ஏழை மனிதர்களுக்கு வீடுகட்டிக்கொடுக்க முயன்ற மனுஷகுமாரன்! - பறவைக்கும் கூடுண்டு - லாரி பேக்கர் - ஈரோடு வெ.ஜீவானந்தம்
லாரிபேக்கர் தனது மனைவி எலிசபெத்துடன் |
மனுஷகுமாரனுக்கு தலைசாய்க்க வீட்டைக் கட்டியவர் - லாரிபேக்கர்
பறவைக்கும் கூடுண்டு!
லாரி பேக்கர்
தமிழில் வெ.ஜீவானந்தம்
இங்கிலாந்தில் கட்டிடக் கலையை பயின்ற லாரி பேக்கரின் மனைவி எலிசபெத் எழுதிய ஆங்கில நூலின் தமிழ்மொழிபெயர்ப்பு. அண்மையில் மறைந்த மருத்துவர் வெ. ஜீவானந்தம் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
லாரிபேக்கர் இங்கிலாந்தில் கட்டிடக்கலை பயின்றவர். 1943ஆம் ஆண்டு மிஷனரி சேவைகளுக்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வருகிறார். காந்தியை அவர் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. அதனால் ஊக்கம்பெற்றவர் பின்னாளில் தனது தாய்நாட்டிற்கு திரும்பினாலும் கூட இந்தியாவை அவர் மறக்கவில்லை. மீண்டும் இந்தியாவுக்கு க்வாக்கர் குழு மூலம் பல்வேறு சேவைகளை செய்ய வருகிறார்.
அவர் காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துகொண்டே இந்தியாவிலுள்ள கல்கத்தாவிற்கு வருகிறார். இளம் வயதில், போருக்கு எதிரான மனநிலை கொண்டவராக இருந்து க்வாக்கர் குழுவில் சேர்கிறார்.. உலகப்போரில் இவரை ராணுவத்திற்கு அழைக்க, புனித நூலை சாட்சியாக வைத்து தான் போரில் கலந்துகொள்ளாமல் மத அடிப்படையில் வாழ்வதாக கூறி சேவையைத் தேர்ந்தெடுக்கும் துணிச்சல் ஆச்சரியப்பட வைக்கிறது.
உண்மையில் பேக்கர் அந்த வழியில் சேவை செய்துதான் தனது வாழ்வில் லட்சியத்தை அடைகிறார். மயக்க மருந்து கொடுப்பவராக, வண்டி ஓட்டுநராக பல்வேறு நாடுகளில் அலைகிறா்ர். இந்த முற்பகுதி வாழ்க்கை பின்னாளில் லாரி பேக்கர் தான் எடுத்துக்கொண்ட செயலில் உறுதி குறையாமல் வாழ்வதற்கு உதவுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றியவர், தனது மனைவி எலிசபெத்தை மணமுடித்து இமயமலையில் வாழு்ம்படி சூழல் அமைகிறது. ஒருவர் வாழும் சூழலுக்கு ஏற்ற கட்டிடம் கட்டி வாழ்வது அவசியம் என்பதை லாரி பேக்கர் அறிந்துகொண்டு தனது மேற்கத்திய கட்டிட கலையை ஒரம் கட்டி வைக்கிறார். தான் கற்றதில் சில விஷயங்களை எடுத்துக்கொண்டு மீதி அனைத்து விஷயங்களையும் மக்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறார். இமயமலைப்பகுதியில் பனி உள்ளே வரக்கூடாது என ஜன்னலை சிறியதாக அமைக்கிறார்கள் என்றால் கேரளாவில் புழுக்கம் அதிகம் எனவே காற்று அதிகம் உள்ளே வர அளவை பெரிதாக்கி ஜன்னலை அமைக்கவேண்டும் என கற்கிறார்.
லாரிபேக்கர் இந்த கட்டிடம் கட்டியது என்று யாரும் புகழவேண்டுமென கட்டிடங்களை அவர் கட்டவில்லை. அவருக்கு ஒரே லட்சியம் பறவைக்கும் கூடுண்டு. ஆனால் மனுஷகுமாரனுக்கு தலைசாய்க்க இடமில்லை எனும் பைபிள் வாசகத்தின் படி ஏழைகளுக்காக வீடுகட்ட உழைத்தவர் லாரி பேக்கர். கட்டுமானக்கலைஞர் எந்த ஒப்பந்தத்தையும் பற்றிக் கவலைப்படாமல் வீடுகளையும் பல்வேறு கட்டிடங்களையும் கட்டிக் கொடுத்துள்ளார் என்பது வியப்பு ஏற்படுத்துகிறது. நூலில் அவர் கட்டிய கட்டுமானங்களின் படங்கள் இடம்பெற்றிருந்தால் எழுத்து பூர்வமாக சொல்லும் விஷயங்களை எளிதாக பார்த்துக்கொள்ளும்படி இருந்திருக்கும்.
