ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்போட்டி எனது வாழ்க்கையை மாற்றிப்போட்டது! ஹர்பஜன்சிங் - 13 விக்கெட்டுகளை அள்ளிய பாஜி
2001ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் பெற்ற வெற்றி இந்தியாவிற்கு முக்கியமானது. கூடுதலாக அதில்தான் இருபது வயதான சர்தார் ஒருவர் அணிக்கு கிடைத்தார். பாஜி என்று அழைக்கப்படும் ஆக்ரோஷ சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்தான் அவர்.
முதல்நாளில் மூன்று விக்கெட்டுகள், அடுத்தநாள் ஐந்துவிக்கெட்டுகள் என எடுத்தவர் அந்த போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றது. பாஜி 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவரது வாழ்க்கையே அதற்குப்பிறகு மாறியது. இத்தனைக்கும் இந்த போட்டியில் அவரைத் தேர்ந்தெடுத்ததில் சௌரவ் கங்குலி, பயிற்சியாளர் ஜான் ரைட் ஆகியோருக்கும் முக்கியப் பங்குண்டு.
2001ஆம் ஆண்டு போட்டி பற்றி உங்கள் கருத்து…
அந்த போட்டி எனது வாழ்க்கையை மாற்றியது. இந்திய அணியாக எங்களால் யாரையும் எதிர்த்து போட்டியிட்டு வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.
உலகில் சிறந்த அணிக்கு எதிராக போட்டியிட்டீர்கள் என்று கூறலாமா?
என்னைப் பொறுத்தவரை அனைத்து விளையாட்டுப் போட்டிகளுமே நாம் பிழைத்திருக்க வேண்டும் என்று நினைத்து விளையாடுவதுதான். நான் அப்போதுதான் இந்திய அணிக்கும் மீண்டும் திரும்பினேன். அதற்கு முன்னர் ஏராளமான சம்பவங்கள் எனது வாழ்க்கையில் நடந்து விட்டன. எனது தந்தை திடீரென காலமானார். தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். மிகவும் கடுமையான காலமாக இருந்தது. எனது வாழ்க்கையில் நான் ஏதாவது செய்யவேண்டுமென நினைத்திருந்த காலம் அது.
ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை கொண்டிருந்தது அப்படித்தானே?
அவர்கள் ஒருநாள் போட்டி போல விளையாடி வந்தனர். இந்த போட்டிக்கு முன்னதாக ஹெய்டன் சதம் அடித்திருந்தார். அவர் ஸ்வீப் ஷாட்டுகளை அநாயசமாக கையாண்டு வந்தார். அவரை எப்படி கையாள்வது என்று அனைத்து பந்துவீச்சாளருக்கும் மனதில் சிக்கலான கேள்வி தோன்றும். நன்றாக விளையாடி வந்தவர் பௌண்ட்ரி எல்லையோரம் கேட்ச் செய்யப்பட்டார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு மார்க் வாக் அவுட்டானர். அதன்பிறகு ஆட்டம் இந்தியாவின் கைக்கு வந்துவிட்டது. அன்று ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது முக்கியமான அம்சம்.
மூன்று விக்கெட்டுகளை எடுத்த சம்பவத்தைச் சொல்லுங்கள்.
நான் சிம்பிளான திட்டம் ஒன்றைத்தான் வைத்திருந்தேன். நான் அதிக ரன்களைக் கொடுத்துவிடக்கூடாது என்பதுதான் அது. ஸ்டம்புகளுக்கு சரியான பந்துகளை வீசவேண்டும் என்று நினைத்தேன். இப்படித்தான் ரிக்கி பாண்டிங் விக்கெட் கிடைத்தது. அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். நான் பந்து வீசும் முறையில் ஆடம் கில்கிறிஸ்ட் ஸ்வீப் ஷாட்டை ஆடுவார் என ஊகித்திருந்தேன். எனவே அவர் பேட்டிற்கு முன்னதாகவே பேடில் படும்படி பந்தை வீசினேன். நான் நினைத்தபடியே ஆனது.
ஷேன் வார்னே அவுட்டான பந்தும் முழுநீளமானது. நான் வீசி பந்தை பெரும்பாலும் பேடுகளால் தடுப்பார்கள். அப்படி தடுத்தால் எல்பிடபிள்யூ செய்ய முயன்றிருப்பேன். நான் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் என்பது எனக்கானது அல்ல. இந்திய அணியின் ஹாட்ரிக் என்று கூறலாம். ரமேஷ்தான் எனது பந்துவீச்சில் கேட்சை பிடித்தார் ராகுல் டிராவிட் அவரைக் கட்டிப்பிடித்து பாராட்டினார். உண்மையில் அந்த கேட்ச் அவருக்கு ஹாட்ரிக் என்பதை ராகுல் அறிந்திருந்தார்.
ஸ்டீவ் வாக் ஜேசன் கில்லஸ்பி கூட திரும்ப போராடி ஸ்கோர் செய்தார்கள் அல்லவா?
இந்திய அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட்டது. கிளென் மெக்ராத்தின் பௌலிங்கில் அவர்கள் சிறந்த ரன்களையும் எடுத்திருந்தார்கள். அதாவது 445 ரன்கள். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் ராகுலும், லக்ஷ்மணனும் சிறந்த பார்ட்னர்ஷிப் போட்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அது உண்மையில் மேஜிக்தான்.
நீங்கள் அந்த மேட்சில் வென்ற வெற்றியை நினைவுபடுத்தும் பொருட்களை வைத்திருக்கிறீர்களா?
உடைகள், பந்து, ஸ்டம்புகள் ஆகியவற்றை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
இந்துஸ்தான் டைம்ஸ்
சஞ்சீவ் கே சம்யால்
கருத்துகள்
கருத்துரையிடுக