கதைகள் வருவது அதிகரித்துள்ளதே?
நான் நடித்த டிராப்டு என்ற படம், சிறுநகரத்திற்குள் அடங்காத கதை. அதை நகரத்தில்தான் ஒருவர் செய்யமுடியும். அதேசமயம் பதாய் டோ என்ற படத்தில் வரும் ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரம் கிராமத்தைச் சேர்ந்தது. அந்த பாத்திரம் நகரத்திற்கு வருவதுதான் கதையில் முக்கியமானது. டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் பாலின அடையாளத்தை யாரும் மறைத்து வைப்பதில்லை. அவர்கள் அதை வெளிப்படையாகவே அறிவித்து விடுகிறார்கள். சில கதைகளை கிராமம் சார்ந்து சொல்லலாம். சிலவற்றை அந்த கட்டமைப்பில் கூற முடியாது. பெரிய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை கூறுகிறோம் என்றால் அவர்களைப் பற்றி கூற நல்ல நடிகர்களை அதில் நடிக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் கதை எடுபடாது.
மேன்ஸ் வேர்ல்ட்
மே 2022
கருத்துகள்
கருத்துரையிடுக