லாரியும் எலிசபெத்தும் திருமண உறவில் நுழைவது என்பது இயல்பானதாகவே நடைபெறுகிறது. தன்னை திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்பதும், அப்படி கேட்பதில் ஆச்சரியம் இல்லை என எலிசபெத் சொல்வதும் படிக்கும்போது மனமொத்த இணையர் என்றுதான் கூறத்தோன்றுகிறது.
மொழியைக் கற்காமல் தனது வேலை சார்ந்த ஈடுபாட்டுடனே வாழ்ந்து தனக்கான பொருளாதாரப் பயன்களைப் பற்றிக் கூட கவலைப்பபடாமல் கட்டிடங்களை கட்டிதந்திருக்கிறார் லாரி பேக்கர். மருத்துவம் சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வெகு ஆண்டுகளுக்கு பின்னரே தான ்படித்த கட்டிடக்கலைக்கான வாய்ப்பினை இந்தியாவில் பெறுகிறார். முதலில் தொழுநோயாளிளளுக்கான சேவை, அவர்களுக்கான இல்லம் கட்டுவது தனது பணியை தொடங்குகிறார். பின்னாளில் அதே தொழுநோயால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்திற்கு சென்று சிகிச்சை பெற்று திரும்புகிறார். இந்த நேரத்தில் அவர் எலிசபெத்தின் மீது கொண்ட காதல் அவருக்கு தைரியமாக இருந்தது..
இமயமலை அருகே உள்ள சாண்டாங் மருத்துவமனை பின்னர் கேரளாவுக்கு இடம்பெயர்ந்து வாகோமோன் அருகே மருத்துவமனையை அமைத்து மக்களுக்கு உதவுகின்றனர். அதுதான் மித்ர நிகேதன் மருத்துவமனையாக பெயர் சூட்டப்படுகிறது. கேரளத்தில் அரசு அமைப்புகளின் உதவியால் பல்வேறு கட்டிடங்களை கட்டுகிறார்.. அவரைப் பொறுத்தவரை சொன்னதைக் கேட்கும் ஆட்கள் கிடைத்தால் போதும். குறைந்த செலவில் வீடுகளை கட்டிவிட முடியும் என்கிறார். இது அங்குள்ள கட்டுமானத்துறையினருக்கு கசப்பாக இருக்கிறது. இதைப் பற்றி லாரி கவலைப்படாமல் இருக்க ஒரே காரணம், அவர் பெயர், புகழ், பணம் ஆகியவற்றுக்கு ஆசைப்பாடல் வேலை செய்கிறார். செய்தார்.
வாழ்க்கை முழுவதும் புதுவிதமான கட்டுமானங்கள், அதற்கான தேவை, மரபான முறையில் உள்ள சாதகமான அம்சங்களை தனது பாக்கெட் நோட்டில் குறித்துகொண்டே இருந்தார். இதனால் நவீனத்துடன் மரபான அம்சங்களை உள்ளே சேர்ந்து கட்டுமானங்களை அமைக்க முடிந்தது. இன்று கூறும் ஆற்றல் குறைவாக தேவைப்படும் கட்டுமானங்களை குறைந்த செலவில் அவரால் அமைத்துக்கொடுக்க முடிந்தது. கேரளத்தில் அதிக கட்டுமானங்களை கட்டுவதற்கு அங்கு சரியான ஆட்களும் கலைஞர்களும் இருந்ததுதான் காரணம். மேற்கத்திய நாடுகளிலுள்ள கட்டிடங்களை மலைகளில் மக்கள் கட்டுவது எப்படி சூழலை அழித்தது என்பதையும் எலிசபெத் நூலில் கூறியுள்ளார்.
அப்படி இடிக்கப்பட்ட பாரம்பரிய வீடுகளில் கிடைத்த கதவுகள், ஜன்னல்களை லாரி பேக்கர் பயன்படுத்தி நிறைய வீடுகளை அமைத்துள்ளார். இதனால் வீடுகள் கலைத்தன்மையும் நவீனமும் கலந்த கலவையாக உருவானது. சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம், நூலகம், பல்வேறு தேவாலயங்களை கட்டினார்.
ஏழைகளுக்கான மனுஷகுமாரன்!
கோமாளிமேடை டீம்
கூடுதலாக தகவல்களுக்கு
எ மேனுவல் ஆஃப் காஸ்ட் கட் ஃபார் ஸ்ட்ராங் அக்செப்டபிள் ஹவுசிங் என்ற நுலை இணையத்தில் தரவிறக்கி படியுங்கள். இது லாரி பேக்கரின் கட்டுமானங்களைப் பற்றிய அறிவை வழங்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக