காடுகளை வகைப்படுத்துகிறது இந்திய அரசு! - காடுகள் வளருமா?





Treehouse, Forest, Composing, Fantasy, Landscape
pixabay


இந்திய அரசு காடுகளை மக்களை உள்ளே அனுமதிக்கும் (Go), அனுமதிக்காத (Non go)  என வகைப்படுத்தி கொள்கைகளை வகுத்துள்ளது. இதன்படி காடுகளில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்கள் உள்ள பகுதிகளுக்கு குறைவான அனுமதியே அளிக்கப்படவிருக்கிறது. பிற பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செய்துகொள்ளலாம்.

இதனை ஹை, மீடியம், லோ என மூன்று பிரிவுகளாக அரசு பிரித்துள்ளது. இதன்படி ஹை எனும் பிரிவில் உள்ள காடுகளில் எந்த வித வளர்ச்சிப்பணிகளையும் அரசு மேற்கொள்ளாது. பிற நிறுவனங்களும் அப்பகுதியில் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது. மீடியம், லோ ஆகிய பகுதிகளில் வளர்ச்சி சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம்.


2019ஆம் ஆண்டு தகவல்படி இந்தியாவில் உள்ள காடுகளில் சதவீதம் 21.9 ஆகும். இதுவரை 7,12, 249 சதுர கி.மீ. தொலைவுக்கு காடுகள் பரவியுள்ளன. 1980ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 1.52 மில்லியன் ஏக்கர்கள் அளவுக்கு காடுகள் வளர்ச்சிப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய காடுகள் மற்றும் ஆராய்ச்சிக்கழகம் மத்திய அரசுக்கான கொள்கைகளை பரிந்துரைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இது தொடர்பான அறிக்கைகளை அரசு வழங்கலாம்.

பிரபலமான இடுகைகள்