விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி பயன்படும் துறைகள் என்னென்ன?

 

 

 

 Spherical 360 Degree Photo, Office, Desk, Company, 360

 

 

தோற்ற மெய்ம்மை


இத்தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் தலையணியில் கணினி மூலம் உருவாக்கப்பட்ட சூழல்களை பயனர் பார்க்கலாம். விர்ச்சுவல் ரியாலிட்டி எனும் இம்முறையில் படங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். ஒளியும் ஒலியும் உங்களை வேறு உலகிற்கு அழைத்துச்செல்லும்.


மிகை மெய்ம்மை


ஆக்மெண்டட் ரியாலிட்டி எனும் இம்முறையில் சாலையில் பார்க்கும் ஒரு மனிதருடன் கார்ட்டூன் பாத்திரம் ஒன்று உலாவினால் எப்படி இருக்கும்.? இந்த கான்செப்டில் இதில் வீடியோக்களைப் பார்க்கலாம். விளையாட்டுகளை விளையா

டலாம்.


கலப்பு மெய்ம்மை


இதில் மேற்சொன்ன இரண்டு சமாச்சாரங்களும் இரண்டற கலந்திருக்கும். உண்மையான பொருட்களும், விர்ச்சுவல் ரியாலிட்டி அம்சங்களும் இரண்டற இருக்கும். பொருட்களை உண்மையாகவே தொட்டாலும் அது டிஜிட்டல் வடிவில் வேறு மாதிரி தெரியும்.


சமூக வலைத்தளம்


தோற்ற மெய்ம்மையை சமூக வலைத்தளங்களிங்களில் பயன்படுத்த முடியும். இதற்காகவே ஃபேஸ்புக் நிறுவனம், ஸ்பேசஸ் என்ற வசதியைத் தொடங்கியுள்ளது. இதில் தலையணியை அணிந்துகொண்டு நண்பர்களுடன் தனியாக சாட் வசதிகளை அணுகி பயன்படுத்த முடியும். இதில் அடுத்து டூர் செல்லவிருக்கும் இடத்தையும், உங்கள் புது வீட்டையும் கூட சுற்றிக் காட்ட முடியும். நீங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லுவதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ரஹ்மான் கான்செர்ட் அல்லது ஐபிஎல் போட்டி என வைத்துக்கொள்ளுங்கள். அதனை விர்ச்சுவல் முறையில் பார்க்க முடியும்.


பயன்கள்


தொலைவிலுள்ள நண்பர்களை எளிதாக சந்திக்கலாம்.


பல்வேறு விழாக்களை விர்ச்சுவல் முறையில் அமைக்கலாம். பங்கு கொள்ளலாம்.


சமூக ரீதியான பதற்றநிலையை மாற்ற முடியும். அதற்கு ஃபேஸ்புக்கின் தொழில்நுட்பம் உதவும்.


கல்வி


தோற்ற மெய்ம்மை என்பது, கல்வியில் பயன்படுத்தமுடியும். மூளை பற்றியோ, இயற்பியல் விதிகளைப் பற்றியோ விர்ச்சுவல் ரியாலிட்டி வடிவில் பார்க்க முடிந்தால் மாணவர்களுக்கு எளிதாக புரியுமே? அதேதான் கான்செப்ட். இதனை மலிவான விலையில் வாங்கிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அணிந்து கவனிக்க முடியும். எதையும் கண்முன்னே உயிர்ப்புடன் பார்த்து பாடங்களை படித்தால் நூலில் படிப்பதை விட நன்றாக இருக்குமே?


தொழில்துறை


கட்டுமானங்கள், பொருட்களை விற்பது, குடோன்கள் ஆகிய இடங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி முறை பயன்படும். வாகனங்களை வாங்குவதற்கு விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் அதனை ஓட்டிக்கூட பார்க்கலாம். எனவே வாகனங்களை ஓட்டிப்பார்க்கும் அனுபவம் சிறப்பாக கிடைக்கும். நாசா, தனது பயிற்சியாளர்கள் விண்கலத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் பயிற்றுவிக்கிறது. பயணத்தைப் பொறுத்தவரை பல்வேறு இடங்களை இப்போதே நாளிதழ் நிறுவனங்கள் 360 கோணத்தில் பார்க்கும் வசதியை வழங்குகின்றன. தொலைதூரத்தில் உள்ள நகரங்களைக் கூட ஹெட்செட் மூலமாக மிகவும் துல்லியமாக பார்க்க முடியும்.


பொழுதுபோக்கு துறை


விஆர், ஏஆர் சமாச்சாரங்கள் அதிக பயனை வழங்கும் துறை பொழுதுபோக்குதான். இதில் பல்வேறு விழாக்களை, நிகழ்ச்சிகளை, சினிமாக்களை இருந்த இடத்திலேயே சாகச அனுபவமாக பார்க்க முடியும். இதில் செலவும் குறைவு. புதிய அனுபவமாகவும் இருக்கும் . விளையாட்டுகள் இப்போது விஆர், ஏஆர் முறையில் உருவாக்கப்படத் தொடங்கிவிட்டன.



மருத்துவத்துறை


நேரடியாக நோயாளிகளை ஆபரேஷன் செய்து கற்றுக்கொள்ளும் மருத்துவர்களை விஆர் முறையில் தடுக்கலாம். இதில் செய்யவேண்டிய அறுவை சிகிச்சைகளை விஆர் முறையில் செய்து பார்த்து பயிற்சி எடுக்கலா்ம். ஆனால் அதேநேரத்தில் இதுவே நிஜத்தில் நடைபெறும் அறுவை சிகிச்சைக்கு உதவும் என்று கூறமுடியாது. ஆனால் எதுவுமே தெரியாமல் இருப்பதற்கு கொஞ்சம் பயிற்சி எடுத்து அறுவை சிகிச்சை செய்வது சிறப்புதானே?


மனநல பிரச்னைகளுக்கு விஆர் முறையில் பல்வேறு தீர்வுகள் உள்ளன. போர், குடும்ப வன்முறை ஆகியவற்றில் மனம் பீதியடைந்தவர்களை அதிலிருந்து மீட்க இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.


நன்றி


கணியம்.காம்


எழுத்தாளர் அசோகன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்