புதிய பழக்கங்களை எப்படி கற்றுக்கொள்வது? - மூளையில் பழக்கவழக்கங்களை எப்படி பதிய வைக்கலாம்

https://static-thechristianpost.netdna-ssl.com/files/original/thumbnail/12/59/125901.jpg

 

 

 

 

 

 

இலக்கு நோக்கிய பயணம்


வாழ்வதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வியை தனது வாழ்நாளில் ஒருவர் சந்திக்கவேண்டும். அப்படி சந்திக்காதபோது பிறரின் மீதான அக்கறை ஒருவருக்கு குறைந்துபோய்விடும் என டாக்டர் ரொமான்டிக் தொடரில் டீச்சர் கிம் கூறுவார். குறிப்பிட்ட நோக்கம் இல்லாத வாழ்க்கை என்பது சலிப்பான மோசமான விஷயங்களுக்குத்தான் அழைத்துச்செல்லும். முயல் தனது கேரட்டை எடுக்க வழிகாட்டிய புதிர் பலருக்கும் நினைவிருக்கும். இதுபோல நோக்கங்களை மையமாக வைத்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் . நோக்கங்களை தேடுவதை பயிற்சியாக கொண்டால் அதனை அடையும் வழி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பாதை நினைவிருக்கும் என்பதால் முயல் போலவே நமது மூளையும் எளிதாக அதனை அடைந்துவிட முடியும்.


தூண்டுதல்


பற்பசை விளம்பரத்தை பார்த்துவிட்டு தூண்டுதலில்தான் ஹைப்பர் மார்க்கெட்டை வேட்டையாட கிளம்புகிறோம். சுத்தமான பற்கள், நம்பிக்கை அளிக்கும் என ஸ்லோகனை பயன்படுத்துகிறார்கள். இதுபோல தூண்டுதல்தான் பழக்கத்தை தொடங்க உதவும். உடற்பயிற்சி, நல்லுணவு, தூயஆடை, ஆளுமை மாற்றங்கள் ஆகியவையும் பிறரைப் பார்த்து காப்பியடிப்பது என்றாலும் அதனை ஸ்டைலாக இன்ஸ்பையர் என்று கூறிக்கொள்ளலாம் இதுவும் தூண்டுதல்தான்.


பரிசு


மூளையைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை செய்தால் அதற்கு ஒரு காரணம் கூறவேண்டும். எந்த காரணமும் இல்லாமல் ஒரு பழக்கத்தை பின்பற்றுவது கடினம். மூளை அதனை புறக்கணித்துவிட அதிக வாய்ப்புண்டு. மகிழ்ச்சியான விஷயத்தை செய்தால் மூளையில் டோபமைன் சுரக்கிறது.. ஒரு விஷயத்தை செய்து முடித்தால் அதற்கு பரிசு இது என முடிவு செய்து செய்வது எளிது. அந்த நேரம் வரை எளிதாக உற்சாகமாக வேலை செய்யலாம். கூலி வேலை செய்பவனுக்கு அவன் வியர்வை உலர்வதற்கு முன்னர் ஊதியத்தை கொடுத்துவிடவேண்டும் என்று புனித கிரந்தத்தில் கூறப்படுகிறதே அதைப்போலத்தான்.


திரும்ப செய்தல்


பரிசு கொடுத்து பழக்கத்தை வளர்ப்பது என்பது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேலைக்கு ஆகாது. எனவே மனதளவில் பயிற்சி செய்து நீண்டகால நோக்கத்திற்காக ஒரே விஷயத்தை திரும்பச் செய்வதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி செய்வது குறிப்பிட்ட பழக்கத்தை நீண்ட நாள் தொடர்வதற்கு உதவும்.


மூளை நாம் சிக்கலான விஷயங்களை பழக்கமாக்கிக் கொள்ளுவதை செய்கிறது. இதனை சங்கிங் என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட பழக்கத்தை தினசரி விழிப்புணர்வு இன்றி செய்வது முக்கியம். அப்போதுதான் அது நமக்கு பழக்கமாகிவிட்டது என்று அர்த்தம். இதற்கு தொடங்குவது, முடிப்பது தொடர்பான சிக்னல்கள் மூளையில் உருவாகின்றன. ஒரு பழக்கத்தை தொடங்கி முடித்தபிறகு அடுத்ததை தொடங்குவது என்ற வரிசை மாறாது நடக்கிறது. ஒரு பழக்கத்தை திட்டமிடுவது, செய்வது பற்றிய முடிவை எடுப்பது, அதன் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை மூளையிலுள்ள குழு செல்கள் செய்கின்றன. இதனை ஸ்ட்ராடம் என்கின்றனர்.



https://uber-facts.com/wp-content/uploads/2020/04/BeFunky-collage-2020-04-13T154651.451.jpg


மூளையில் பழைய பழக்கம் தேங்குகிறதா?


மூளையில் இன்பிராலிம்பிக் கார்டெக்ஸ் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள செல்களில் மாற்றம் ஏற்படும்போது ஒருவர் பின்பற்றும் பழக்கம் மாறுகிறது. புதிய பழக்கத்தையும் கற்க வைக்க முடியும். இதுபற்றிய ஆராய்ச்சியை எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். எலி ஒன்றுக்கு நேராக சென்று இடதுபக்கம் திரும்பினால் சாக்லெட் பானம் இருப்பதை தெரிய வைத்தனர். அதற்கு இந்த பழக்கம் தொடர்ச்சியாக பழகியதும், பானத்தில் நச்சைக் கலந்தனர். ஆனாலும் கூட எலி இடது பக்கம் திரும்பி பானத்திற்கு செல்வது நிற்கவி்ல்லை. ஆனால் பானத்தை குடிக்கவில்லை. இப்போது இன்பிராலிம்பிக் கார்டெக்ஸில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் எலி, இடதுபக்கம் திரும்பாமல் யோசித்தது. வலது பக்கம் தொடங்கியது. மீண்டும் செல்களில் மாற்றம் செய்தபோது வலது பக்கம் திரும்பிய பழக்கம் மறைந்து மீண்டும் இடதுபக்கம் திரும்பியது. பழைய பழக்கம் வலுவாக செல்களில் பதிந்திருப்பது இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.


குறிப்பிட்ட பழக்கத்தை செய்து அதனை கைவிடுவது எளிதானது. இதற்கு பல காரணங்கள் உண்டு. பழக்கங்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடாது. எனவே மனம் சோரலாம். நாம் ஒரு விஷயத்தின் பலாபலனை நினைக்காமல் எப்போதும் போல செய்வது மன உறுதி தேவை. அது காலப்போக்கில் அனைவருக்கும் இருப்பதில்லை. இதனால்தான் ஒரு நல்லப்ழக்கத்தை கைவிட்டுவிட்டால் அதனை பின்தொடர முடியவில்லை.


bbc

கருத்துகள்