நம்பிக்கை அளிக்கும் பெண்கள்! - நவோமி ஒசாகா, ஷானி தண்டா, என்கோஸி ஐவியலா, ஆரோரா ஜேம்ஸ், கிரண் மஜூம்தார்
ஷானி தண்டா
மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர்
உறுப்புகளின் செயல்திறன் குறைபாட்டை நான் குறைபாடாக பார்க்கவில்லை. இப்படி இருப்பதும் கூட என்னை அப்படி நினைக்கச் செய்வதில்லை. ஆனால் என்னை வேறுபடுத்தி பார்ப்பவர்களால்தான் அப்படி ஒரு நினைவு எனக்கும் உருவாகிறது என்று வோக் பத்திரிக்கைகைக்கு பேட்டி கொடுத்தார் ஷானி.
பிறக்கும்போதே பிரிட்டல் போன் டிசீஸ் என்ற எலும்பு சார்ந்த மரபணு நோய் இவரை பாதித்தது. இதனால் இவர் பதினான்கு வயதில் இவரது கால் எலும்பு ஆறு முறை முறிந்திருக்கிறது. ஆனால் இவரது அம்மா இவரை பாகுபடுத்தி பார்க்காமல் உதவிகளை செய்துகொடுத்து வளர்த்தியிருக்கிறார். பிறரிடம் உதவி கேட்பதை விட தனக்குத்தானே என்ன செய்யமுடியுமோ அதனை செய்துகொள்ள பழகுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார் ஷானி.
ஆசியன் டிஸேபிளிட்டி நெட்வொர் அமைப்பைத் தொடங்கியவர், வர்ஜின் மீடியாவில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். ஆசியன் வுமன் ஃபெஸ்டிவல் ஆகிய விழாவை ஒருங்கிணைத்து வருகிறார். இதன் காரணமாக இவரது பெயர், பிபிசிஇன் 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு பணிகளை புதுமையான வழிகளில் செய்ய யோசித்து வருகிறார்.
முக்கியமான சாதனை
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு டிஸேபிளிட்டி கார்டு எனும் திட்டத்தை உருவாக்கினார். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் தள்ளுபடி விலைக்கு பொருட்களை வாங்க முடியும். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதிசார்ந்த அழுத்தம் குறையும். அவர்களின் குடும்பங்களும் சற்று நிம்மதியாக இருக்க முடியும்.
ஆரோரா ஜேம்ஸ்
இயக்குநர், பிரதர் வேலிஸ், 15 பர்சென்ட் பிளெட்ஜ்
ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, கென்யா மொராக்கோ ஆகிய இடங்களிலுள்ள மரபான கைவினைக் கலைஞர்களைப் பயன்படுத்தி பேஷன் பொருட்களை தயாரித்து வருகிறார் ஆரோரா ஜேம்ஸ். அவரைப்பற்றி இங்கு எழுதுவதற்கு மற்றொரு முக்கியமான காரணம், அவர் கருப்பின மக்களின் உழைப்பில் உருவாக்கப்படு்ம பொருட்களுக்கு சூப்பர் மார்க்கெட்டுகள் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என நினைத்தார். இதற்காக 15 பர்சென்ட் என்ற திட்டத்தை உருவாக்கினார். அதாவது, சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பொருட்கள் விற்கும் இடத்தில் 15 சதவீத இடத்தை அவர்கள் கருப்பின மக்களின் பொருட்களுக்கு கொடுக்கவேண்டும். அமெரிக்காவில் கருப்பின மக்களின் சதவீதம் 15 என்பதை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம் இது.
பேஷன் துறையில் இதுபோன்ற முயற்சிகள் நிறைய நடக்கவேண்டும் என்றார் ஆரோரா
முக்கியமான சாதனை
அமெரிக்காவில் உள்ள மேசி என்ற பெரும் சங்கிலித்தொடர் கடையின் ஆண்டு வருமானம் 24.4 பில்லியன். இந்த நிறுவனம் ஆரோராவுடன் 15 பர்சென்ட் பிளெட்ஜ் என்ற திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் விரைவில் இத்திட்டத்தில் இணையும் என்று கூறப்பட்டிருக்கிறது.
விளையாட்டில் கலக்கும் சமூக செயல்பாட்டாளர்!
