இடுகைகள்

சூழல்கட்டிடங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழை மனிதர்களுக்கு வீடுகட்டிக்கொடுக்க முயன்ற மனுஷகுமாரன்! - பறவைக்கும் கூடுண்டு - லாரி பேக்கர் - ஈரோடு வெ.ஜீவானந்தம்

படம்
      லாரிபேக்கர் தனது மனைவி எலிசபெத்துடன்     மனுஷகுமாரனுக்கு தலைசாய்க்க வீட்டைக் கட்டியவர் - லாரிபேக்கர் பறவைக்கும் கூடுண்டு ! லாரி பேக்கர் தமிழில் வெ . ஜீவானந்தம்   இங்கிலாந்தில் கட்டிடக் கலையை பயின்ற லாரி பேக்கரின் மனைவி எலிசபெத் எழுதிய ஆங்கில நூலின் தமிழ்மொழிபெயர்ப்பு . அண்மையில் மறைந்த மருத்துவர் வெ . ஜீவானந்தம் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் . லாரிபேக்கர் இங்கிலாந்தில் கட்டிடக்கலை பயின்றவர் . 1943 ஆம் ஆண்டு மிஷனரி சேவைகளுக்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வருகிறார் . காந்தியை அவர் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது . அதனால் ஊக்கம்பெற்றவர் பின்னாளில் தனது தாய்நாட்டிற்கு திரும்பினாலும் கூட இந்தியாவை அவர் மறக்கவில்லை . மீண்டும் இந்தியாவுக்கு க்வாக்கர் குழு மூலம் பல்வேறு சேவைகளை செய்ய வருகிறார் . அவர் காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துகொண்டே இந்தியாவிலுள்ள கல்கத்தாவிற்கு வருகிறார் . இளம் வயதில் , போருக்கு எதிரான மனநிலை கொண்டவராக இருந்து க்வாக்கர் குழுவில் சேர்கிறார் .. உலகப்போரில் இவரை ராணுவத்திற்கு அழைக்க , புனி