மம்தாவை எங்கள் கட்சியினர் கொச்சைபடுத்தி பேசவில்லை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

 

 

 

 

Meet Pencilashan: Kerala cartoonist behind Amit Shah's ...

 



அமித்ஷா

உள்துறை அமைச்சர்


விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்களை மத்திய அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே?


சீக்கியர்களுக்கு என்று தனிச்சட்டம் கிடையாது. நாடு முழுக்க உள்ள விவசாயிகளுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாதா என்ன? அவர்கள் வெவ்வேறு பெயர்களில் போராட்டங்களை நடத்தட்டும். உண்மை என்னவென்றால், நாட்டின் சட்டம் இப்படித்தான் உள்ளது.


இது அந்த மாநிலத்தில் கட்சியை பாதிக்காதா?


அங்கு கட்சிக்கு சில சவால்கள் உள்ளன என்பது உண்மைதான். அதை சரி செய்ய நாங்கள் உழைத்து வருகிறோம். விவசாய சட்டங்கள் மக்களுக்கு உதவக்கூடியவை என்று கூறுவதற்கு முயன்று வருகிறோம்.. விரைவில் மக்களே அதனை உணர்ந்துகொள்வார்கள்.


விவசாயிகளுக்கு ஆதரவாக ஷிரோன்மணி அகாலிதளம் உங்கள் கூட்டணியை விட்டு பிரிந்துபோய்விட்டது. அவர்களுடன் பேசினீர்களா?


நாங்கள் அக்கட்சி தலைவர் பர்காஷ் சிங் பாதலுடன் பேசினோம். ஆனாலும் அவர் கூட்டணியை விட்டு விலகிவிட்டார். என்ன செய்வது? நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேசி வருகிறோம்

 

 

Amit Shah's 'doubt' over multi-party system and CBI ...

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் அங்கு காசி மதுரா பிரச்னையை நீதிமன்றத்தில் எழுப்பியுள்ளனர். இந்து கோவில் என்பது தேர்தலில் முக்கியமான விவகாரமாக மாறுமா?


யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் பிரச்னை தொடர்பாக முறையிட்டுள்ளார். இந்த விவகாரம் நீதிமன்ற உத்தரவுப்படி செல்லும். இதில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டால் எங்கள் பார்வையை நாங்கள் தெரிவிப்போம்.


முதல் அலையின்போது பிரதமர் ஏராளமான திட்டங்களை அறிவித்தார். ஆனால் இப்போது அமைதியாக இருக்கிறார். ஏன்?


அது உண்மையல்ல. முதல் அமைச்சர்களுடன் இரண்டு சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. அதில் நானும் கூட பங்கேற்றுள்ளேன். அறிவியலாளர்கள், மருத்துவர்கள், ஆளுநர்களுடன் கூட சந்திப்பு நடைபெற்றது. போராடுவதற்கான முழு ஆயத்தங்களை செய்துள்ளோம். நோய்ப்பரவல் இம்முறை சற்று வேகமாக உள்ளது என்பதால் அதனை எதிர்கொள்வதில் தடுமாற்றம் உள்ளது.. ஆனால் நாங்கள் இம்முறையும் வெற்றி பெறுவோம்.


உங்களது பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், மக்கள் மாஸ்க் அணியாமல் பங்கேற்றுள்ளனரே?


ஜனநாயகத்திற்கு தேர்தல் முக்கியமானது. தேர்தல் அறிவிக்கப்பட்டபின் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மக்களுக்கு கூறுவது கடினமானதாக மாறிவிட்டது. . மக்கள் தங்கள் பொறுப்பில்தான் மாஸ்க் அணிவதைத் செய்யவேண்டும். எங்களுக்கு வேறு வழியில்லை.


மேற்கு வங்கத்தில் தனிநபர் தாக்குதலாக மம்தாவைப் பற்றி விமர்சித்து வருகின்றனர். மம்தாவின் சேலை ஒரு காலை மறைக்கிறது. மற்றொரு காலை மறைக்கவில்லை. எனவே அவர் பெர்முடாஸ் அணியவேண்டும் என பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளாரே?


நாங்கள் மட்டுமல்ல எதிர்த்தரப்பும் கூட இப்படி விமர்சனம் செய்துள்ளனர். நீங்கள் கூறியுள்ளபடி எந்த விமர்சனமும் எழவில்லை. சிலர் இதனை துரியோதனன், துச்சதாதனன் என்று கூட கூறிவருகின்றனர். நீங்கள் கூறியபடி யாரும் கூறவில்லை.


நீங்கள் உங்கள் அந்த தலைவரை கண்டித்தீர்களா?


நிச்சயமாக இனிமேல் மம்தா பற்றி அப்படி பேசக்கூடாது என்று கூறியுள்ளேன்.



மேற்கு வங்கத்தில் பாஜக சாதி அரசியலைக் கொண்டுவருவதாக கூறப்படுகிறதே?


தேர்தல் முடிவுகள் வரும்போது மம்தா அனைவராலும் தோற்கடிக்கப்பட்டிருப்பது தெரிய வரும். ஒரு சாதி மட்டுமல்ல ஒட்டுமொத்த வங்காளமும் அவரைத் தோற்கடிக்கப் போகிறது. அவர் சாதி, பாலினம் ஆகியவற்றை மதிக்காத்தே இதற்கு காரணம்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


லிஸ் மேத்யூ



கருத்துகள்