நவோமி ஓசாகா
டென்னிஸ் உலக சாம்பியன்
இப்படி சொல்லும்போது வினோதமாக தோன்றலாம். ஆனால் அப்படித்தான் நவோமியை சொல்ல வேண்டியதிருக்கிறது. 2018ஆம் ஆண்டு பெண்கள் டென்னிஸ் போட்டியின் இறுதியில் செரினா வில்லியம்சை வீழ்த்திய ஜப்பானிய பெண் வீர ர்
நவோமி. வென்றவுடன் எதுவும் தோன்றாமல் மௌனமாக அழுதார். தனது ரோல்மாடலை எதிர்கொண்டு வென்றுவிட்ட பெரிய பெருமிதமில்லாத வீர ர்தான் அவர். ஆனால் இன்று மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலகையே கவனிக்க வைத்துள்ளார். அமெரிக்காவில் வளர்ந்தவர் என்றாலும் ஜப்பான்தான் பூர்வீகம்.
கடந்த ஆண்டு ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்டட் இதழில் சிறந்த விளையாட்டு வீர ர் என பட்டம் வென்றிருந்தார். இதற்கு காரணம், இனவெறி காரணமாக அமெரிக்காவில் பலியான ஆப்பிரிக்க அமெரிக்க போராளிகளை தனது விளையாட்டுக் களத்தில் முன்னிலைப்படுத்திய துணிச்சல் மனம் நவோமியுடையது.
அமெரிக்க ஓப்பன் போட்டிகளில் நவோமி ஏழுவித மாஸ்க்குகளை பயன்படுத்தினார். அதில் அங்கு இனவெறி காரணமாக பலியான ஆப்பிரிக்க அமெரிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. காவல்துறையில் கொடூரமான அணுகுமுறைக்கு பலியான எளிய மனிதர்களை கவனப்படுத்திய நவோமி தனது அரசியலையும் விளையாட்டுக் களத்தில் பகிரங்கப்படுத்தியது பலராலும் பாராட்டப்பட்டது.
கடந்த ஆண்டில் விளையாட்டு உலக வரலாற்றில் அதிகம் சம்பாதித்த வீர ர் இவர்தான். 37.4 மில்லியன் டாலர்களை ஓராண்டில் சம்பாதித்து டாப்பில் உள்ள வீர ர் இவர் மட்டுமே.
புரட்சிகர ஜனநாயகவாதி!
அலெக்ஸாண்ட்ரா ஒக்காஸியோ கார்டெஸ்
நியூயார்க் பிரதிநிதி 2018 முதல்
குடியரசு கட்சிகளுக்கு சபையில் எப்போதும் அலர்ஜி ஏற்படுத்தும்படி உண்மையை நேரடியாக பேசுவது ஏஓசியின் ஸ்டைல். அவரது பெயரைத்தான் இப்படி கூறுகிறோம். இது ஒரு சைக்கிள் சுழற்சி போல. ஜனநாயக கட்சியில் முதலில் பெலோசி, பின்னர் ஹிலாரி இப்போது நான் என வந்துள்ளேன். இது ஒன்றும் விபத்தல்ல என்று வேனிட்டி ஃபேர் இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
இவரை வெறும் ட்விட்டுகளை போடுபவர் என்று கூறினாலும் நிறம் சார்ந்து அவமதித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு சரி என்று தோன்றும் கருத்துகளை உரத்து பேசுபவர் ஏஓசி. காங்கிரஸ் அவையில் தான் உருவாக்கிய பல்வேறு திட்டங்களை பற்றி தைரியமாக கூறுவதிலும் கேள்வி நேரத்தில் ஏராளமான கேள்விகளை கேட்டு குடியரசு வாதிகளை பதறச்செய்வதிலும் கைதேர்ந்த பெண்மணி இவர்தான்.
2030க்குள் அமெரிக்காவில் இலவச கல்வி, இலவச மருத்துவம், பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது என திட்டமிட்டு தனது வேலைகளை செய்துவருகிறார். அவர் செய்யும் பல்வேறு செயல்பாடுகள் அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டாலும் கேலி பேசப்பட்டாலும் அவர் தனக்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை அவரது சமூக வலைத்தள பக்கங்களைப் பார்த்தாலே தெரியும்.
முக்கியமான சாதனை
கிளைமேட் யுனிட்டி டாஸ்க் போர்ஸ் என்ற திட்டத்தை தொடங்கி செயல்பட்டு வருகிறார். இணையத்தில் இதுதொடர்பாக பல்வேறு விதமாக செயல்பாடுகளை முன்னெடுத்து அதிபர் பைடன் கவனத்தை ஈர்த்து இதுதொடர்பான கொள்கைகளை வகுக்க முயன்று வருகிறார். புதுப்பிக்கும் ஆற்றல் துறைக்கு அதிக நிதியுதவி அளிக்கவும் செயல்பட்டு வருகிறார்.
