தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவுக்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா?

 

 

 

 

European Medicines Agency Still Reviewing AstraZeneca ...

 

 

தடுப்பூசியால் ரத்தம் கட்டினால் என்ன அறிகுறிகள் ஏற்படும்?


1.கடுமையான தலைவலி ஏற்படும். இதற்கு நீங்கள் வலிநிவாரணி பயன்படுத்தினால் கூட கட்டுப்படுத்த முடியாது.

2. தூங்கும்போதும், உட்கார்ந்திருக்கும் தலைவலியின் கடுமையை பொறுத்துக்கொள்வது கடுமையாக இருக்கும்.

3. இதுமட்டுமல்ல. தலை கிறுகிறுப்பு, குமட்டல், பேசுவதில் தடுமாற்றம், பார்வை மங்கலாவது ஆகியவை உபரி விளைவாக ஏற்படும்.


4. நெஞ்சு வலி, மூச்சு விடுவது குறைவாகும். அடிவயிற்றில் வலி தோன்றும், கால்கள் நடக்கமுடியாமல் தடுமாறும்.


இப்போது என்ன செய்வது?


கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு பக்க விளைவுகள் மேற்சொன்னது போல தோன்றினால் சொன்ன நேரத்தில் அடுத்த தடுப்பூசியையும் போடவேண்டும். நான்கு நாட்கள் முதல் நான்கு வாரம் அதாவது ஒருமாதம் வரை அறிகுறிகள் நீடித்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்கவேண்டும்.


பெண்களுக்கு ரத்தம் கட்டுதல் பிரச்னை ஏற்படுவது உண்மைதான். ்ஆஸ்ட்ராஸென்கா வகை ஊசியைப் போட்ட ஏராளமான பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இங்கிலாந்தில் ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்களில் 41 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டு விட்டனர். கருத்தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களில் ஆயிரம் பேரில் ஒரு பெண்ணுக்கு ரத்த உறைதல் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஐரோப்பிய மெடிக்கல் ஏஜென்சி, தடுப்பூசியால் மக்களில் சில நூறு பேருக்கு ரத்த உறைதல் பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் டென்மார்க் நாட்டில் தடுப்பூசியை முழுமையாக தடை செய்துவிட்டார்கள் பிற நாடுகளில் சில வயது வரம்புகள் விதித்து அவர்களுக்கு மட்டுமே அதனை செலுத்துகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி ரத்த உறைகள் இருக்கலாம் என்ற வாய்ப்பை கூறியுள்ளது. இந்த முடிவு இன்னும் அறிவியல்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை. மேற்கு நாடுகளில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி என்பதை இங்கிலாந்து மட்டுமே நடைமுறைப்படுத்தியுள்ளது. பிற நாடுகள் அனைத்தே ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஆஸ்ட்ராஸென்கா தடுப்பூசியை வழங்குகிறது.


தடுப்பூசியால் ரத்த உறைதல் ஏற்படவில்லை. நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்தால் கூட இந்த பாதிப்பு ஏற்படும். உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அதன் காரணமாக ரத்த உறைதல் ஏற்படுகிறது. இதனை விஐடிடி 9வேக்சின் இன்டியூஸ்டு இம்யூன் தெரம்போடிக் த்ரோம்பாய்சைடோபெனியா? என்று குறிப்பிடுகின்றனர். இந்த ரத்த உறைதல் உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் மூளையில் ஏற்பட்டால் மிக ஆபத்தானது என்கிறார்கள். இதனை சிவிடி என்று அழைக்கின்றனர். செரிபிரல் வெனோஸ் த்ரோம்போசிஸ் என இதைக் கூறலாம்.


டைம்ஸ் ஆப் இந்தியா

அபிலாஸ் கௌர்









கருத்துகள்