இடுகைகள்

காடுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காடுகள் சட்டத்தில் மாறும் விதிகள்!

படம்
  வனவிலங்கு மேலாண்மையில் புதிய சீர்திருத்தம்! இந்தியாவில் வன விலங்குகளையும், அவை வாழும் காடுகளையும் பாதுகாக்க வனப்பாதுகாப்பு சட்டம் உள்ளது. 1972ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. தற்போதுவரை இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.   2021ஆம் ஆண்டு மத்திய அரசு, வனப் பாதுகாப்பு சட்டத்தில் சில மாறுதல்களை செய்துள்ளது. இதில், விளைநிலங்களுக்குள் வரும் விலங்குகளை வேட்டையாடுவது குற்றமல்ல என்ற ஷரத்து இடம்பெற்றிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய சட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.  மேற்குலக நாடுகளில் விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிமங்களை அரசு வழங்குவது, வருவாய்க்கான முக்கிய வழி. “பாதுகாக்கப்பட்ட பகுதி, தேசியப் பூங்கா ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, பிற இடங்களுக்கு வரும் விலங்குகளை வேட்டையாடுவது  விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க உதவும்” என ட்ரூ கன்சர்வேசன் அலையன்ஸ்(TCA) என்ற அமைப்பு கூறியுள்ளது. மேலும், வனப்பாதுகாப்பு சட்டம் என்பதை வன ஆதாரங்கள் மேல

பழங்குடிகளை முன்னேற்றிய காடுகள் வளர்ப்பு!

படம்
  பழங்குடிகளை முன்னேற்றிய காடுகள் வளர்ப்பு கர்நாடக மாநிலம் உடுப்பியில் கொரகா பழங்குடி இனத்தினர், காடுகள் வளர்த்து தம் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டுள்ளனர்.  கர்நாடகத்திலுள்ள பழங்குடி இனங்களில் மிகவும் பிற்பட்டவர்கள் கொரகா பழங்குடியினர். இவர்கள் தற்போது ஆக்சன் எய்டு இந்தியா, கொரகா பௌண்டேஷன் ஆகிய அமைப்புகள் மூலம் நிதியுதவி பெற்று பழமரங்களை வளர்த்து வருகின்றனர். முதலில் குத்தகை முறையில் பழமரங்கள், நெல் ஆகியவற்றை வளர்த்தவர்கள் இன்று சொந்தமாக நிலங்களை வாங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.  கர்நாடகத்தின் வனச்சட்டம் 1963, 1972 ஆகியவற்றால் காட்டில் வாழ்ந்த கொரகா பழங்குடிகள் அங்கிருந்து வெளியேற நேரிட்டது. நகருக்குள் வந்தவர்கள் பிரம்பு பொருட்களை செய்தும், மனிதக்கழிவுகளை அகற்றியும் வாழ்ந்து வந்தனர்.  இவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் செய்த உதவியால் பல்வேறு நிலப்பரப்புகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தனர்.  இதன் விளைவாக, 49  ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதில் 47 ஆயிரம் ஏக்கர் கொரகா உள்ளிட்ட பழங்குடி இனக்குழுவினர் உருவாக்கியதாகும்.  இச்சாதனையைப் பாராட்டி இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் ஹேப

பசுமைத்திட்டங்கள் நகரங்கள் பாதிப்பைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா? பசுமை வளைய திட்டங்கள் தொடக்கம்

