எல்இடி பல்பை கண்டுபிடித்த ஜப்பானிய இயற்பியலாளர் இசாமு அகாசகி!
இசாமு அகாசகி |
இசாமு அகாசகி
1929-2021
2014ஆம் ஆண்டு அகாசகி மேலும் இரண்டு அறிவியலாளர்களோடு சேர்ந்து நோபல் பரிசு வென்றார். அகாசகி, ஹிரோஷி அமானோ, சுஜி நகமுரா ஆகியோரோடு சேர்ந்து அகாசகி நோபல் விருது வென்றார். இதைப்பற்றி அகாடமி, பிறர் தோற்றுப்போன அறிவியல் விஷயங்களில் இம்மூவரும் வெற்றி கண்டனர்.
தொண்ணூறுகளில் இம்மூவரும் நீலநிற ஒளி உமிழும் டயோடு ஒன்றைக் கண்டுபிடித்தனர்.இதனை புரட்சிகர மாற்றம் என்று கூறினர். முப்பது ஆண்டுகளாக மூவரும் நீல நிற ஒளியை ஒளிரும் செமி கண்டக்டர்களை உருவாக்கினர்.
அகாசகி என்ற இயற்பியலாளர் 92 வயதில் மறைந்துள்ளார். இவர்தான் மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்யும் எல்இடி முறையைக் கண்டுபிடித்தார்.
எல்இடி பல்புகள் ஒரு லட்சம் மணிநேரம் ஆயுளைக் கொண்டவை. இதில் ப்ளூரசென்ட் பல்புகள் 10 ஆயிரம் மணி நேரங்களைக் கொண்டவை. குண்டுபல்புகள் ஆயிரம் மணிநேரம் மட்டுமே தாக்கு்ப்பிடிக்கும்.
எல்இடி பல்புகள் பிற பல்புகளை விட நான்கு மடங்கும். குண்டுபல்புகளை விட 20 மடங்கும் எரிபொருள் சிக்கனம் கொண்டவை.
2010ஆம் ஆண்டு மேஜோ பல்கலைக்கழகம் வெளியிட்ட நேர்காணல் ஒன்றில் தனது கண்டுபிடிப்பு பற்றி பேசினார் அகாசகி. பிறகுதான் உலகமே இவரை உற்றுநோக்கத் தொடங்கியது.
நாம் எப்போதும் அப்போதைக்கு பலரும் ஆர்வம் காட்டும் விஷயங்களை ஆராய்ச்சி செய்யவேண்டும் என்பதில்லை. உங்களுக்கு எது தேவை என்பதை விட எது பிடித்திருக்கிறதோ அதில் கவனம் செலுத்துங்கள். நான் தேர்ந்தெடுத்த ஆராய்ச்சி என்பது, பிறர் கைவிட்டாலும் நான் கைவிட விரும்பவில்லை. அதில் எப்போதும் உறுதியாக இருந்தேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக