தாய்மொழியை மறக்கும் திபெத் மாணவர்கள்!



Image result for bilingual education policy in china



சீன அரசு திபெத் பகுதியை தன்னுடைய பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. திபெத் மாணவர்களுக்கு இருமொழி முறையில் கல்வி கற்பித்து வருகிறது. இதில் பெரும்பாலும் தாய்மொழியை விட மாண்டரின் மொழியைக் கற்றுத்தர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்குள்ள தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு திபெத்திய தாய்மொழியை விட மாண்டரின் மொழியைக் கற்றுத்தர சீன அரசு முயன்று வருவதை மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜிங் பிங் தலைமையில் சீனாவில் நடந்து வரும் ஆட்சி, தேசியவாதத்தை  தீவிரமாக வலியுறுத்துகிறது. இதன் விளைவாக, திபெத் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகள் சட்டம் திரும்ப ப்பெறப்பட்டது. இருமொழி கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டது. அங்கு மூன்று வயதிலிருந்து குழந்தைகளுக்கு பள்ளிகளில் சீனமொழியை பயிற்றுவிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நாட்டை ஒரே நாடாக ஒருங்கிணைக்க முடியும் என அரசு நினைக்கிறது.

2010-12 காலகட்டத்தில் திபெத்தின் கிங்கெய் பகுதியில் சீனமொழி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.  ஆனாலும் அரசை எதிர்த்து நிற்கமுடியவில்லை. பின்னர், பள்ளிகளில் அனைத்து பிரிவுகளிலும் சீனமொழியை கொண்டு வந்துவிட்டனர். வரும் மாதங்களில் இம்மொழியில்தான் அங்கு தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன.

இதுபற்றி மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தது. அரசு, நாங்கள் இருமொழிக்கொள்கைகளை வலியுறுத்துகிறோம் என்று கூறி ஒதுங்கிக்கொண்டது. ஆனால் பல்வேறு பள்ளிகளிலும் திபெத்திய மொழியிலிருந்து சீன மொழிக்கு மாறச்சொல்லி மறைமுக அச்சுறுத்தலை அரசு அளித்துவருகிறது எதார்த்தமாக உள்ளது.

திபெத்தில் சீனத்துக்கு எதிராக உருவாகி வரும் கிளர்ச்சிகளை, போராட்டங்களை ஒடுக்க சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிராக சீனா இதுபோல சட்டங்களை கொண்டு வருகிறது என்கிறது மனித உரிமை அமைப்பு.

நன்றி - மனித உரிமைகள் கண்காணிப்பகம்.