மக்களுக்கான தலைவர்!
என்கோஸி ஓகோஞ்சோ ஐவியலா
பொருளாதார வல்லுநர்.
பெண்கள் மீதும், சிறுமிகளின் மீதும் முதலீடு பெருக வேண்டும். அதுதான் ஸ்மார்ட்டாக பொருளாதாரம் என்று பேசும் துணிச்சல், தைரியமும் யாருக்கு வரும்? அதுதான் இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் நிறுவனத்தின் தலைவராக ஐவியலாவை மாற்றியுள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் பொருளாதாரம் படித்தவர். மிக தொல்லை தரும் பெண் என்று பெயர் பெற்றவர். நைஜீரியாவில் இரண்டு முறை நிதியமைச்சராக பணியாற்றி வல்லரசு நாடுகளுக்கு தரவேண்டிய 15 பில்லியன் தொகையை தள்ளுபடி செய்ய வைத்தவர். ஊழலை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தவர். உலக நிதியகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், தற்போது அதன் தலைவர் ஆகியுள்ளார். முன்னரே இந்த பதவியைப் பெற்றிருக்க வேண்டியவர்தான். ஆனால் முன்னாள் அதிபர் ட்ரம்ப் இவரது தலைவர் பதவி வாய்ப்பை தடுத்து வைத்திருந்தார். இப்போது நிலை மாறியுள்ளதால் தலைவராகியுள்ளார். உலக வங்கியில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளவர் தடுப்பூசிகளுக்கான கூட்டமைப்பு கவியிலும் பணியாற்றியுள்ளார்.
இண்டர்நேஷனல் மானிட்டர் ஃபண்ட் நிறுவனத்தில் முதல் பெண் தலைவர், ஆப்பிரிக்கர் இவரே.
முக்கியமான சாதனை
நைஜீரியாவின் நிதி அமைச்சராக இருந்தபோது, பாரிஸ் கிளப் கிரட்டிடார்ஸ் அமைப்பிடம் நாடு பெற்றிருந்த கடன்தொகை 30 பில்லியனை பேசியே சரிகட்டினார். பின்னர் அமெரிக்காவிடம் பெற்றிருந்த 18 பில்லியன் டாலர்களையும் விலக்கிக்கொள்ளும்படி செய்த சாதனைப் பெண்மணி.
சுயமே திருவாய்....
கிரண் மஜூம்தார் ஷா
பயோகான் தலைவர், செயல்தலைவர்(1978 முதல்)
பெண்கள் நிறுவனத்தைத் தொடங்கி முன்னேறுவது பிற நாடுகளில் எப்படியோ இந்தியாவில் கடினமானது. தற்போது தான் அந்த நிலை மாறத்தொடங்கியுள்ளது. அப்படி சாதனை செய்து வெற்றிபெற்றவர்தான் கிரண். இவர் பீர் தயாரிப்பில் வெற்றிபெற்றவர், பின்னாளில் பயோகான் எனும் விலை குறைந்த மருந்து, சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை பெற்று வென்றுள்ளார். 2019இல் இவரது நிறுவனம் 800 மில்லியன் டாலர்கள் வருமானத்தை அடைந்துள்ளது.
1978இல் பயோகான் நிறுவனத்தை தொடங்கினார் கிரண். இவரது தந்தை சிறந்த பீர் தயாரிப்பாளர். உயிரியல் தொழில்நுட்பத்தை தனது தொழிலாக கிரண் தேர்ந்தெடுத்தது இன்று அவரை டாப் தொழிலதிபராக உயர்த்தியுள்ளது. ஆசியாவில் இன்சுலின் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது பயோகான் நிறுவனம்தான். இருநூறு கோடி டோஸ்களுக்கும் அதிகமான இன்சுலின் மருந்தை நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது இந்த நிறுவனம். தனது சொத்துக்களில் 75 சதவீதத்தை சமூக பிரச்னைகளுக்கு கொடுக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். போர்ப்ஸ் இதழில் ஆற்றல் வாய்ந்த நூறு பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்தார்.
முக்கியமான சாதனை
2014ஆம் ஆண்டு பயோகான் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு முதல் நாளில் 1 ட்ரில்லியன் அளவுக்கு பங்கு விலையைப் பெற்று சாதனை செய்தது..
Bloomberk
கருத்துகள்
கருத்துரையிடுக