என்பிஆர், என்ஆர்சியில் ரகசியம் ஏதுமில்லை!
மக்கள்தொகை, குடியுரிமைத் திருத்தசட்டம் தொடர்பான தகவல்கள் எந்த
அமைப்புகளுக்கும் அளிக்கப்படாது!
சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை என்பதே
இல்லை. மேலும் இதில் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்வதற்கான உரிமை என்பதும்
விடுபட்டுள்ளதே?
குடியுரிமைச்சட்டம் அரசியலமைப்புப் படி சரியானதே. நாட்டிற்கும் மக்களுக்கும்
தேவையான சட்டங்களை இயற்ற நாடாளும்ன்றத்திற்கு உரிமை உண்டு. இதுபற்றி அரசமைப்புச்
சட்டத்தில் 246 இதற்கான வழிகாட்டும் குறிப்புகள் கிடைக்கின்றன.
நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரமெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக அங்கு
இயற்றப்படும் சட்டம், அரசமைப்புச்சட்டம் அனைவருக்கும் வழங்கும் அடிப்படை உரிமைகளை
பறிப்பதாக இருக்கலாமா?
நாங்கள் சட்டப்பிரிவு 14 படி, குடியுரிமைச்
சட்டத்தை உருவாகியுள்ளோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம்
ஆகியவற்றிலுள்ள மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக கூறியுள்ளோம். இந்திராகாந்தி,
உகாண்டாவில் இடி அமீன் ஆட்சியின்போது அங்கிருந்தவர்களை இந்துக்களாக கருதி
குடியுரிமையை அளித்தார்.மேலும் இந்திரா, கிழக்கு பாகிஸ்தானிலுள்ள ராஜீவ் காந்தி இம்முறையில்தான் இலங்கை
தமிழர்களுக்கு குடியுரிமை அளித்தார். இப்படி இந்த மசோதாவுக்கு முன்னரே நிறைய
எடுத்துக்காட்டுகள் உள்ளன.
என்ஆர்சி எப்படி நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது?
2003ஆம் ஆண்டு இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. ஆனால் இதுதொடர்பான
விவாதம், ஆட்சேபணைகள், கருத்துகள், அறிவுறுத்தல்கள் கிடைத்தன. ஆனால் இன்னும் இந்த
திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. விதி 4இன் கீழ் குடியுரிமைச்சட்டம்
அமல்படுத்தப்படும். இதுபற்றி மாநில அரசுகளிடம் கருத்துகளைக் கேட்டு ஆலோசித்து
நடைமுறைப்படுத்தப்படும். அசாமில் என்ஆர்சி உச்சநீதிமன்றத்தில் ஆணைப்படி மீண்டும்
அமல்படுத்தப்படும். இந்த நடைமுறைகள் வெளிப்படையானவை. ரகசியம் ஏதுமில்லை.
என்பிஆர், என்ஆர்சியில் குறிப்பிட்ட ஒருவரின் பெற்றோர் பெயர், அவர் பிறந்த
இடம் ஆகியவற்றை கேட்பதாக கூறப்படுகிறதே?
நீங்கள் கூறும் இரண்டு சட்டங்களுமே காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததுதான். இன்று
அவர்கள் அதனை திரித்து மக்களிடையே பேசி வருகின்றனர். உண்மையில் குறிப்பிட்ட எந்த
இனக்குழுவுக்கும் விரோதமான கருத்துகளை இதில் நாங்கள் கூறவில்லை. தேவையற்ற
விவரங்களை கேட்கவில்லை. அரசமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டே இச்செயல்பாடுகளை
செய்யவிருக்கிறோம். இதுதொடர்பான தகவல்களை எந்த அமைப்புகளுக்கும் தராமல் அரசே
பாதுகாக்கும்.
மேற்சொன்ன சட்டம் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும்
முரண்பாடாக பேசியுள்ளனரே?
அமித் ஷா இரண்டு சட்டங்களையும் விளக்கி பேசினார். பிரதமர் மோடி அதனை
ஒருங்கிணைத்து பேசியுள்ளார். வேறுபாடு அவ்வளவுதான்.
உங்களது குடியுரிமைச்சட்டத்தில் இந்துகள் விடுபட வாய்ப்புள்ளதா?
குடியுரிமைச் சட்டத்தில் இந்துவாக, இந்தியாவில் வாழ்ந்து வந்தவர்களுக்கு
குடியுரிமை வழங்கப்படும். அவர்கள் விடுபட வாய்ப்பு இல்லை.
மாணவர்கள் அரசமைப்புச்சட்டத்தை வைத்தபடி போராடி வருகிறார்களே?
இந்தியாவில் அமைதி வழியில் போராட அரசு அனுமதிக்கிறது. ஆனால் அவர்கள் அமைதியை
குலைக்கும் வழியில் பொதுச்சொத்துக்கு ஆபத்து விளைவிப்பது சரியான செயல்பாடு அல்ல.
உ.பி அரசு அரசு சொத்துகளுக்கு பாதிப்பு விளைவித்தவர்கள் அதற்கான
இழப்பீட்டைத் தரவேண்டுமென கோருகிறதே?
வரிகட்டும் மக்களின் பணத்தால் வாங்கப்பட்ட பொருட்கள் அவை. அவற்றுக்கு சேதம்
விளைவித்தவர்கள் அதற்கு இழப்பீடு தருவது சரியானதுதானே? இதில் நீதிமன்றத்தில்
வழிகாட்டுதலும் உண்டு. இதில் அப்பாவிகள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என
உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது.
நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ், மார்ச் 2020