படம்
      பிக்சாபே         பசுமை பாதுகாப்பு வளையம் ! பருவச்சூழல் மாறுபாடுகளால் உலக நாடுகள் அனைத்தும் வெள்ளம் , புயல் , வறட்சி , சுனாமி , நிலநடுக்கம் ஆகிய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன . இதற்கு முக்கியக்காரணம் , அதிகரிக்கும் மக்கள் தொகையும் அதன்விளைவாக வேகமாக அழிக்கப்படும் காடுகளும்தான் . தற்போது இந்தியாவில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன . 2100 ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் பெரு நகரங்களில் வசிப்பார்கள் என்பதால் , நகரில் உள்ள பல்வேறு ஏரிகள் , குளங்கள் , சதுப்புநிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் அவசியம் உருவாகி வருகிறது . ” மனிதர்களின் ஆரோக்கியம் இயற்கைச்சூழலோடு தொடர்புடையது” என்று ஐ . நா . அமைப்பின் தலைவர் அன்டானியோ குடாரெஸ் கூறியுள்ளார் . இயற்கைக் சூழல் பற்றி ஐ . நா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது . அதில் , இயற்கையின் பன்மைத்துவச்சூழல் அழியும்போது , நுண்ணுயிரிகள் விலங்குகளிடமிருந்து மிக எளிதாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது . தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இயற்கைச்சூழலை பாதுகாப்பதற்கான பணிகளை

காடுகளை வகைப்படுத்துகிறது இந்திய அரசு! - காடுகள் வளருமா?

படம்
pixabay இந்திய அரசு காடுகளை மக்களை உள்ளே அனுமதிக்கும் (Go), அனுமதிக்காத (Non go)  என வகைப்படுத்தி கொள்கைகளை வகுத்துள்ளது. இதன்படி காடுகளில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்கள் உள்ள பகுதிகளுக்கு குறைவான அனுமதியே அளிக்கப்படவிருக்கிறது. பிற பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செய்துகொள்ளலாம். இதனை ஹை, மீடியம், லோ என மூன்று பிரிவுகளாக அரசு பிரித்துள்ளது. இதன்படி ஹை எனும் பிரிவில் உள்ள காடுகளில் எந்த வித வளர்ச்சிப்பணிகளையும் அரசு மேற்கொள்ளாது. பிற நிறுவனங்களும் அப்பகுதியில் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது. மீடியம், லோ ஆகிய பகுதிகளில் வளர்ச்சி சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம். 2019ஆம் ஆண்டு தகவல்படி இந்தியாவில் உள்ள காடுகளில் சதவீதம் 21.9 ஆகும். இதுவரை 7,12, 249 சதுர கி.மீ. தொலைவுக்கு காடுகள் பரவியுள்ளன. 1980ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 1.52 மில்லியன் ஏக்கர்கள் அளவுக்கு காடுகள் வளர்ச்சிப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய காடுகள் மற்றும் ஆராய்ச்சிக்கழகம் மத்திய அரசுக்கான கொள்கைகளை பரிந்துரைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இது தொடர்பான அறிக்கைகளை அரசு வழங்கலாம்.

பழங்குடித் தலைவரை கொன்ற சமூக விரோதிகள் - பிரேசில் அட்டூழியம்

படம்
பிரேசிலின் அமேசான் காடுகளைப் பாதுகாக்க போராடிய தலைவர்களில் ஒருவரான லோபோ நவ.1 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை அங்கு 135 சூழலியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குவாஜாஜரா எனும் பழங்குடி இனக்குழு தலைவராக இருந்த பாலோ பாலினோ குவாஜாஜரா என்ற 26 வயது இளைஞர், தற்போது கொல்லப்பட்ட சூழலியலாளர் பட்டியலில் இணைந்துள்ளார். அவரையும்  கொலைகார கும்பல் விட்டுவைக்காமல் கொன்றுவிட்டனர். அங்கு சட்டவிரோதமாக மரங்களை, விலங்குகளை வேட்டையாடும் கும்பல் லோபோவின் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளது. அவரின் நண்பர் லேர்சியோவுக்கும் கடுமையான காயம் பட்டுள்ளது. லோபோ, கார்டியன் ஆப் தி ஃபாரஸ்ட் என்ற உதவிக்குழுவைத் தொடங்கி செயல்பட்டு வந்தார். அராரி போலா எனும் பாதுகாக்கப்பட்ட கானக இடத்தை இவர்கள் பாதுகாத்தனர். இதனை அழிப்பது சட்டவிரோத கும்பலுக்கு முக்கியமான லட்சியமாக இருந்தது. பிரேசில் அதிபர் பொல்சனாரோ தேர்ந்தெடுக்கப்படும் சமயத்தில் இக்கொலைகள் அதிகரித்து வந்தது தற்செயலான ஒன்று என நியூயார்க் டைம்ஸ் வஞ்சப் புகழ்ச்சியணியாக எழுதியுள்ளது. வலதுசாரி அதிபரான பொல்சனாரோ, காடுகளை அழிப்பதில் பேரார்வம் க

தமிழகத்தில் பரவும் அகிரா மியாவகி வகை காடுகள்!

