ஆடியோ மூலமாக என்னென்ன விஷயங்களை செய்யலாம்?
ஆடியோவில் ஆடிப்பாடுவோம்!
ஸ்மார்ட்போன்களில் குரல் மூலம் செயல்படும் உதவியாளர் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகப்போகின்றது. இதனை இன்னும் நாம் சிறப்பாக பயன்படுத்த கற்கவேண்டும். அப்போதுதான் எழுதுவதை விட எளிதாக பேசி ஒரு விஷயத்தை செய்யமுடியும் என்பதை உணர்வீர்கள்.
உதவியாளரால் என்ன செய்யமுடியும்?
ஆப்பிளின் சிரி, கூகுளின் ஆண்ட்ராய்டு சாம்சங்கின் பிக்ஸ்பை ஆகியவை இன்று பெரும்பாலோனாரின் போன்களில் பயன்பாட்டில் உள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்த அதனைப் பற்றி அறிவது அவசியம். எனவே இதுபற்றி இணையத்தில் தேடிப் பார்க்கலாம்.அல்லது போனில் உள்ள உதவியாளரிடமே உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பதில் பெறலாம்.
என்ன செய்யலாம்?
இன்று வேலைகள் என்னென்ன என்பது உங்களது அற்புதமான காந்தர்வ குரலில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். போனில் நோட்ஸ் எடுக்கும் ஆப்புகளும் இருக்கும். அதனைப் பயன்படுத்தலாம். இல்லையெனில் போனில் கம்பெனியே கொடுத்துளமள ரெக்கார்ட் ஆப்பை பயன்படுத்துங்கள். பட்டனை அழுத்தி பேசி பதிவுசெய்துகொண்டு அதனை கணினியில பதிவேற்றி பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நோட்ஸ்களை படிப்பதை விட ஒரு பட்டனில் உங்கள் குரலை கேட்பது எளிது அல்லவா?
பேசியே தட்டச்சு செய்யலாம்
எழுதுவதை விட நான் சொல்லிவிடுகிறேன். அப்படியே தட்டச்சு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லும் பழக்கம் கொண்டவரா? இதற்கென தனி உதவியாளர் தேவையில்லை. போனில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதி இருந்தால் அதனை செட்டிங்கில் சென்று பயன்படுத்துங்கள். என்ன சொல்லவேண்டுமோ அதனை சொல்லுவதோடு, இரட்டை மேற்கோள்குறி, புள்ளி வைத்து முடிப்பது என அனைத்தையும் குரல் வழியாக சொல்லவேண்டும். எனவே பொறுமை காத்தால்தான் பயன் உண்டு. இதனைப் பயன்படுத்தி இதழாசிரியர்கள் தங்கள் கட்டுரைகளை எழுத தொடங்கியுள்ளனர். வேகமாக சொல்லி முடித்துவிட்டு பின்னர் கையால் எளிதாக எடிட் செய்து கட்டுரையை தேற்றி விடுகின்றனர்.
ஆடியோ செய்தி
முக்கியமான விஷயம் என்றால் அதனை அந்த உணர்ச்சிவேகத்தில் சொல்ல ஆடியோவை விட சிறந்த வடிவம் வேறில்லை. கூகுள், ஆப்பிள் என இரண்டு நிறுவனங்களிலும் ஆடியோ செய்தி ஒன்றுபோலத்தான் உள்ளது. மைக்ரோபோன் பட்டனை திரையில் அழுத்தி பேசி உடனே தேவையானவர்களுக்கு அனுப்பி விடலாம்.
பாட்காஸ்ட்
ஜியோ சாவனில் நீலேஷ் மிஷ்ரா கதை சொல்வது பல சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. இதற்கென தனி வலைத்தளம் என எதுவும் தேவையில்லை. ஸ்பாட்டிபை ஆங்கர், பாட்பீன் ஆடியோ ரெக்கார்டர், ஸ்ப்ரீக்கர் ஸ்டூடியோ என இலவசமாக கிடைக்கும், குறிப்பிட்ட காசு கட்டி பயன்படுத்தும் நிறைய மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பாட்காஸ்டில் பேசலாம். இதனை சமூக வலைத்தளத்தில் பாட்காஸ்ட் வலைத்தளங்களில் பகிரலாம்.
டைம்ஸ் ஆப் இந்தியா, நியூயார்க் டைம்ஸ்
image - pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக