இடுகைகள்

லடாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோனம் வாங்சுக் எனும் கல்வியாளர் லடாக்கை எப்படி மாற்றினார்? - லடாக்கில் உதிக்கும் சூரியன்

படம்
லடாக்கில் உதிக்கும் சூரியன் தன் அறிவைக் கொண்டு சமூகத்திற்கே புதிய பாதை அமைக்கும் மனிதநேய மனிதர்களுக்கு மகுடம் சூட்டி உச்சிமுகர்ந்து பாராட்டும் ரோலக்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி(லாஸ் ஏஞ்சல்ஸ் 2015) அது. கண்கவர் மேடையில் இந்தியாவிற்கான தனித்துவ கனவை தன் மூளையில் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தார் சிறிய மனிதரொருவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள லடாக்கின் ப்பே என்ற கிராமத்தைச் சேர்ந்த அம்மனிதர், பாரம்பரிய உடையில் மக்கள் பங்களிப்புடன் தான் கட்டிவரும் சுற்றுச்சூழலுக்குகந்த பல்கலைக்கழகம் பற்றிக் கூறியது அங்கிருந்த பலரது புருவத்தையும் உயர வைத்தது. கண்டுபிடிப்பாளர் சோனம் வான்சுக் என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் 3 இடியட்ஸ் ஹிந்தி திரைப்படத்தின் அமீர்கான் கேரக்டரான புன்சுக் வாங்குடுவின் அசல் இவர்தான் என்றால் உங்களுக்கும் புரிந்திருக்குமே! 1988 ஆம் ஆண்டு லடாக்கில் அப்பகுதி மாணவர்களுக்காக செக்மோல்(Student's Educational and Cultural Movement of Ladakh(SECMOL)) என்ற பள்ளியை தொடங்கி நடத்திவரும் சோனம் வாங்சுக், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டதாரி. பட்டம் பெற்றவுடன் அமெரிக்கா செல்ல விசாவுக்காக க்யூவில் ந...

நூறு நிலங்களின் மலை - மனதில் கற்பனைகளை பெருகச் செய்யும் நிலவெளியின் வரலாறு! - ஜெயமோகன் - கிழக்குப் பதிப்பகம்

படம்
  நூறு நிலங்களின் மலை ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் மின்னூல் எழுத்தாளர் ஜெயமோகன் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளுக்கு தனது நண்பர்களுடன் சென்ற பயண அனுபவமே நூறு நிலங்களின் மலை என்ற நூலாக மாறியிருக்கிறது.  இமயமலையில் பொதுவாக மலையேற்ற வீரர்கள் அல்லது டிடிஎஃப் வாசன் போன்றோர் சென்று தங்கள் அனுபவத்தை பதிவு செய்வார்கள். ஆனால் எழுத்தாளர் சென்றால், அந்த அனுபவத்தை சேற்றுப்படிவ பாறைகளை, ஆற்றின் கடும் குளிரை, அறையில் வீசும் தழைமணம் கொண்ட ஆப்பிள் மணத்தை பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இங்கு வேறுபடுகிறது.  ஐந்து மாநிலங்களின் வழியாக காரில் சமண மடாலயங்களுக்கு சென்று வந்த அனுபவங்களை ஜெயமோகன் முன்றே எழுதியிருக்கிறார். இந்த நூலிலும் அப்படியொரு இலக்கை எட்டியிருக்கிறார். இமயமலை பகுதிகளில் உள்ள ஏராளமான புத்த மடாலயங்களுக்கு சென்று அங்குள்ள விதவிதமான வடிவங்களில் பெயர்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி நமக்கு விளக்குகிறார். கூடவே அந்த நிலப்பரப்புகளில் வாழும் மக்கள், அங்கு நிலவும் அரசியல் ஆகியவை பற்றியும் எழுதுகிறார். இது, நூலுக்கு தனிப்பட்ட ஈர்ப்பை வழங்கியுள்ளது.  ஷியா,சுன்னி முஸ்ல...

பனிச்சிறுத்தையை லடாக்கில் படம் பிடித்தது சவாலான சம்பவம்! - ஆதித்ய டிக்கி சிங்

படம்
  ஆதித்ய டிக்கி சிங் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் புகைப்படத்துறைக்குள் எப்போது நுழைந்தீர்கள்? 1999ஆம் ஆண்டு. இந்தியாவின் ரந்தம்பூரில் பிபிசிக்கான ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஒளிப்பதிவாளர்கள் தங்கள் பணியில் தீவிரமாக இருந்தனர். நான் பணியின்போது புகைப்படம் எடுக்கும் தேவை இருந்தது. அங்கிருந்தவர்களில் என்னால் மட்டும்தான் கேமராவின் கையேட்டை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தது. இப்படித்தான் அந்த வேலையை செய்து புகைப்படக்காரனானேன்.  கேமராவை எப்போதாவது சேதப்படுத்தி உள்ளீர்களா? நிச்சயமாக. இரண்டு லென்ஸ்கள், இரண்டு கேமராக்களை சேதப்படுத்தியுள்ளேன். அதை நினைத்து அப்போது பெரிய வருத்தம்... புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல நினைக்கிறீர்களா? பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் நீங்கள் உழைத்தாக வேண்டும். எனவே, தயாராக இருங்கள். உழையுங்கள்.  புலிகளை புகைப்படம் எடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றவர். அப்படி புகைப்படம் எடுத்ததில் எது சிறந்த விஷயம்? நிலத்தில் வாழும் வேட்டையாடிகளை படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. ரந்தம்பூரில் உள்ள பல...