மாற்று உணவுகளை நாம் தேடுவது அவசியம்!

Image result for lupin beans




மாற்று உணவுகளுக்கான தேவை எப்போதும் உள்ளது. பசு, ஆடு, கோழி ஆகியவற்றிலிருந்து இறைச்சியைப் பெற்றாலும் இதிலிருந்து வெளியாகும் கார்பன் அளவு அதிகம். எனவே, ஆய்வகங்களில் இறைச்சி செயற்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது. நாளை இயற்கையாக கிடைக்கும் இறைச்சி கிடைக்காத சூழலில் ஆய்வக இறைச்சி பெரும் சந்தைப் பங்களிப்பை பெறும்.
மாற்று உணவுகளை தேட வேண்டுமா?

இன்று உலகம் முழுவதுமே கூட அரிசி, கோதுமை, சோளம் என குறிப்பிட்ட உணவுப் பயிர்களே உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் விளைவித்துகொண்டிருக்கிறோம். நாளை இவை நுண்ணுயிரிகளால், இயற்கைப் பேரிடர்களால் தாக்கப்படும்போது பல்வேறு நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிடும். எனவே தற்போதைய உணவிலுள்ள சத்துக்களைக் கொண்ட மாற்றைத் தேடுவது எதிர்காலத்திற்கு உதவும்.
குதிரை, கங்காரு, நாய், பன்றி, பாடும் பறவை ஆகியவற்றை உலகின் சில பகுதிகளில் கூறுபோட்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு வருகிறார்கள். இவற்றையா சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதிலிருந்து வைரஸை பிற நாடுகளுக்கு அனுப்பிவிடாமல் இருந்தால் போதும் தெய்வமே?
தெற்காசிய நாடுகளில் எலி, பெருச்சாளி ஆகியவற்றை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. 

மண்ணில் உள்ள பல்வேறு வகை புழுக்களையும் மக்கள் விடுவேனா என வறுத்து, அவித்து, பொரித்து வகையாக கடித்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள். இவ்வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள விட்செட்டி புழு முக்கியமானது.
மழைக்காலத்தில் கிராம பகுதிகளில் இருப்பவர்கள் லச்சையே படாமல் ஈசல் பிடிக்க போவார்கள். ஈசல் என்பது என்ன கரையானுக்கு இறக்கை முளைத்தால் அதுதான் ஈசல். இவற்றைப் பிடித்துப்போட்டு வறுத்து அரிசிமாவு, சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் அமேசிங்.. நம்மூரில் இப்படியென்றால் சீனாவில் அனைத்து வகை பூச்சிகளையும் சாப்பிடுகிறார்கள். மேலே பூச்சிகளின் புழுக்களை சாப்பிடுகிறவர்கள் மனிதர்கள், இதை மட்டும் விட்டா வைப்பார்கள்? இதனை சாப்பிடுவதற்கு முக்கியக் காரணம், இதிலுள்ள புரதம். அனைத்து உணவுகளிலும் புரதம் கிடைப்பதில்லை.
2013ஆம் ஆண்டு டெஸ்ட் ட்யூப்களில் பசுவின் ஸ்டெம் செல்கள் மூலம் இறைச்சியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. இது அனைவருக்குமான உணவுத்தேவையைப் போக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்திற்காக முயற்சி செய்திருக்கிறார்கள். 

புதிய உணவுக்கான தகுதிகள்

குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்த வேண்டும்.
மலிவான விலையில் பெறக்கூடியதாக இருக்கவேண்டும்.

மனிதர்களின் அடிப்படை உடல் தேவைகளுக்கான சத்துகள், வைட்டமின்கள், அமினோ அமிலங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த விதிகளில் உணவு இப்போது கிடையாது. உருவாக்குகிறோம் என்பவர்கள் உருவாக்கியதுதான் டெஸ்ட் டியூப் இறைச்சி. இல்லை அதற்கான உணவு இயற்கையில் இருக்கிறது என்பவர்கள் லூபின் பீன்ஸ் மற்றும் பாசிகளை மாற்று உணவாக சொல்லுகிறார்கள்.

பாசிகள் இப்போது பல்வேறு குளிர்பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனை மேம்படுத்தினால் இதில் மாவைத் தயாரிக்க முடியும்.
லூபின் பீன்சிலும் மாவு, இறைச்சி  தயாரிக்க முடியும். 

ஃபைபரை நேரடியாக உணவாக கொள்ள முடியுமா? முடியாது. காரணம் இதிலுள்ள செல்லுலோசை நாம் ஸ்டார்ச்சாக மாற்றினால் மட்டுமே நம் உடல் அதனை செரிக்கும். அப்போதுதான் அதனை உணவாகவும் நாம் கொள்ள முடியும்.