படம்
நகரில் வளர்க்கலாம் காட்டை! நகரில் லூயிஸ் பிலிப் சட்டை போட்டு ஆபீஸ் செல்லும் அனைவரின் மனதிலும் காட்டைப் பற்றிய எண்ணம் ரகசியமாக இருக்கும். காரணம் நாம் அங்கிருந்து வந்தவர்கள்தானே? இதன்காரணமாகவே நாம் பழுப்பை விட பச்சையை விரும்புகிறோம். வயல்வெளியைப் பார்த்தால் ஒருகணம் திடுக்கிட்டு நின்றுவிடுகிறோம். ஆனால் நகரத்தில் எங்கே பசுமையைக் காண? அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் துவக்கம் குழுவினர். ஜப்பானைச்  சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவகியின் டெக்னிக்தான் நகரங்களில் கிடைக்கும் இடங்களில் மரக்கன்றுகளை உருவாக்குவது. இதனை கையில் எடுத்து குரோம்பேட்டையிலுள்ள ஜெயின் பள்ளியில் மினி காட்டை உருவாக்கிக் காட்டினர். சென்னையில் தண்ணீர் கிடையாது. இந்த லட்சணத்தில் எப்படி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது? என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதில் உள்ளது. நம்மோடு பேசிக்கொண்டே அவருக்கு வந்த 40 போன்கால்களையும் பேசிச் சமாளிக்கிறார். அடுத்த கோடைக்குள் மரங்களை உருவாக்கும் வேகத்தில் மக்கள் உள்ளனர். இம்முறையில் நாங்கள் அனைத்து வகை மரக்கன்றுகளையும் ஒன்றாகவே விதைக்கிறோம். இது அசப்பில் காடுபோன்ற டெக்னிக்தான். இடம்தான்

இயற்கையை அழிக்கும் ஐரோப்பா - மெர்கோசர் ஒப்பந்தம்!

படம்
ஐரோப்பா - மெர்கோசர் வணிக ஒப்பந்தம். ஐரோப்பிய யூனியனுக்கும், மெர்கோசர் - (  Brazil, Uruguay, Argentina and Paraguay   ) ஆகிய நாடுகளுக்குமான வணிக ஒப்பந்தம் நீண்ட நாட்களாக முடிவுகளுக்கு வராமல் இழுபட்டு வந்தது. தற்போது அந்த ஒப்பந்தம் சீராகியிருக்கிறது. இதன்மூலம் மாட்டுக்கறியை பிரேசில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மிக குறைந்த வரியில் ஏற்றுமதி செய்யலாம். ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மெர்கோசர் நாடுகளுக்கு இறக்குமதியாகும் கார்களுக்கு வரி குறைவாக விதிக்கப்படுவது இதன் சிறப்பு. மேலும் மெர்கோசர் நாடுகளின் விவசாயப் பொருட்கள் பலவற்றுக்கும் ஐரோப்பிய நாடுகள் சிறந்த சந்தையாக மாற வாய்ப்பு உள்ளது. வெனிசுலாவும் மெர்கோசர் நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது. ஆனால் அங்கு பொருளாதார பிரச்னை, உள்நாட்டுக் கலவரங்கள் வெடிக்க 2016 ஆம் ஆண்டிலிருந்து நீக்கப்பட்டது. இயற்கை சூழலியலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இதனை சூழலியலுக்கு எதிரானாதாகவே சந்தேகத்துடன் பார்த்து வருகின்றனர். உலகில் மாட்டுக்கறி ஏற்றுமதியில் பிரேசில் நாடு 15 சதவீத த்துடன் முன்னிலை வகிக்கிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், வி